Published:Updated:

''தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்!''

குரல் கொடுக்கும் டெல்டா விவசாயிகள்

''தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்!''

குரல் கொடுக்கும் டெல்டா விவசாயிகள்

Published:Updated:
##~##
''தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்!''

'இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திடுதல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் செயல்படப்போவதாக, ஆட்சி அமைத்தபோது உறுதிஅளித்தது அ.தி.மு.க. அரசு. அது உண்மை என்றால், இப்போது உடனடியாகச் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணி, ஆறு மற்றும் வாய்க்கால்களை காலத்தே தூர் வார ஒப்புதல் அளிக்கவேண்டும்’ என்று ஒருமித்தக் குரலில் சொல் கிறார்கள் டெல்டா விவசாயிகள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் பாசனப் பரப்பில் சுமார் 20 சதவிகிதம் மட்டுமே பம்ப் செட்டுகளின் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 80 சதவிகிதப் பாசனம் மேட்டூர் தண்ணீரை நம்பித்தான் இருக்கிறது. அதனால், மேட்டூரில் இருந்து தண்ணீர் வரும் அத்தனை ஆறுகளையும், அதன் உபநதிகளையும், வாய்க்கால்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டியது அவசியம். பல்லாண்டுகளாகக் குடிமராமத்து என்ற பெயரில் விவசாயிகளே நேரடியாகச் செய்யும் இந்த வேலைகள், கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்யப்படுகிறது. அதில்தான் பிரச்னை!

''தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்!''

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் கீழ்வேளுர் தனபால், ''கல்லணைக்குக்

''தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்!''

கீழே 14 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு இருக்கிறது. இதற்கு நீர்அளிக்கும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் 22 ஆயிரம் கி.மீ நீளம் கொண்டவை. இது மொத்தத்தையும் முறையாகப் பராமரித்தால்தான், எந்தச் சிக்கலும் இல்லாமல் பாசனம் செய்ய முடியும். பராமரிப்பு முறையாக நடைபெற்றால்தான், கோடைக்காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவுத் தண்ணீரை, எல் லோருக்கும் பகிர்ந்து அளிக்க முடி யும். அதுபோலவே, வெள்ளக் காலங்களில் வரும் அதிக அளவுத் தண்ணீரைப் பாதுகாப்பாக கட லுக்கு அனுப்பவும் முடியும். நம் முன்னோர்கள் மிகுந்த முக் கியத்துவம் கொடுத்துவந்த நீர் மேலாண்மையை நாம் கண்டு கொள்ளாத காரணத்தால்தான், ஆண்டுதோறும் வெள்ள நிவாரணத்துக்கு மட்டுமே 1,000 கோடி ரூபாயை செலவுசெய்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் தூர் வாருவதற்கு ஒதுக்கும் நிதியைக் காலம் தாழ்த்தி ஒதுக்கி, அவசரக் கோல த்தில் பணிகளைச் செய்கிறார்கள். அதனால் கடமைக்காகத்தான் பணி நடக்கிறதே தவிர, பிர யோஜனம் இருப்பது இல்லை. அதனால், மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்துக்குள் பணியை முடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஏனெ ன்றால், வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும். ஜனவரி 28-ம் தேதி அணை மூடப்படும். ஆனாலும் கல்லணை, அணைக்கரை போன்ற இடங்களில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர், பிப்ரவரி கடைசி வரை பாசனத்துக்காகத் திறந்து விடப்படும். இடையில் இருக்கும் மார்ச் முதல் மே மாதம் வரை வாய்க்கால்கள் காய்ந்து இருக்கும். அப்போது தூர் வாரினால்தான் முழுமையான பலன் கிடைக்கும். ஆனால், ஏப்ரல் கடைசியில் அல்லது ஜூனில் தூர் வாரத் தொடங்குகிறார்கள். அந்தப் பணியையும் அறைகுறையாகச் செய்து எக்க ச்சக்கமாகச் சம்பாதித்து விடுகிறார்கள். அவர்கள் தூர்வாரியதைக் கணக்குப் பார்ப்பதற்குள், தண்ணீர் வந்துவிடும். அதனால் எல்லா இடங்களிலும் தூர்வாரிவிட்டதாகச் சொல்லி பில் வாங்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் முன்கூட்டியே நிதி ஒதுக்கி, தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்''என்றார்.

''தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்!''

''தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் சேர்த்து தூர் வாருவதற்கு 18 கோடி ரூபாய் தேவை என்று கடந்த டிசம்பர் மாதமே அதிகாரிகளால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மார்ச் மாதம் முடியப்போகிற இந்த நேரத்திலும் அதற்கானப் பணிகள் எதுவுமே தொடங்க வில்லை. கடந்த சில வருடங்களாக தாமதமாகப் பணிகளைச் செய்வதால்தான், வாய்க்கால்கள் எல்லாம் காட்டாமணக்கு, வெங்காயப்பூண்டு, ஆகாயத் தாமரை ஆகியவற்றால் தூர்ந்துபோய் கிடக்கின்றன. இதனால் தண்ணீர் பாய் வதும் சிரமம். வெள்ளக் காலங்களில் தண்ணீர் வடியாமல் கரைகளை உடைத்துக்கொண்டு விவசாய நிலங்களை வீணாக்குவதும் நடக்கிறது. ஆறுகளில் இருந்து கிளை வாய்க்கால்கள் பிரியும் இடங்கள் மேடாகி விட்டதால், அவற்றில் தண் ணீர் பாயாமல், பள்ளமான வாய்க்கால்களில் அதிகமாகச் செல்கிறது. ஆற்றில் உள்ள மதகுகள் எதுவும் பராமரிப்பு செய்யப்படவே இல்லை. இப்படி இருந்தால் விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படாது'' என்று கொதித்தார் டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பொதுப் பணித் துறையின் தஞ்சைக் கோட்டக் கண்காணிப்புப் பொறியாளர் அசோகனிடம் பேசினோம். ''இந்த ஆண்டு தூர் வாரும் பணி குறித்து விவசாயிகள் எந்த அச்சமும் கொள்ளத் தேவை இல்லை. அடுத்த வாரத்தில் ஜி.ஓ. தயாராகிவிடும். ஏப்ரல் முதல் வாரத்தில் பணிகள் துவங்கி மே வரையில் இரண்டு மாதங்கள் முழுமையாக நடக்கும். ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதற்குள் தூர் வாரும் பணிகள் சீராக, செம்மையாக, நேர்மையாக நடக்கும்'' என்று உத்தரவாதம் கொடுத்தார்.

சொன்னதையாவது செய்யட்டும் அரசு!

- கரு.முத்து

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism