Published:Updated:

ஈரோட்டில் சிக்கிய 'பாலியல்' பாதிரியார்!

திடீர் வேகம் எடுக்கும் அமெரிக்க வழக்கு

##~##
ஈரோட்டில் சிக்கிய 'பாலியல்' பாதிரியார்!

ர்வதேச போலீஸாரால் தேடப்பட்டுவந்த பாதிரியார் ஜெயபால், ஈரோட்டில் கைது செய்யப் பட்ட விவகாரம் தேவாலய வட்டாரத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யார் இந்த ஜெயபால்?

57 வயதான ஜெயபாலுக்கு சொந்த ஊர் அரியலூர். ஜெயபால் என்ற ஜோசப் பழனிவேல் என்பதுதான் இவரது முழுப்பெயர். இவர், கடந்த 2004-ம் ஆண்டு வரை ஊட்டியில் உள்ள ஒரு டயோசிசனில் பணிபுரிந்து வந்தார். அதே ஆண்டில் அமெரிக்கா சென்றவர் மினசோட்டா மாகாணத்தில் உள்ள சில தேவாலயங்களில் பணி செய்தார். அப்போது, ஒரு 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ரூஸோ கவுண்டி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் பதிவானது. ஏகமாக பரபரப்பு ஏற்பட்டதும் கடந்த 2005-ல் ஜோசப் பழனிவேல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து விட்டார்.

ஈரோட்டில் சிக்கிய 'பாலியல்' பாதிரியார்!

சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டு இருந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடீர் வேகம் எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக 14.4.2010 தேதியிட்ட ஜூ.வி-யில், 'அமெரிக்கா தேடும் தமிழகப் பாதிரியார்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ஆனாலும், ஜோசப் பழனிவேல் எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையே தொடர்ந்தது.

ஈரோட்டில் சிக்கிய 'பாலியல்' பாதிரியார்!

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சிமிட்டஹள்ளி தேவா லயத்தில், அவரைக் கைது செய்திருக்கிறது ஈரோடு போலீஸ்.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''பாதிரியார் இங்கு இருப்பதாக டெல்லி போலீஸில் இருந்து மாவட்டக் காவல் துறை அலுவலகத்துக்குத் தகவல் வந்தது. அதை நாங்கள் விசாரித்து, பாதிரியார் இங்கு இருப்பதை உறுதி செய்தோம். அவரின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, கைது செய்து விட்டோம். அவரைக் கைது செய்ய வந் துள்ளோம் என்று சொன்னவுடன், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எங்களுடன் அமைதியாக வந்து விட்டார். நாங்கள் விசாரித்த வகையில் அவர் இங்கு எந்தத் தவறும் செய்யவில்லை. இந்தத் தேவாலயத்தில் உள்ள பாதிரியார்கள் அனைவருக்கும் நல்ல நண் பராக அறிமுகம் ஆகியுள்ளார். நாங்கள் அவரை டெல்லி போலீஸிடம் ஒப்படைத்து விட்டோம்'' என்று நடந்ததை ஒப்பித்தனர்.

பாதிரியார் ஜோசப் பழனிவேல் தரப்பில் பேசினோம். ''தப்புத்தண்டா பண்ணியவர் என்று கோர்ட் சொல்லும்வரை அவர் நிரபராதிதான். வேண்டுமென்றே பொய்ப் புகார்களை உருவாக்கி மீடியா மூலமாக ஜோசப்பின் பெயரைக் கெடு க்கிறார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களில் இப்படியரு விஷக்கலாசாரம் பரவி வரு கிறது. அதாவது, பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி பிளாக்மெயில்

ஈரோட்டில் சிக்கிய 'பாலியல்' பாதிரியார்!

செய்து, பணம் பறிக்க எந்த ஒரு நிலைக்கும் போவார்கள். இவர் விஷ யத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சொல்லப்படும் பெண்ணின் அம்மாவும், வழக்கறிஞரும் சேர்ந்து சுமார் ஒரு லட்சம் டாலர்கள் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்தார்கள்.

ஜோசப் பழனிவேல் அமெரிக்காவில் இருந்த கால த்தில் ஒரு பாதிரியாராக, அவரது கடமையைச் செய் தார். செமினார் நடத்துவது பிரார்த்தனைகளுக்கான ஏற்பாடுகள் செய்வது போன்ற பணிகளில் இருந்த காரணத்தால், பல இளையவர்களுடன் பழக வேண்டிய சூழல் இருந்தது. இதை வைத்து இப்படி எல்லாம் விவகாரம் வெடிக்கும் என்று அவர் கற் பனையிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. அவர்கள் சொல்லி இருப்பது எல்லாமே ஆதாரமற்ற புகார்கள். கூடிய சீக்கிரமே இந்தப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவந்து, இறைப்பணியில் முழுமையாகத் தன்னை இணைத்துக்கொள்வார்'' என்று, நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்.

ஜோசப் பழனிவேலுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் பேசிய போது, ''பாதிரியார் அமெரிக்காவில் பணியில் சேர்ந்தபோது, புகார் கொடுத்த பெண்ணும் அங்கே பணிப் பெண்ணாக வந்து சேர்ந்திருக்கிறார். பாதிரியார் ஒரு வருடம் கழித்து தன் தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்று இந்தியா வந்து விடுகிறார். அவர் இந்தியா வந்த பிறகுதான் அந்தப் பெண் பாதிரியார் மீது பாலியல் புகார் கொடுக்கிறார். சர்வதேச போலீஸ் பாதிரியாருக்கு மூன்று முறை சம்மன் அனுப்பி இருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்ததால் அவருக்கு சம்மன் கிடைக்கவில்லை. கண்டிப்பாக இந்தப் பொய் வழக்கில் இருந்து அவரை மீட்டு எடுப்போம்'' என்று சொன்னார்.

பாதிரியார் ஜெயபாலை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும் முடிவில் இருக்கிறதாம் டெல்லி போலீஸ். அங்கே நியாயம்தான் ஜெயிக்கும் என்றே நம்புவோம்.

- எஸ்.ஷக்தி,  ம.சபரி