Published:Updated:

இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்!

திருப்பூர் கொள்ளை பரபரப்பு

இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்!

திருப்பூர் கொள்ளை பரபரப்பு

Published:Updated:
##~##

திருப்பூர் கொள்ளைக்கும் தீர்வு கிடைத் துள்ளது!

இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த மாதம் 21-ம் தேதி, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி மேற்கு வங்கம் சென்ற தமிழகப் போலீசுக்கு அதிர்ச்சி கரமான ஓர் அனுபவம். இன்ஃபார்மர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகப் போலீஸாரை, மேற்கு வங்கப் போலீஸ் கைது செய்துவிட, திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யான பாலகிருஷ்ணனே நேரில் சென்று, அவர்களை மீட்டுவந்து இருக்கிறார்.

என்னதான் நடந்தது மேற்கு வங்கத்தில்? திருப்பூர் போலீஸாரிடம் பேசினோம்.

''ஆலுக்காஸ் கொள்ளைச் சம்பவத்தில் ஈடு பட்ட கொள்ளையர் மூவரைக் கைதுசெய்ய உதவியதே

இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்!

இறந்து போன இன்ஃபார்மர்தான். கொள்ளையர் ஒருவரின் மைத்துனர்தான் அவர். அவர்தான் போலீஸாரை அழைத்துச் சென்று கொள்ளையர்கள் பதுங்கி இருந்த இடத்தைக் காண்பித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மூன்று கொள்ளையர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள ஐந்து கொள்ளையரைக் கைது செய்ய முயற்சித்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்களை முற்றுகை இட்டார்கள். அப்போது ஏற் பட்ட மோதலில் அந்த இன்ஃபார்மர் தப்பி ஓடினார். அப்படித் தப்பி ஓடும்போது, சாக்கடையில் விழுந்து இறந்து விட்டார்.  

மறுநாள், கைது செய்யப்பட்ட மூவ ருடன் போலீஸார் ரயில் நிலையம் வந்தபோது, அங்கு மேற்குவங்க போலீஸார் வந்தனர். 'நீங்கள் துரத்திச் சென்றபோது ஒருவர் இறந்து விட்டார். இறந்தவரின் உறவினர்கள், தமிழக போலீஸார்தான் கொன்று விட்டனர் என்று கூறுகிறார்கள். அதனால் எங்க ளுடன் வாருங்கள்... உங்களை வேறு ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைக்கிறோம்’ என்று ஏமாற்றி அழைத்துச் சென்று எங்களை கைது செய்து விட்டனர். அதன்பிறகு, திருப்பூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் நேரில் வந்து உண்மையை விளக்கிச் சொல்லித்தான் எங்களை மீட்க முடிந்தது.

இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்!
இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்!

இந்த விவகாரத்தில் மேற்கு வங்க போலீஸார் ஆரம்பத்தில் இருந்தே தமிழக போலீஸுக்கு சரிவர ஒத்துழைப்பு தரவில்லை. அங்கு உணவும் சரி இல்லாததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நாங்கள், மிகவும் சிரமப்பட்டே மூவரையும் கைது செய்தோம். மீதம் உள்ள ஐந்து பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நேரத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது.

வங்கதேசத்தில் இருந்து அகதியாக மேற்கு வங்காளம், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு வருபவர் கள், அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் சிலர் உதவியுடன் இந்திய குடிமகன் என்று வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை வாங்கிக் கொள்கின்றனர். அவர்கள்தான் இதுபோன்ற கொள் ளைச் சம்பவங்களில் தைரியமாக ஈடுபடுகின் றனர். கிடைக்கும் நகைகளை வங்க தேசம் எடுத்துச் சென்று விற்று விடுகிறார்கள். அகதிகளாக வரும் வங்க தேசத்தினரை அந்தந்த மாநில போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தாலே போதும்'' என்றனர் வருத்தத்துடன்.

இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்!

திருப்பூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''எங்களது தீவிர விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஜார் கண்ட், ராதாநகர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளை அடிப்பதற்கு முன், அந்தப் பகுதியை சில நாட்கள் நோட்டம் விடுவார்கள். சாதக, பாதக அம்சங்களைத் தெரிந்து கொண்ட பிறகே கொள்ளை அடிப்பார்கள். திருப்பூர் கொள்ளையின் போதும் முதலில் கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள நகைக் கடைகளைத்தான் நோட்டமிட்டு உள்ளனர். அங்கு கொள்ளையடிக்க சாதகமான அம்சங்கள் இல்லாததால், திருப்பூரை நோக்கி கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள். திருப்பூர் ஆலுக்காஸ் ஜுவல்லரியின் பின்பக்கம் வெளிச்சம் இல்லை என்பதுதான் அவர்களுக்கு மிகவும் சாத கமாக அமைந்து விட்டது.

போலீஸார் தங்களை நெருங்குவதைத் தெரிந்து கொண்ட கொள்ளையர், மேற்கு வங்கத்தில் பதுங்கிக் கொண்டனர். அங்குதான் ஜியாவுல் ஷேக், ஹக்கிம் ஷேக், மீர்ராஜ் அலி ஆகிய மூவரை கைது செய்தோம். அவர்களை தமிழகம் அழைத்து வரும்போதுதான் தமிழக போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்தான் இப்போது விசாரணை தடைப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மீதியுள்ள ஐவரையும் கைது செய்வோம். நகைகளையும் மீட்போம்'' என்றார்.

இப்போது, திருப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் அனைவரின் விவரத் தையும் போலீஸார் தீவிரமாகத் திரட்டி வரு கிறார்கள். குறிப்பாக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்களை கவனமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

இனியாவது கொள்ளை நடக்காமல் இருக்குமா..?

               - ம.சபரி

     படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism