Published:Updated:

'விபத்து' பணிமனை!

திகிலில் செங்கம் பணியாளர்கள்

##~##
'விபத்து' பணிமனை!

'பேருந்துகளால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுவதைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். ஆனால், செங்கத்தில் அரசுப் பேருந்துகளுக்கு சாலையில் செல் லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. அதைத் தடு க்க நடவடிக்கை எடுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதறி இருந்தார் ஒருவர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செங்கம் பணிமனையில் சில பணியாளர்களிடம் பேசினோம். ''எங்கள் பணிமனை புதுச்சேரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. 1996-ல் இருந்து ஒரு வாடகை வீட்டில்தான் பணிமனைக்கான அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கே பேருந்துகளை நிறுத்த இடம் இல்லாததால், சாலை ஓரத்தில்தான் நிறுத்தி வைக்கிறோம். இது, தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பேருந்துகள் மீது மோதி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எங்கள் டிப்போ வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலை மண்டலமாக மாறியதும் ஒன்பது பேருந்துகள்  நிறுத்திய இடத்தில் இப்போது 20 பேருந்துகள் நிறுத்த வேண்டி உள்ளது. இரவில் சாலை ஓரத்தில் பேருந்து களை நிறுத்தி வைத்திருப்பது தெரியாமல் விபத்து அடிக்கடி நடப்பதால், பழுதான பேருந்துகளை சாலையில் நிறுத்தி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பழுது நீக்க வேண்டி இருக் கிறது. இங்கே பணிமனை இல் லாத காரணத்தால் எல்லா பேருந்துகளும் டீசல் பிடிக்க திருவண்ணாமலைக்குத் தான் செல்கின்றன. இதனால் டீசலும் வீணாகிறது.

'விபத்து' பணிமனை!

10 நாட்களுக்கு முன்கூட ஒரு பேருந்து மீது டிராக்டர் மோதிவிட்டது. இந்த வழித்தடத்தில் செல் லும்

'விபத்து' பணிமனை!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மட்டுமன்றி கர் நாடக, புதுச்சேரி அரசுப் பேருந்துகளுக்குப் பழுது ஏற்பட்டாலும் நாங்கள்தான் சரிசெய்ய வேண்டி இருக்கிறது. மாதத்துக்கு சுமார் 60 பேருந்துகளுக்கு மேல் பழுது பார்க்கிறோம். மழைக்காலத்தில் சேற்றிலும் சகதியிலும் படுத்தபடி பழுது பார்க்க வேண்டி இருக்கிறது. தப்பித் தவறி 'ஜாக்கி’ சேற்றில் புதைந்து விட்டால் அவ்வளவுதான். பேருந்து அடியில் பழுது பார்த்து கொண்டிருக்கும் பணியாளரை வெளியே கொண்டு வருவதற்கு பாடாதபாடு பட வேண்டும்.

எங்களுக்கு என்று ஒரு டிப்போ இருந்தால் பேருந்துகளுக்கு டீசல் பிடிக்கும்

'விபத்து' பணிமனை!

வசதியும்,  பராமரிப்புப் பணி மேடையும், பணியாளர்களுக்கான ஓய்வு அறையும் கிடைத்துவிடும். பேருந்துகளை தினமும் கழுவவும் உதிரிப்பாகங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் முடியும். அடிக்கடி பொருட்கள் திருடு போவதும் தடுக்கப்படும். டிப்போவுக்கு சுமார் மூன்று ஏக்கர் நிலமே போதும். அதைக்கூட அதிகாரிகள் 15 ஆண்டுகளாகத் தேர்வு செய்து கொடுக்கவில்லை'' என்றனர் பயம் கலந்த ஆதங்கத்தோடு.

கவுன்சிலரும் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரு மான குமார், ''இந்த மாவட்டத்திலேயே செங்கம் பகுதிதான் எல்லாவற்றிலும் பின்தங்கி இருக்கிறது. இங்கே உருப்படியான பள்ளியோ, கல்லூரியோ, மருத்து வமனையோ இல்லை. இந்த டிப்போ விஷயமும் அப் படித்தான். தேசிய நெடுஞ்சாலையில் வாடகைக் கட்டடத்தில் அமைந்திருக்கும் டிப்போவில் மழைக் காலத்தில் பணியாளர்கள் பேருந்துகளைப் பழுது பார்க்கவே முடியாதபடி தவிக்கிறார்கள்.  இதைப் போக்க பக்கிரிப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கல்லுக்குட்டை என்ற இடத்தில் மூன்று ஏக்கர் நிலத்தை 2006-ம் வருடமே ஒதுக்கிக் கொடுத்தோம். அதை அதிகாரிகள் நீர்பிடிப்புப் பகுதி என்று காரணம் காட்டி நிராகரித்து விட்டனர். இன்னொரு இடத்தைத் தேர்வு செய்தோம். அதையும் நிராகரித்தனர். இப் போதைய பணிமனைக்கு அருகிலேயே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கான 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. அது மூடியேதான் கிடக்கிறது அந்த இடத்தையாவது கொடுக்கலாம்'' என்று வருந்தினார்.

'விபத்து' பணிமனை!

திருவண்ணாமலை மண்டலப் போக்குவரத்து பொதுமேலாளர் குமரேசனிடம் கேட்டோம். ''பணி மனையின் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்து வருகிறோம். இப்போது ஒரு இடத்தைத் தேர்வு செய்தி ருக்கிறார்கள். அந்த இடம் கிடைத்ததும் டிப்போ செயல்பட ஆரம்பித்துவிடும்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதியிடம், ''நெடுஞ்சாலையிலேயே ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் காலியாக இருப்பதாக சொல்கிறார்கள். அதை பணிமனையாகப் பயன் படுத்தலாமே?'' என்று கேட்டோம்.

''அது ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கான பட்டா இடம் என்பதால் அங்கே எதுவும் செய்ய முடியாது. தற்போது டிப்போவுக்கு ஏற்றமாதிரி கோலந்தாங்கலில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரமே அரசிடம் இருந்து முறையான உத்தரவு வந்ததும் டிப்போ செயல்படத் தொடங்கி விடும்'' என்றார்.

அதுதான் எப்போ?

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்