Published:Updated:

''கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து!''

எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி

##~##
''கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து!''

கூடங்குளத்துக்குப் பச்சைக்கொடி காட்டி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்தநிலையில், 'கல்பாக்கம் அணு உலைகளின் பாதுகாப்பை உடனே உறுதி செய்யுங்கள். இல்லையெனில் கல்பாக்கம் அணு உலையை இழுத்து மூடுங்கள்'' என்று கொந் தளிக்கிறார் கல்பாக்கம் அணு உலைகளை எதிர் த்துப் போராடும் மருத்துவர் புகழேந்தி. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''புகுஷிமா விபத்து நடந்த பிறகுதான் சர்வதேச அணுசக்தி கழகம் அணு உலை களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படத் தொடங்கியது. அதன்பிறகுதான், அணு உலை பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். இயற்கை பேரிடர்களால் ஏற்படும் ஆபத்து குறித்து சர்வதேச அணுசக்தி கழகத்தினர் 27.05.2011 அன்று ஒரு வெளியீடு கொண்டு வந்தனர். அப்போது, எரிமலைகளால் அணு உலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... அதில் எவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேசினார்கள். அவர்கள்தான் இந்தியா அருகே ஒரே ஒரு எரிமலை இருக்கிறது எனக் குறிப்பிட்டு உள்ளார்கள்.

''கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து!''

அந்தக் கடல் எரிமலை, கல்பாக்கத்தில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 104 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இதை, எரிமலைகள் பற்றி ஆய்வு செய்யக்கூடிய 'குளோபல் வால்கனோ புரோகிராம்’ ஆதாரமாகக் காட்டுகிறது. இவர்கள்தான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு எரிமலைக்கும் ஒரு எண் கொடுப்பார்கள். கல்பாக்கத்துக்கு அருகே உள்ள எரிமலைக்கு கொடுத்த எண் 0305-01. இந்தக் கடல் எரிமலை 1757 ஜனவரி 27-ம் நாள் கடலில் வெடித்திருக்கிறது. இதை, பிரெஞ்ச் மாலுமி ஒருவர் நேரடியாகப் பார்த்திருக்கிறார். அதை தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

'கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலைகளும்’ என்ற தலைப்பில் அணுஉலை களால் கல்பாக்கத்துக்கு ஏற்படும் ஆபத்து பற்றி நானும் எனது நண்பர் மருத்துவர் ரமேஷ§ம் ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறோம். அந்தப் புத்தகத்தை முதல்வர் ஜெயலலிதா, கல்பாக்கம் பாமிணி திட்ட இயக்குனர், காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோருக்குக் கொடுத்தோம். ஆனால், இதுவரை நிர்வாகத் தரப்பில் இருந்தோ, அரசுத் தரப்பில் இருந்தோ எவ்வித பதிலும் வரவில்லை.

''கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து!''

பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் என்னைப் பேச அழைத்தார்கள். கல்பாக்கத்தில் எரிமலைகளால் ஏற்படும் ஆபத்து பற்றி அங்கே பேசினேன். நான் பேசி முடித்தபிறகு, 'நம் நாட்டு புவியியல் வல் லுனர்கள் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை’ என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்து விட்டார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு, 'இந்தியாவில் உள்ள வி.வி.சாஸ்திரி ஓ.என்.ஜி.சி-யில் உள்ள மிகப்பெரிய விஞ்ஞானி. அவரது தலைமை யிலான குழுவினர் 1981-ல் புதுச்சேரியில் கடலுக்கு அடியில் பெட்ரோல் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளும்போது பூமியில் துளை போட்டனர். அப்போது, எரிமலைக் கற்கள் வெளி வந்தது. அதை, வி.வி.சாஸ்திரி தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். அதுபோல், பிஜு லாங்கினோஸ் என்ற கேரள விஞ்ஞானி 2010-ல் கூடங்குளத்தில் உள்ள பூமியின் தடிமன் மிகவும் குறைவாக இருக்கிறது என்கிறார்’ என்று எடுத்துச் சொன்னேன்.

கடலுக்குக் கீழே இருக்கும் எரிமலைகள் பிதுங்கி மேலே வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. அணு உலைகள் இருக்கும் இடத்தில் பூமியின் காந்தத் தன்மையை அளவிட வேண்டும். பூமிக்குக் கீழே இருந்து வெப்பமயமான ஒரு

''கல்பாக்கத்துக்கு எரிமலை ஆபத்து!''

பொருள் மேலே பிதுங்கி வரும்போது, காந்தத்தன்மை குறைவாக இருக்கும். கல்பாக்கம் பகுதியில் இருந்து வேதாரண்யம் வரைக்கும் கடலுக்கு அடியில் 30 கி.மீ இருக்க வேண்டிய பூமியின் தடிமன் 6 கி.மீதான் இருக்கின்றது. மேக்மா என்ற எரிமலைக் குழம்பு 24 கி.மீ பிதுங்கி மேலே வந்து இருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார் சுப்பிரமணியன் என்ற ஆய்வாளர்.

2001 செப்டம்பர் 25-ம் தேதி கல்பாக்கத்தில் இருந்து 64 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5 ரிக்டர் அளவில் அது பதிவானது. கல்பாக்கம் கடலுக்கு அடியில் ஓர் நிலப்பிளவு இருக்கி றது. எம்.பி.ஏ. (மெய்யாறு பவானி ஆத்தூர்) நிலப்பிளவு என்று அதை அழைக்கின்றனர். இந்த நிலப்பிளவின் நீட்சியில்தான் எரி மலைகள் இருக்கின்றன. அந்த இடத்தில் நிலையற்ற தன்மை

இருப்பதால் எந்த நேரத்திலும் வெடிக்கலாம்.

சென்னையில் இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்கூட கூடங் குளத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அதைவிட பாதுகாப்பு குறைந்த கல்பாக்கம் அணு உலைகளைப் பற்றி யாரும் பேசுவது இல்லை. இங்கே இருக்கும் பழைய இரண்டு அணுஉலைகளில் தானாக குளிர்விக்கும் முறை கிடையாது. கடந்த இரண்டு வருடங்களில் கடல் மூன்று முறை உள்வாங்கி உள்ளது. இதனாலும் கல்பாக்கம் அணு உலைக்கு ஆபத்துதான்.

அதனால், சர்வதேச அணுசக்திக் கழகத்தின் பாதுகாப்பு அம் சங்களைக் கடைப்பிடியுங்கள்'' என்கிறார் புகழேந்தி.

பதில் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது!

- பா.ஜெயவேல்