Published:Updated:

''வயிறுன்னு ஒண்ணு இருக்கே..''

மாட்டுத் தொழுவமான திருப்பூர் சாயப் பட்டறை

''வயிறுன்னு ஒண்ணு இருக்கே..''

மாட்டுத் தொழுவமான திருப்பூர் சாயப் பட்டறை

Published:Updated:
##~##
''வயிறுன்னு ஒண்ணு இருக்கே..''

'திருப்பூர் சாயப் பட்டறை பிரச்னை விரைவில் நீங்கிவிடும்’ என்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காத்துக்கிடக்க, சாயப் பட்டறை நடத்தி வந்த ஒருவர், அதை அப்படியே மாட்டுத் தொழுவமாக மாற்றி திருப்பூரை அதிர வைத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் பேரு சுப்ரமணிங்க. சாயப் பட்டறை பிரச்னை தீர்ந்துடும்னு ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்து... ஏமாந்து ஏமாந்துபோனதுதான் மிச்சம். அதனால என்னை நம்பி இருக்கும் ஏராளமான தொழிலாளர்களுக்காக ஏதா வது உடனடியாகச் செய்ய நினைச்சேன். வேற வழி இல்லாம சாயப் பட்டறையை மாட்டுத் தொழுவமா மாத்திட்டோம். மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டோம். என்கிட்ட வேலை செஞ்ச அத்தனை பேரும் இப்போ பால் கறக்கும் வேலை செய்றாங்க. வேற என்ன செய்ய முடியும் சொல்லுங்க? இப்போ எங்க எல்லோருக்கும் இந்த மாடுங்கதான் சாப்பாடு போ டுது'' என்று வேதனையோடு பேசினார்.

''வயிறுன்னு ஒண்ணு இருக்கே..''
''வயிறுன்னு ஒண்ணு இருக்கே..''

அங்கு வேலை செய்த தொழிலாளர்கள், ''மாட்டுப் பண்ணையில வேலை செய்றது மனசுக்கு சங்கடமாத்தான் இருக்கு. ஆனா, வயிறுன்னு ஒண்ணு இருக்கே. திருப்பூர்ல சாயப் பட்டறைக்கு நீதிமன்றம் தடை விதிச்சதும், இங்கிருந்து பலர் காலி பண்ணிட்டு வேற மாவட்டங்களுக்குப் போயிட்டாங்க. அங்கே நிலத்தடி நீர் மாசுபடாதா? திருப்பூருக்கு ஒரு சட்டம் மற்ற ஊர்களுக்கு ஒரு சட்டமா?'' என்று விவகாரம் எழுப்புகிறார்கள்.

''வயிறுன்னு ஒண்ணு இருக்கே..''

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரமணாவிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''சாயப் பட்டறைகளை இழுத்து மூட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. நாங்கள் அதில் கருத்து எதுவும் சொல்ல முடியாது. தமிழகத்தில் முறைகேடாக எங்கே சாயப் பட்டறைகள் நடந்தாலும், அதற்கு உட னடியாக சீல் வைப் பதோடு, இடித்துத் தள்ளவும் உத்தரவு போட்டிருக்கிறேன். திருப்பூரில் சாயப் பட்டறை மாட்டுத் தொழுவமாக மாறியது குறித்து என் கவனத்துக்கு வரவில்லை. விசாரிக்கிறேன். சாயப் பட்டறையில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறோம். கூடிய சீக்கிரமே நல்ல வழி அமைத்துக் கொடுப்போம். தொழிலாளர்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை'' என்றார்.

செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்றாலும், சாயப் பட்டறை மாட்டுத் தொழுவமாக மாறுவது மாபெரும் சோகம்தான்.

- ம.சபரி

படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism