Published:Updated:

குடமுருட்டி சேகர் எங்கே?

திருச்சி போலீஸ் வேட்டை

##~##
குடமுருட்டி சேகர் எங்கே?

திருச்சி மாவட்ட தி.மு.க-வின் துணைச் செயலாளரான குடமுருட்டி சேகரை கடந்த ஒரு மாதமாகவே காணவில்லை என்பதுதான் ஏரியாவின் ஹாட்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகர மாக திருச்சி மாவட்டத்தில் வலம் வந்தவர் குட முருட்டி சேகர். ஆட்சி மாறியபின் காட்சியும் மாறி யது. சென்னைக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்த குட முருட்டி சேகரை வழிமறித்து, கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். பின்னர் அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகளோடு, குண்டர் சட்டமும் பாய்ந்தது. உயர் நீதிமன்றம் வரை சென்று குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்தார். ''அவரை மீண்டும் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்ய போலீஸார் முனைப்பு காட்டுகிறார்கள். இந்நிலையில், அவர் எங்கே போனார் என்பது அவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை. போலீஸ் தீவிர வேட்டை நடத்துவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகிகள்.

குடமுருட்டி சேகர் எங்கே?

சென்னைக் கல்லூரியில் படிக்கும் குட முருட்டியின் மகன் பாலாஜி மற்றும் குடமுருட்டியின் சகோதரர் கரிகாலன் ஆகியோரை போலீஸார் பிடித்து வைத்துக்கொண்டு, சேகரை போலீஸ் முன் ஆஜராகச் சொல்லி மிரட்டுவதாகவும் ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

இதுகுறித்து குடமுருட்டி சேகர் குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசினோம். ''ஏற்கெனவே போலீஸார் எங்களை படாதபாடு படுத்துகின்றனர். இதுகுறித்து நாங்கள் ஏதாவது பேசினால், அது குட முருட்டி சேகருக்குத்தான் பிரச்னை. அதனால் நாங் கள் எதுவும் பேசுவதாக இல்லை'' என்று சொல்லி ஒதுங்குகிறார்கள்.

குடமுருட்டி சேகரை கைதுசெய்ய ஸ்பெஷலாக நியமிக்கப்பட்டுள்ள

குடமுருட்டி சேகர் எங்கே?

காந்தி மார்க்கெட் இன்ஸ் பெக்டர் கண்ணதாசனை தொடர்புகொண்டு பேசினோம். ''சேகரை தேடி வருவது உண்மைதான். அவர் மகனிடமும் விசாரணை செய்தோம். படிப்பு கெடக்கூடாது என்பதால் அவரை மீண்டும் சென்னைக்கே அனுப்பிவிட்டோம்'' என்றார்.

இந்நிலையில் குடமுருட்டி சேகர் மனைவி கங்காதேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய் திருக்கிறார். அதில், 'ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா, எங்கள் கிராமத்தில் குறைவான வாக்குகளைப் பெற்றார். அதற்கு காரணம் குடமுருட்டி சேகர் என்று நினைத்து அவருக்குத் தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திலும் தாழ்த்தப்பட்டோர் நல ஆணை யத்திலும் புகார் கொடுத்து உள்ளேன். எனவே, போலீஸார் எங்கள் குடும்பத்தினரைத் தொல்லை செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரி இருக்கிறார்.  

மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன், 'குடமுருட்டி சேகர் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன? அதில் அவர் ஜாமீன் பெற்றுள்ளாரா? நிலுவையில் என்னென்ன வழக்குகள் உள்ளன?’ என்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறார்.

அடுத்த விசாரணை வரையில் குடமுருட்டி சேகர் தாக்குப் பிடிப்பாரா?

- 'ப்ரீத்தி’ கார்த்திக்