Published:Updated:

வண்ணார் சமூகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

வேலூரில் விறுவிறு போராட்டம்

##~##
வண்ணார் சமூகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

மிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் தலைமைச் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பாக, கடந்த 19-ம் தேதி மாநிலம் தழுவிய கோரிக்கைப் பேரணியை வேலூரில் நடத்தினர். வண்ணார் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும், சமூகப் பாதுகாப்பு கோரியும் பேரணி நடத்தி, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அஜய் யாதவிடம் மனு கொடுத்தனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற வேளாண்மைப் பொறியா ளருமான சு.துரையிடம் பேசினோம். ''உத்தரப் பிரதேசம், பீகார், கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட 17 மாநிலங்களில், வண்ணார் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வைத்து இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்துள்ளனர். கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை தாலுக்கா மட்டும் இதற்கு விதிவிலக்கு. இதனால், அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல திட்டங்கள்

வண்ணார் சமூகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

எங்களுக்குக் கிடைக்கவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மட்டும் 79 இனங்கள் இருக்கின்றன. இதனால், அரசாங்க நிதிஉதவியில் தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் நாங்கள் பின்தள்ளப்பட்டு இருக்கிறோம்.

வன்னிய இன மக்களுக்கு என்று ஒரு தலைவர், கொங்கு வேளாளர்கள் இனத்துக்கு ஒரு தலைவர், தாழ்த்தப்பட்டோர் இன மக்களுக்கு என்று ஒரு தலைவர் என்று, நமது நாட்டில் இனத்துக்கு ஒரு தலைவர் இருக்கிறார்கள். ஆனால், எங்கள் இனத்துக்கு என்று குரல் கொடுக்க ஒரு தலைவர்கூட இல்லாதது மிகவும் வேதனைக்கு உரியது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 50,000 முதல் 80,000 பேர் வரை எங்கள் இன மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலில் எங்களது வாக்குகளை வாங்குவதற்கு அனைத்துக் கட்சிகளும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சலவைத் தொழில் செய்துவரும் வண்ணார் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது எங்களது தலையாயக் கடமைகளில் ஒன்று!’ என்று முழங்குவார்கள். இதுபோன்ற வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு எங்கள் மக்கள் அலுத்துப்போனதுதான் மிச்சம்.

வண்ணார் சமூகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆற்காடு வீராசாமி மூலமாக கருணாநிதியைச் சந்திக்க முயன்றோம்.

வண்ணார் சமூகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

அவரது வீட்டுக்கதவு வரைதான் செல்ல முடியும். இதுவரை அவரைப் பார்த்து மனு கொடுக்க முடியவில்லை. அங்கிருக்கும் அவரது பி.ஏ-விடம்தான் கொடுக்க முடிந்தது. இதுகூட பரவாயில்லை. ஜெயலலிதா இருக்கும் தெருவுக்குள்கூட எங்களால் நுழைய முடியவில்லை.

கடந்த 2001-ம் ஆண்டு தேர்தல் நேரம். நாங்கள் 50 பேர் அ.தி.மு.க அலு வலகத்துக்குச் சென்று எங்கள் இன மக் களில் ஒருவருக்கு தேர்தலில் ஸீட் கேட் டோம். கேலியாகச் சிரித்த நிர்வாகிகள், 'ஒரு தொகுதிக்கு 1,000 ஓட்டுகள் கூட உங்களுக்கு இல்லை. நீங்கள் எப்படி ஜெயிப்பீர்கள். போய் வேலையைப் பாருங்கள்!’ என்று உதாசீனப்படுத்தி எங்களை அனுப்பி விட்டனர். ஆனால், இதே இந்தியாவில் உள்ள பீகார் மாநி லத்தில் உணவுத்துறை மந்திரியாக உள்ள ஷாம் ரஜக் எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்தான். இதனால் எங்கள் இனமக்களுக்கு அவரால் ஓரளவு நன்மை செய்ய முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில்?

கல்வி நிலையங்களில் எங்களது இன மாணவன் ஒருவன் 95 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்து இருந்தால்கூட அவனை மதிக்காமல், தாழ்த்தப்பட்டோருக்கு சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் ஆதி திராவிடர் சமூகத்தைவிட ஒரு படி நாங்கள் தாழ்ந்துதான் இருக்கிறோம். சமூகப் பாதுகாப்பு, கல்வியில் முன்னுரிமை, தொழில் வளர்ச்சியில் உறுதுணை போன்றவற்றை நாங் கள் தடையில்லாமல் பெறுவதற்கு, தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடுதான் எங்களுக்கு ஏற்றதாக இருக்கும். மற்ற மாநி லங்களில் பின்பற்றும் நடைமுறையை, இனியாவது தமிழக அரசு ஏற்று செயல்படுத்த முன்வர வேண்டும். எங்களது வருங்கால சந்ததியாவது உருப்பட வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.

எங்களைப் போலவே நரிக்குறவர் இன மக்களும் மிகவும் பிற்படுத்தபட்டோர் பட்டியலில்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், வளர்ந்த சமூக த்தினருக்குப் போய்ச் சேர்கிறது. அதனால் அவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்'' என்று அடுத்த சமூகத்துக்கும் சேர்த்து குரல் கொடுத்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அஜய் யாதவ்விடம் பேசினோம். ''சம்பந்தப்பட்ட மக்களின் கோரிக்கையை நாங்கள் தலைமைச் செயலகத்துக்கு அனுப்புவோம்.  அரசு தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.

இவர்களின் குரல் அரசின் காதுகளுக்கு எட்டுமா?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்