Published:Updated:

அச்சச்சோ மின் திருட்டு...!

ஜூ.வி. ஆக்ஷன் ரிப்போர்ட்

##~##
அச்சச்சோ மின் திருட்டு...!

மிழகமே மின்சாரம் இல்லாமல் இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவிக்கிறார்கள். காசு கொடுத்துக் கேட்டால்கூட கரன்ட் கொடுக்க முடியாமல் அரசாங்கம் திண்டாடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஏரியாவில் சர்வசாதாரணமாக மின்சாரத்தைத் திருடுகிறார்கள். நேரில் வந்தால் ஆதாரத்தோடு நிரூபிக்கிறோம்’ என்று நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) ஒரு தகவலைச் சொல்லி இருந்தார் திருவல்லிக்கேணி கல்லூரி மாணவர் ஒருவர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவரைத் தொடர்பு கொண்டோம். தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திரு வல்லிக்கேணி, பாரதி சாலை யில் உள்ள தீத்தாரப்பன் தெரு வுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

அச்சச்சோ மின் திருட்டு...!

''இந்தத் தெருவில் இருக்கும் பல கடைகளிலும் பெயருக்கு ஒரு மின்இணைப்பு வாங்கி வைச்சிருக்காங்க. ஆனா, கரன்ட் எங்கே இருந்து எடுக்குறாங்க பாருங்க... மின் இணைப்பைப் பழுது பார்க்கும் ஜங்ஷன் பாக்ஸில் இருந்து. இந்தத் தெருவில் இருக்கும் பல கடைக் காரர்களும் ஜங்ஷன் பாக்ஸில் இருந்து ஒயரைப் போட்டு திருட்டுத்தனமாக இணைப்பு இழுத்தி ருக்கிறார்கள். இந்தப் பகுதியில் ஆய்வுக்கு வரும் மின் சார வாரிய அதிகாரிகளுக்கு இது தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.

ஏதாவது கோயில் திருவிழா, அரசியல் கட்சி மீட்டிங் என்றால் மட்டும் முன்பு இப்படி திருட்டுத்தனமாக கரன்ட் எடுப்பாங்க. அதை யாரும் கண்டுக்கவும் மாட்டாங்க. ஆனால், இப்போது பகிரங்கமாக கடை களுக்கே திருட்டுத்தனமா கரன்ட் எடுக்கிறாங்க. அதிகாரிகளும் அலட்சியமா இருக்காங்க. இப்படி இருந்தா மின்வாரியம் ஏன் நஷ்டத்தில் இயங்காது?'' என்று கேட்டவர் நம்மை அடுத்து அழைத்துச் சென்ற இடம் ராயப்பேட்டை.

அங்குள்ள முத்தையா தெருவுக்குள் நுழைந்து பார்த்தோம். அங்கேயும் திருவல்லிக்கேணியில் பார்த்ததைப் போலவே சில கடைகளுக்கும், சில வீடுகளுக்கும் திருட்டு மின்சாரம் போய்க் கொண்டு இருந்தது. நாம் பார்த்த அத்தனை காட்சிகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

அச்சச்சோ மின் திருட்டு...!

புகைப்பட ஆதாரத்தோடு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சந்தித் தோம். புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்து போனவர், உடனே மின்சார வாரிய அதிகாரி ஒருவரை அழைத்து, படங்களைக் காட்டினார். அந்த அதிகாரியும் படங்களைப் பார்த்து விட்டு, ''இந்த மாதிரி ஜங்ஷன் பாக்ஸ்ல இருந்து வெளியில் ஒயர் தெரிவது போல நாம் எங்கேயும் இணைப்பு கொடுப்பது இல்லைங்க சார். அதனால இதுல ஏதோ தப்பு நடக்குது'' என்று அமைச்சரிடம் உறுதி படச் சொன்னார்.

நம்மிடம் பேசிய அமைச்சர், ''தமிழ்நாட்டுக்குத் தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று அம்மா எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார். நாங்களும் அதற்கு உறுதுணையாக இருந்து வருகிறோம். தேவையான அளவு மின்சாரம் கிடைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வரும் சமயத்தில் சமூக விரோதிகள் மின்சாரத்தைத் திருடுவது வேதனையாக இரு க்கிறது. இந்தப் பகுதிக்கு நானே  சென்று ஆய்வு செய்கிறேன். மின்சாரம் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கிறேன். அந்த ஏரியாவில் இருக்கும் அதி காரிகள், இதனைக் கண்டுகொள்ளாமல் என்ன செய்கிறார்கள் என்பதையும் விசாரிக்கிறேன்'' என்று உறுதி அளித்தார்.

அதன்படி, கடந்த 22.3.2012 அன்று பிரச் னைக்குரிய இடத்துக்கு வந்தார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். அங்கிருந்தபடியே இருந்தபடியே திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளான கிறிஸ்டோபர் மற்றும் ராஜேஷ் இருவரையும் அழைத்து, ஜங்ஷன் பாக்ஸில் ஒயர் வெளியே தெரிவதை சுட்டிக்காட்டினார். 'மின் திருட்டு தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், ஆபத்து இல்லாத வகையில் இணைப்புகளை மாற்றி அமைக்கவேண்டும்’ என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இரண்டு நாளில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்திருக்கிறார்கள்.

பார்க்கலாம்.

        - நா.சிபிச்சக்கரவர்த்தி

        படங்கள்: ப.சரவணகுமார்