Published:Updated:

ஆசீக் மீரா என்னை மிரட்டுகிறார்

கொந்தளிக்கும் மரியம் பிச்சை மனைவி

##~##
ஆசீக் மீரா என்னை மிரட்டுகிறார்

றைந்த அ.தி.மு.க. அமைச்சர் மரியம் பிச்சையின் மூன்றாம் மனைவியான கஸ்தூரி(எ)ஆமினாபிக்கும் அமைச்சரின் முதல் மனைவியின் மகனான ஆசீக் மீராவுக்கும் இடையிலான பிரச்னை உச்சகட்டத்தைத் தொட்டு உள்ளது. ஆசிக் மீரா மீது போலீஸ் கமிஷனரிடம் கஸ்தூரி புகார் மனு கொடுத்துள்ளார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து அ.தி.மு.க.வினரிடம்  பேசினோம். ''மரியம் பிச்சை இறந்ததை அடுத்து இடைத்தேர்தலில் தனக்கு ஸீட் கிடைக்கும் என்று கஸ்தூரி எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை. அடுத்து உள்ளாட்சி தேர்தலில் ஸீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால்,

ஆசீக் மீரா என்னை மிரட்டுகிறார்

மரியம்பிச்சையின் முதல் மனைவியின் மகன் ஆசிக் மீராவுக்கு ஸீட் கிடைத்து, அவர் துணை மேயர் ஆகிவிட்டார். இதுவரை அவர்களுக்குள் இருந்த குடும்பப் பிரச்னை, இப்போது  அரசியல் பிரச்னை ஆகிவிட்டது.

ஆசிக் மீரா தன்னை மிரட்டுவதாக சில மாதங்களுக்கு முன்பு முதல்வருக்கு புகார் மனு அனுப்பினார் கஸ்தூரி. அதன்பிறகு, பிரச்னை கொஞ்சம் அடங்கிக்கிடந்தது.  தொடர்ந்து, திருவானைக்

ஆசீக் மீரா என்னை மிரட்டுகிறார்

காவலில் முதல்வர் கலந்துகொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கஸ்தூரி கலந்து கொண்டார்.  பிறகு, சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வரை கஸ்தூரி நேரில் சென்று சந்தித்ததாகவும் சொல்கிறார்கள். இந்தநிலையில்தான் கடந்த 19-ம் தேதி, போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவை நேரில் சந்தித்து, ஆசிக் மீரா தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்துள்ளார்...'' என்றார்கள்.

இதுகுறித்து, கஸ்தூரியிடமே பேசினோம். ''கடந்த 92-ம் ஆண்டில் இருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன். சிறிது காலம் வட்டச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளேன். கிட்டத்தட்ட

ஆசீக் மீரா என்னை மிரட்டுகிறார்

24 ஆண்டு காலம் சாருக்காகவே (மரியம் பிச்சை) வாழ்ந்தேன். சாரின் மறைவுக்குப் பிறகு வாரிசு சான்றிதழ் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், ஆசிக் மீரா அவரது பதவியைப் பயன்படுத்தி, எனக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கவிடாமல் செய்துவிட்டார். அதனால், நான் நீதிமன்றத்துக்குச் சென்று ஆணை வாங்கிவிட்டேன். இன்னும் இரண்டொரு நாட்களில் சான்றிதழ் எனக்குக் கிடைத்துவிடும்.

என்னைக் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று அடிக்கடி இரவு நேரங்களில் செல்போனில் மிரட்டல் விடுக்கிறார். பல நாட்கள் நானும் பொறுத்துப் பார்த்தேன். ஒருகட்டத்தில் அவரது தொல்லை தாங்க முடியவில்லை. அதனால்தான், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். கமிஷனர் நடவடிக்கை எடுப்பார் என்றே நம்புகிறேன்...'' என்றார்.

ஆசிக் மீராவிடம் பேசினோம். ''மக்கள் பணியாற்றவே எனக்கு நேரம் போதவில்லை. அம்மா ஆட்சியில் யாரும் எவ்வித முறைகேடான செயல்களிலும் ஈடுபட முடியாது. அவர் வாரிசு சான்றிதழ் பெற நீதிமன்றத்தை நாடி யிருக்கிறார். அதில் நான் எப்படி தலையிட முடியும்? தன்னுடைய சுய லாபத்துக்காகவும் எனக்கு எதிரானவர்களின் தூண்டுதலாலும் கஸ்தூரி இப்படிச் செய்கிறார்...'' என்றார்.

எல்லாம் 'பதவி’ படுத்தும் பாடுதான்.

- ப்ரீத்தி கார்த்திக்