Published:Updated:

பட்ஜெட்டுக்கு என்னுடைய மதிப்பெண் 0/100

கோவை மாநகராட்சி விறுவிறு

பட்ஜெட்டுக்கு என்னுடைய மதிப்பெண் 0/100

கோவை மாநகராட்சி விறுவிறு

Published:Updated:
##~##
பட்ஜெட்டுக்கு என்னுடைய மதிப்பெண் 0/100

பெருநகரமாக 100 வார்டுகளுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது கோவை மாநகராட்சி. அ.தி.மு.க. வசம் இருக்கும் இந்த மாநகராட்சியின் முதல் பட்ஜெட், எதிர்க் கட்சிகளிடம் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த பட்ஜெட் குறித்துப் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, ''யானையாட்டம் வளர்ந்து நிக்குற கோவை மாநகராட்சியோட தேவை ரொம்ப ரொம்பப் பெருசுங்க. ஆனா, இவங்க சோளப் பொரியைக்கூட கண்ணுல காட்டலை. புதுசா சேர்ந்திருக்கிற பகுதிகள் நலனுக்காக அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த உருப்படியான திட்டங்களையும் இவங்க குறிப்பிடலை. குடிநீர் வசதி தொடங்கி சுகாதாரம் வரைக்கும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாமே, இவங்க அதிகாரத்துக்கு வந்த பிறகு முடங்கிக்கிடக்குது. உதாரணத்துக்கு, சாலைகளோட நிலைமையை எடுத்துக்கோங்க. மாநகராட்சி

பட்ஜெட்டுக்கு என்னுடைய மதிப்பெண் 0/100

எல்லைக்குள் எந்த சாலையாவது உருப்படியா இருக்குதா? பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக மெயின் ரோடுகளையும், குறுக்குத் தெருக்களையும் தோண்டிப் போட்டு மாசக்கணக்காகுது. அதை எல்லாம் முடிக்கவே மாட்டேங்கிறாங்க.

லாலி ரோடு சிக்னல்ல இருந்து மருதமலை நோக்கிப் போற ரோடு ரொம்பவும் நெரிசலான பகுதி. இந்த சாலையில்கூட தோண்டப் பட்ட குழியும், கொட்டப்பட்ட மணலும் அப்படியே கிடக்குது. அதனால இந்தப் பக்கம் உசுரைக் கையில பிடிச்சுக்கிட்டுத்தான் போக வேண்டியிருக்கு. அதையும் மீறி தினமும் ஏதாவது சில விபத்துகளும் நடக்குது. தூசி அதிகமாப் பறக்குது, அதனால நிறையப் பேர் நுரையீரல் பிரச்னையால் துடிக்கிறாங்க. நான் ஆதாரம் இல்லாமப் பேசலைங்க. ஸ்கூலுக்குப் போற குழந்தைங்க ஆரம்பிச்சு பெரியவங்க வரைக்கும் பலர் சிகிச்சை எடுக்கிறதை என்னால காண்பிக்க முடியும். இந்த ஏரியாவைச் சேர்ந்த ஒரு பாப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. கறுப்பு நிறத்துல வாந்தி எடுத்ததைப் பார்த்து டாக்டர்களே அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. போக்குவரத்து மாசுதான் காரணம். மக்களுக்கு எதுவுமே உருப்படியான திட்டங்கள் இல்லாத இந்த பட்ஜெட்டுக்கு என்னுடைய மார்க் ஜீரோதான்.

பட்ஜெட்டுக்கு என்னுடைய மதிப்பெண் 0/100

இந்த பட்ஜெட்டைத் தயாரிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது அறிவைப் பயன்படுத்தி இருக்கணும். கோவைக்கு என்னென்ன தேவை, எதுக்கெல்லாம் நிதியைப் பயன்படுத்தணும், எங்கே அவசரத் தேவை இல்லைங்கிறதை மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து ஆலோசனை செஞ்சிருக்கணும். ஆனா, இப்போ பதவியில இருக்கிறவங்கதான் யாரையும் மதிக்க மாட்டேங்கிறாங்களே...

பட்ஜெட்டுக்கு என்னுடைய மதிப்பெண் 0/100

இன்னொரு அக்கிரமும் நடந்துச்சு. 110 பக்கங்கள் இருக்கிற பட்ஜெட் அறிக்கையை காலை யில் தாக்கல் பண்ணிட்டு, 'இது மீதான விவாதம் மதியம் நடத்தப்படும்’னு அறிவிக்கிறாங்க. ஏனுங்க... அத்தனை பக்கத்துலயும் என்ன சொல்லி இருக்காங்கன்னு படிச்சுப் பார்த்தால்தானே விவாதிக்க முடியும்? அதனாலதான் நாங்க, 'விவாதத்தை நாளைக்கு வைங்க’ன்னு மேயரிடம் கேட் டோம். ஆனா, இதைப் புரிஞ்சுக் கவே இல்லை, எங்களை மதிக்கவும் இல்லை. இதுதான் அ.தி.மு.க. கட்சி, நம்ம மக்கள் நலனுக்குக் கொடுக்கிற மரியாதை'' என்று பொரிந்து தள்ளினார்.

தி.மு.க. கவுன்சிலரான மீனா, ''பில்லூர் குடிநீர்த் திட்ட ரெண்டாவது ஸ்கீம் உள்ளிட்ட பல திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதுதான். ஆனா இதை எல்லாம், என்னமோ புதுசா இவங்களே கண்டுபிடிச்ச மாதிரி பெருமை பேசிக்கிறாங்க. இவங்க தலைவி பிறந்த நாளை முன்னிட்டு மரங்களை நட்டுவைச்சு, என்னமோ பசுமைப் புரட்சி உருவாக்கிற மாதிரி சொல்றாங்க. சாலை விரிவாக்கம், குழி தோண்டுறோம்னு பல காரணங்களைச் சொல்லி அநியாயத்துக்கு மரங்களை வெட்டுறதை நிறுத்தினாலே, ஊர் விளங்கிடும். குப்பை அள்ளுறதுல தொடங்கி தெரு நாய்களைக் கட்டுப்படுத்துறது வரைக்கும் இவங்க கொண்டுவந்திருக்கிற எந்தத் திட்டமும் உருப்படி கிடையாது. இவங்க சொன்னதை எல்லாம் கேட்டு வாய் மூடித் தலையாட்ட நாங்க ஒண்ணும் தத்தியான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கிடையாது. பட்ஜெட்டுக்கு எதிரான எங்களோட போராட்டம் தொடரும்'' என்கிறார் அழுத்தமாக.

மேயர் செ.ம.வேலுச்சாமியிடம் இந்த எதிர்ப்புகள் குறித்துப் பேசினோம். ''வரி இல்லாத, கட்டணச் சுமை இல்லாத மக்கள் நல பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டின் எந்த அம்சமும் மக்களை நோகடிக்காது. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோட எதிர்க் கட்சிகள் சொல்ற புகார்களைக் கவனிச்சு நேரத்தை வேஸ்ட் பண்றதைவிட, வளர்ச்சிப் பணிகளுக்கு உருப்படியா நேரத்தைச் செலவிடலாம் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து'' என்று சொன்னார்.

வாழ்க ஜனநாயகம்!

- எஸ்.ஷக்தி

படங்கள்: வி.ராஜேஷ்,   கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism