Published:Updated:

''அரசாங்கமே விவசாயத்தை அழிக்கலாமா?''

கொதிக்கும் காட்பாடி விவசாயிகள்

''அரசாங்கமே விவசாயத்தை அழிக்கலாமா?''

கொதிக்கும் காட்பாடி விவசாயிகள்

Published:Updated:
##~##
''அரசாங்கமே விவசாயத்தை அழிக்கலாமா?''

'எங்கள் நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து காப்பாற்று​வதற்காக போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) கோரிக்கை அனுப்பி இருந்தார்கள் வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காட்பாடி தொகுதியில் உள்ள குத்துரெட்டிதாங்கல், குருநாதபுரம், சி.என்.பட்டறை, வாணியங்காட்டூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த விவகாரத்துக்காக கடந்த 15-ம் தேதி, வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரைச் சிறைப்பிடித்திருக்கிறார்கள். போராட்டக் களத்தில் இருந்த சி.என்.பட்டறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜுவிடம் பேசினோம். ''காட்பாடி தொகுதியில் 50 சதவிகிதத்துக்கு மேல் விவசாய நிலங்கள்தான். காலம் காலமாக நாங்கள் விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறோம். இப்போது விவசாய நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மனைகளாக மாறி வருகின்றன. ஆனாலும் எங்க பகுதியில் மட்டும் நாங்க நிலத்தைக் கொடுக்காமல், தொடர்ந்து விவசாயம் செஞ்சிட்டு வர்றோம்.

''அரசாங்கமே விவசாயத்தை அழிக்கலாமா?''

முந்திரித் தோட்டம், கரும்புத் தோட்டம், பருப்பு வகைகளில் துவரம், பாசிப் பருப்பு, மற்றும் சோளம், வாழை, நெல், கனகாம்பரம், மல்லி, ரோஜா, செவ்வந்தி போன்றவற்றைப் பயிர் செய்கிறோம். வேலூர் மார்க்கெட் பகுதிகளுக்கு எங்க பகுதியில் இருந்துதான் அதிகப்படியாக விளை பொருட்கள் விற்பனைக்குப் போகுது.  சென்னைக்கும் அனுப்புகிறோம். விவசாயத்தை நம்பித்தான் எங்களது வாழ்வாதாரமே இருக்கிறது.

''அரசாங்கமே விவசாயத்தை அழிக்கலாமா?''

அதைக் கெடுக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த அரசு அதிகாரிகள், 'உங்களது பகுதியில் பவர் கிரிட் என்று சொல்லப்படும் மின் தொகுப்பு மையத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதற்​கான பணிகளை கூடிய சீக்கிரமே தொடங்க இருக்கிறோம். அதற்கு உங்களது விவசாய நிலங்களை நாங்கள் எடுத்துக்கொள்வோம். அதற்கு உண்டான

''அரசாங்கமே விவசாயத்தை அழிக்கலாமா?''

நஷ்டஈடைக் கொடுத்துவிடுவோம்’ என்று சொன்னார்கள். அப்போதே நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அப்போதைய அமைச்சரான துரைமுருகனிடம் எங்கள் பிரச்னையைச் சொன்னோம். 'கண்டிப்பா உங்க பிரச்னையை அரசின் கவனத்துக்குக் கொண்டுபோய், உங்களது விவசாய நிலத்தைக் காப்பாற்றித் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்குப் பிறகு அவரை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை.

மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாசத்துக்கு ஒரு தடவையாவது இது குறித்து மனு கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் எங்க பிரச்னையை யாரும் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. இப்போ அமைச்சராகி இருக்கும் எங்கள் பகுதியைச் சேர்ந்த டாக்டர் விஜய்யை சந்தித்தும் எங்க பிரச்னையைச் சொல்லிட்டோம். அவரிடம் இருந்தும் சாதகமான பதில் இல்லை. அதனால் எங்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் எல்லாம் ஒன்று திரண்டு, தொடர் போராட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டோம்.

''அரசாங்கமே விவசாயத்தை அழிக்கலாமா?''

போராட்டத்துக்கு பிறகு எங்கள் கிராமத்துக்கு வந்த வருவாய் அலுவலர் ஒருவர், 'போராட்டம் நடத்தும் அத்தனை பேரையும் சிறையில் தள்ளிவிடுவோம்’ என்று மிரட்டும் தொனியில் பேசினார். அதனால்தான் அவரை சிறைப்பிடித்தோம். விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கவேண்டிய அரசாங்கமே எங்களை அழிக்க நினைப்பது கொடுமையிலும் கொடுமை. அப்படி ஒரு காரியம் நிறைவேற நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுடைய விவசாய நிலத்தை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று அரசு உறுதி அளித்தால் மட்டுமே, எங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்வோம். மற்றபடி, எங்கள் உயிரே போனாலும் இந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்க முடியாது'' என்று கொந்தளித்தார்.

விவசாயிகளின் பிரச்னை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அஜய் யாதவ்விடம் பேசினோம். ''சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகளை நேரில் அழைத்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டேன். விரைவில் நானே அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட இருக்கிறேன். விவசாயிகளின் கோரிக்கையை நிச்சயமாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன். விவசாயிகளின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் அவர்களின் நலன் பாதிக்கும்படி நடந்துகொள்ள மாட்டோம்'' என்றார்.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்று மேடைக்கு மேடை பேசினால் மட்டும் போதாது. அதை நிரூபித்துக்காட்ட வேண்டிய தருணம் இது.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism