Published:Updated:

கைது செய்யப்பட்டவர் போலீஸ் அதிகாரியின் பினாமியா?

சிவகாசியை அலற வைத்த நில அபகரிப்பு வழக்கு

கைது செய்யப்பட்டவர் போலீஸ் அதிகாரியின் பினாமியா?

சிவகாசியை அலற வைத்த நில அபகரிப்பு வழக்கு

Published:Updated:
##~##
கைது செய்யப்பட்டவர் போலீஸ் அதிகாரியின் பினாமியா?

விருதுநகர் மாவட்​டத்தை அதிர வைத்து உள்ளது அந்தக் கைது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகாசிக்கு அருகே செவல்பட்டியில் இயங்கி வருகிறது பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி. இந்தக் கல்லூரியின் தாளாளர்களான சோலைச்சாமி, ராமதாஸ் மற்றும் மேலாளர் நெல்லை குமார் ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பாய்ந்து இருப்பது, ஏரியா மக்களை நம்பமுடியாத ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏனென்றால், இதுவரை விருதுநகர் மாவட்ட போலீஸ் துறையையே ஆட்டிப் படைத்தவராக  இந்த சோலைச்சாமியைச் சொல்கிறார்கள்.

சிவகாசி - வெம்பக்கோட்டை ரோட்டில் தனது அலுவலகத்தை ஒட்டியுள்ள 7.5 சென்ட் காலி இடத்தை, பட்டாசு வியாபாரி கதிரேசனிடம் இருந்து கடந்த 2005-ம் ஆண்டு, இரண்டு

கைது செய்யப்பட்டவர் போலீஸ் அதிகாரியின் பினாமியா?

ஆண்டுகள் குத்தகைக்கு வாங்​கினார் சோலைச்சாமி. இந்த விவ​காரம்தான் இப்போது வில்லங்கம் ஆகி, கைது வரை போய் இருக்கிறது.  புகார் கொடுத்​​திருக்கும் கதிரேசனைச் சந்தித்தோம்.

''குத்தகை காலம் முடிந்த பிறகு, அந்த இடத்தை தனக்கே விற்​பனை செய்ய வேண்டும் என்று சோலைச்சாமி கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், என்னுடைய நான்கு மகன்களில் சங்கரேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகிய இருவரிடம் மட்டும் ஆசைவார்த்தை கூறி, அவர்களிடம் கையெ ழுத்து வாங்கி கடந்த 2011-ம் ஆண்டு கிரையம் முடித்துக்​ கொண்டார். பிரிக்கப்படாத சொத்தைக் கிரையம் செய்தது செல்லாது என்று போலீஸில் புகார் செய்தேன். எனக்கு ஆதரவாக அப்போதைய சிவகாசி நகராட்சித் தலைவர் சஃபையர் ஞானசேகரன் களம் இறங்கினார். ஆனால், போலீஸில் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி என் மீதும் ஞானசேகரன் மற்றும் அவரது தொழிலாளர்கள் உட்பட 100 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் போடவைத்தார்.

சோலைச்சாமியின் பக்கத்து ஊரான அம்மன்பட்டியைச் சேர்ந்த ஏ.டி.ஜி.பி. ராதா கிருஷ்ணனுக்கும்

கைது செய்யப்பட்டவர் போலீஸ் அதிகாரியின் பினாமியா?

இவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அதைப் பயன்படுத்தி விருதுநகர் மாவட்ட போலீஸ் துறையில் தனிராஜாங்கமே நடத்தினார். அந்தப் போலீஸ் அதிகாரியின் பினாமியாகவே சோலைச்சாமி செயல்பட்டு வந்தார். அதனால் என் நிலத்தில் பிரச்னை செய்ய வேண்டாம் என்று  சில போலீஸ் அதிகாரிகளே என்னை மிரட்டினார்கள்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகாவது எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதனால், மதுரை எஸ்.பி. அஸ்ரா கர்க்கிடம் போய் புகார் கொடுத்தேன். அவர்தான் அதிரடி நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுத்து இருக்கிறார். என்னைப் போல, சோலைச்சாமியிடம் நிலம் கொடுத்து ஏமாந்த பலரும் இனி தைரியமாகப் புகார் கொடுக்க முன்வருவார்கள்'' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக லோக்கல் போலீஸிடம் பேசினோம். ''சோலைச்சாமியின் வீட்டில் எந்த விழா என்றாலும் அந்த உயர் அதிகாரி ஆஜர் ஆகிவிடுவார். அந்த அதிகாரியின் நிழல் போலத்தான்

கைது செய்யப்பட்டவர் போலீஸ் அதிகாரியின் பினாமியா?

சோலைச்சாமி செயல் பட்டார். அதனால், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என்று சோலைச்சாமி பல தவறுகள் செய்த போதும் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. யாராவது எதிர்த்துப் பேசினால் சஸ்பெண்ட் அல்லது டிரான்ஃபர் செய்துவிடுவார். அஸ்ரா கர்க்கின் அதிரடி நடவடிக்கையினால் விருதுநகர் மாவட்ட போலீஸ்காரர்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம்'' என்றார்.

எஸ்.பி. அஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''சிவகாசி இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் சோலைச்சாமி, போலீஸ் உயர் அதிகாரியின் பெயரைச் சொல்லி அங்கு ஏகப்பட்ட மோசடி வேலைகள் செய்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இப்போது கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் சோலைச்சாமி அவரது அண்ணன் ராமதாஸ், மேனேஜர் நெல்லை குமார் ஆகியோர் மீது நிலஅபகரிப்பு வழக்கு பதிவு செய்துள்ளோம். ராமதாஸ் கைது செய்யப்பட்டு விட்டார். சோலைச்சாமி மற்றும் நெல்லை குமார் ஆகிய இருவரும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒலிம்பிக் தியேட்டர் உட்பட சில சொத்துக்களை அடியாட்களை வைத்து மிரட்டியும், கட்டப்பஞ்சாயத்து செய்தும் வாங்கி இருப்பதாக சில புகார்கள் வந்து ள்ளன. இதுகுறித்து, தனியாக விசாரணை நடந்து வருகிறது. புகார் உண்மை என்றால் கண்டிப்பாக கடும் நட வடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ''சோலைச்சாமியும் நானும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால், அவர் என் குடும்ப நண்பர். அவர் பெரிய தொழிலதிபர். நான் போலீஸ் குடியிருப்பில் வாடகைக்கு குடியிருப்பவன். நிலைமை இப்படி இருக்க சோலைச்சாமி எப்படி என்னுடைய பினாமியாக இருக்க முடி யும்? நான் அவருக்காக எந்த அதிகார துஷ் பிரயோகமும் செய்தது இல்லை. எனது பெயரைச் சொல்லி சோலைச்சாமி மோசடி செய்திருந்தால், அதுபற்றி விசாரித்து கடுமை யான நடவடிக்கை எடுப்பேன்'' என்று சொன்னார்.

நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக சோலைச்சாமியின் வக்கீல் ரவீந்திரனிடம் பேசினோம். ''சோலைச்சாமி மீதான புகார் முழுக்க முழுக்க சிவில் வழக்கு. ஆனால், போலீஸார் நில அபகரிப்பு என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொத்தில் ஒரு பகுதியை கதிரேசனின் மகன்களிடம் விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், ஏமாற்றி இடத்தை வாங்கியுள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கதிரேசனின் மகன்கள் இரண்டு பேரும் விருப்பப்பட்டு தங்களது பங்கை சோலைச்சாமிக்கு விற்பனை செய்ததற்கான ஆவண ங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனால், இந்த வழக்கை சட்டரீதியாக சந்தித்து கண்டிப்பாக வெற்றி பெறுவோம்'' என்றார்.

காலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்தச் சம்பவம்!

- எம்.கார்த்தி,

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism