Published:Updated:

ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?

ராசிபுரம் எச்சரிக்கை

ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?

ராசிபுரம் எச்சரிக்கை

Published:Updated:
##~##
ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?

'நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துல இருந்து பேசுறோம். நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பை வெச்சிக்கிட்டு மக்களை ஏமாத்துறாங்க... விசாரிங்க’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) அழைப்பு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புகார் சொல்லியிருந்த ராசிபுரத்தைச் சேர்ந்த புகழேந்தியை முதலில் சந்தித்தோம். ''சில மாதங்களுக்கு முன்பு 'நண்பர்கள் அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு விளம்பரம் வந்தது. '10,865 ரூபாய் கட்டி வேலைக்குச் சேர்ந்தால், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம். கல்வித் தகுதி, வயது வரம்பு எதுவும் தேவை இல்லை’ என்று இருந்தது. நானும் ஆசையுடன் அங்கே போனேன்.

வாரத்தில் மூன்று நாட்கள் ஃபீல்ட் வொர்க். கிராமம் கிராமமாகச் சென்று ஏழைக் குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்திக்க வேண்டும்.  'உங்கள் கிராமத்தில் தினமும் டியூஷன் எடுப்போம். ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கு மெடிக்கல் செக்கப் செய்வோம்.  ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித் தொகையாக 1,000 ரூபாய் கொடுப்போம். சினிமாவில் சேர ஆசைப்படுபவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருவோம்’ என்று சொல்லி அவர்களை அறக்கட்டளை உறுப்பினர் ஆக்க வேண்டும் என்றார்கள். உறுப்பினர் சந்தா ஒரு குழந்தைக்கு 365 ரூபாய். அதை உடனடியாக வசூல் செய்து அலுவலகத்தில் கட்ட வேண்டும். இதுதான் வேலை’ என்று அறக்கட்டளைத் தலைவரான கண்ணன் சொன்னார்.

ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?
ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?

உடனே நான், என்னோட மகள், எங்க சொந்தக்காரர் ஒருத்தர்னு மூணு பேரும் அவங்க சொன்ன பணத்தைக் கட்டி வேலைக்குச் சேர்ந்தோம்.  பல பெற்றோர்களிடம் பேசி 365 ரூபாய் வாங்கி, பணத்தை அறக்கட்டளையில் கட்டி வந்தோம். ஆனால் ஒரு இடத்தில்கூட டியூஷன் சென்டர் வைக்கவில்லை. மருத்துவப் பரிசோதனை நடக்கவில்லை. உதவித் தொகையும் கொடுக்க வில்லை. எங்களுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை. அதனால், வேற வழி இல்லாமல் நாங்க போலீஸுக்குப் போனோம். அங்கேயும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை'' என்றார் வேதனையோடு.

ஏமாற்றுகிறதா நண்பர்கள் அறக்கட்டளை?

நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் கண்ணனிடம் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டோம். ''எனக்கு வசதி இல்லாததால் ஹோட்டல்ல வேலை பார்த்துக்கிட்டே படிச்சேன். என்னோட நிலைமை வேற எந்தக் குழந்தைக்கும் வரக் கூடாதுன்னுதான் இந்த அறக்கட்டளையைத் தொடங்கினேன். அறக்கட்டளையில் வேலைக்குச் சேர டெபாசிட் பணம் வாங்கினேன். இன்னைக்கு எங்க அறக்கட்டளையில் 1,007 குழந்தைகள் இருக்காங்க. 100 பேருக்கும் மேல வேலை செய்றாங்க. சேவை மனப்பான்மை இல்லாத சிலர்தான் என் மீது புகார் சொல்லிட்டு இருக்காங்க. நாட்டுக்கு நல்லது செஞ்சாலே யாருக்கும் பிடிக்காது போல...'' என்று டென்ஷன் ஆனார்.

ராசிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டபோது, ''எங்களுக்கும் புகார் வந்தது. அந்த டிரஸ்ட் ஓனரோட செல்போன் ஆஃப் பண்ணியே இருக்குது. விசாரிச்சுட்டு இருக்கோம். கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்'' என்று சொன்னார்.

எப்போ?!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism