Published:Updated:

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?

திகுதிகு போராட்டம்

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?

திகுதிகு போராட்டம்

Published:Updated:
##~##
சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?

'மத்திய அரசின் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளை கொள்ளையாகப் பணம் பார்த்துவிட்டார்கள் அதிகாரிகள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) கொதித்துப்போய் தகவல் சொல்லி இருந்தனர், கல்வித் துறையின் சிறப்பு ஆசிரியர் சங்கத்தினர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் அனை வருக்கும் கல்வித் திட்டம் மூலம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் 16,549 பணி இடங்களை நிரப்பியது தமிழக அரசு. சிறப்பு ஆசிரி யர்கள் எனும் பெயரோடு தொகுப்பு ஊதியமாய் மாதம் 5,000 ரூபாய் சம்பளம் என அறிவிக்கப்பட்ட அந்தப் பணி நியமனத்தில்தான், முறைகேடு நடந்திருப்பதாகப் புகார். கல்வி அலுவலக முற்றுகை, ஆட்சியர் அலுவலக முற்றுகை, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரும் உடற்கல்வி ஆசிரியரு மான ராஜராஜன், ''மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தில், கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் நியமனம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி தொடர்பான பயிற்சி கொடுப்பதற்கான பணிதான் அது. இதற்கு பதிவு மூப்பு, கல்வித் தகுதி, முன்அனுபவம் ஆகிய மூன்றையும் அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?
சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்காணல் நடந்தது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் திட்ட அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் என நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார்கள். ஆனால் அரசு அறிவித்திருக்கும் விதிகளின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யவில்லை. ஒவ்வொரு பதவியையும் ஏலம் போட்டு  விட்டார்கள்.

1995-க்குப் பிறகு இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு அரசு வேலை தரவில்லை. அதனால், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற படிப்பைப் படித்தவர்கள் ஆங்காங்கே கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிடைக்கிற வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்போதுதான் அரசே மனசு வந்து எங்களுக்கு வேலை தர

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?

முன்வந்திருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி அதிகாரிகள் எங்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா? அதனால் இந்தப் பணி நியமனத்துக்குத் தடைபோட வேண்டி நீதிமன்றத்தை நாடப்போகிறோம்'' என்றார் சூடாக.

சங்கத்தின் செயலாளர் குழந்தைவேல், ''மத்திய அரசு 99 லட்ச ரூபாயை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியிருக்காங்க. இதை மாநில அரசுதான் செயல்படுத்தணும். 20 வருஷங்களுக்கு முன்னால், எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசை ஆசிரியர் இருந் தாங்க. இப்ப பெரும்பாலான இடங்களில் அந்த மாதிரி ஆசிரியர்களே இல்லை. அதனாலதான், இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துச்சு. திட்டத்தை நடைமுறைப்படுத்துற நேரத்துல இப்படிப் பணத்தை வாங்கிக்கிட்டு எங்க வயித்துல அடிக்கிறாங்க. இதன் மூலம் நிறைய ஆதாயம் பார்க்கப்பட்டு உள்ளது.  கேட்டால் யாரும் சரியான பதில் தருவது இல்லை. இந்தப் பணி நியமனத்தில் முறை கேடு

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?

இல்லைன்னா, எந்த அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செஞ்சாங்கன்னு அலுவலக நோட்டீஸ் போர்டுல லிஸ்ட்டை ஒட்ட வேண்டியதுதானே?'' என்று கேள்வி எழுப்பினார்.

சிறப்புக் கல்வி பயின்ற பானுப்ரியா, ''என்னோட அப்பாவும், அம்மாவும் இறந்துட்டாங்க. எனக்கு ஒரு தம்பியும் தங்கையும் இருக்காங்க. அவங்க இரண்டு பேரையும் படிக்கவைக்கணும். ஆதரவற்றோர் என்ற அடிப்படையிலாவது எனக்கு அந்த வேலை கிடைக்கும்னு ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருந்தேன். கடைசி வரை கஷ்டப்படணும்னு எழுதி இருக்கு போல. தெரியாத்தனமா உடற்கல்வி ஆசிரியைக்குப் படிச்சிட்டேன்' என்று ஆதங்கப்பட்டார்.

ஓவிய ஆசிரியையான பானுமதி, ''கடந்த டிசம்பரில் புதுக்கோட்டையில் நேர்காணல் நடந்தது. அதில் சீனியாரிட்டி வரிசையில் இல்லாமல் அனைவரையுமே அழைத்திருந்தனர். அப்படி

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் மெகா கொள்ளையா?

அழைக்கப்பட்டவர்களில் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்திருக்கிறது. மற்ற மாவட்டங்களிலாவது சிலருக்குப் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், இங்கு எந்தத் தகுதியில் வேலை கொடுக்கப்பட்டது என்பதே தெரியவில்லை'' என்று வேதனைப் பட்டார்.

இதை எதிர்த்து திருவண்ண £மலை, வேலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் போராட் டங்கள் வெடிக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுதாகர் தேவதாஸிடம் கேட்டோம். ''இதைப்பற்றி நான் இன்டர்வியூ எதுவும் கொடுக்கக் கூடாது'' என்று ஒதுங்கிக்கொண்டார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியிடம் இந்த விவ காரத்தை எடுத்துச் சொல்லி விளக்கம் கேட்டோம். ''அம்மாவின் ஆட்சியில் முறைகேடு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. அந்தந்த மாவட்டங்களில் நான்கு பேர் கொண்ட குழுவை கமிட்டியாக அறிவித்து, நேர்காணல் நடத்தி, தகுதியின் அடிப்படையில்தான் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறை சொல்லிப் போராட்டம் செய்பவர்கள், அரசியல் உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். பணி நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவே இல்லை'' என்றார் திட்ட வட்டமாக.

அப்படி என்றால், எந்த அடிப்படையில் தேர்வு நடைபெற்றது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன சிக்கல்?

- வீ.மாணிக்கவாசகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism