Published:Updated:

''என் உயிருக்கு ஆபத்து!''

அலறும் பஞ்சாயத்துத் தலைவி

##~##
''என் உயிருக்கு ஆபத்து!''

'நான் கோட்டமேட்டுப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் சாந்தி பேசுறேன். ஓமலூர் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு, பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். நான் எங்கே போனாலும் என்னை பின்தொடர்ந்து வர்றாங்க. எனக்கோ என் குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதுக்குக் காரணம் தமிழரசுதான்...’ - பதைபதைப்பான குரலில் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பேசி இருந்தார் சாந்தி. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவரைச் சந்தித்தோம். ''எங்க வீட்டுக்காரர் தங்கராஜ் 13 வருடங் களாக ஓமலூர் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான தமிழரசு கிட்ட உதவியாளரா வேலை பார்த்தார். அவர் கிளைச்செயலாளராக இருந்து, மாவ ட்ட இளைஞர் அணி தலைவர் வரைக்கும் கட்சியில படிப்படியாக

''என் உயிருக்கு ஆபத்து!''

வளர்ந்தார். சொசைட்டி தேர்தலுக்குப் பிறகு, எங்க வீட்டுக்காரர் செய்ற ரியல் எஸ்டேட் தொழிலில் பங்கு வேணும்னு தமிழரசு கேட்டார். அதுக்கு என் வீட்டுக்காரர் மறுத்துட்டார்.

இவர் எம்.எல்.ஏ-வா இருந்தப்ப பல கோடி சம்பாதிச்சு இருக்கார். அதுல எங்களுக்கு ஏதாவது பங்கு கொடுத்தாரா...? ஆனா, நாங்க கஷ்டப்பட்டு உழைக்கிற தொழிலில் மட்டும் பங்கு கேட்டால் என்ன நியாயம்? இந்தப் பிரச்னைக்கு அப்புறம் தமிழரசுவிடம் என் வீட்டுக்காரர் வேலைக்குப் போறது இல்லை. போன சட்டசபைத் தேர்தல்ல ஓமலூரில் போட்டியிட எங்க சார்பா 10 பேருக்கு பணம் கட்டினோம். ஆனா, மருத்துவர் ராமதாஸ் அய்யா என் கணவரைக் கூப்பிட்டு, 'இந்த முறை தமிழரசு நிக்கட்டும். நீங்க ஆதரவு

''என் உயிருக்கு ஆபத்து!''

கொடுக்கணும்’னு கேட் டுக்கிட்டார். நாங்களும் கட்சித் தலைமைக்குக்

கட்டுப்பட்டு தமிழரசுக்காக நேரம் காலம் பார்க்காம கடுமையா உழைச்சோம். ஆனாலும், தமிழரசு தோல்வி அடைஞ்சிட்டார்.

அதுக்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. சார்பில் கோட்டமேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு என் பெயரை வன்னியர் சமுதாய முன் னேற்ற சங்கம் பரிந்துரை செஞ்சது. ஆனா, கட்சித் தலைமைகிட்ட இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி எங்களுக்கு எதிரா மதி பாலகிருஷ்ணன் என்பவரை தமிழரசு நிறுத்தினார். அதையும் மீறி நான் சுயேச்சையாக நின்னு 1,000 ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றேன். உடனே  அன்புமணியை சந்திச்சு, கடைசி வரை பா.ம.க-வில்தான் இருப்போம்னு சொல்லி, தொடர்ந்து கட்சியில இருக்கோம்.  

ஆனாலும், தமிழரசு அடியாட்கள் மூலம் தினமும் எங்களை மிரட்டுகிறார். 'பஞ்சாயத்துத் தலைவர்

''என் உயிருக்கு ஆபத்து!''

பதவியை நீயா ராஜினாமா செஞ்சுட்டுப் போயிடு. இல்லைன்னா, உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’னு மிரட்டுகிறார்.  ஆபாச வார்த்தைகளில் திட்டுகிறார். நான் எங்கே போனாலும், நாலைஞ்சு பேர் என்னை பின்தொடர்ந்து வர்றாங்க. எனக்கு பயமா இருக்கு. எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற் பட்டால் அதுக்கு தமிழரசுதான் காரணம்.  

இந்தப் பகுதியில இவரைத் தாண்டி யாரும் கட்சித் தலைமையிடம் பேசக் கூடாது; இவருக்கு அடிமையாகவே இருக்கணும்னு தமிழரசு நினைக் கிறார். இவர் கொடுக்கிற தொல்லைகளை எல்லாம் பொறுத்துக்க முடியாம, கட்சிக்காரங்க பலரும் கட்சியில் இருந்து விலகிட்டே இருக்காங்க. இந்தப் பகுதியில் பா.ம.க-வை அழிக்கிறதுக்கு என்னென்ன செய்யணுமோ அதை எல்லாம் தமிழரசு கச்சிதமாச் செய்கிறார். வேல்முருகன் கட்சியில் இருக்கும் காவேரி அண்ணன் எங்களை அவரது கட்சிக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கார். ஆனாலும், நாங்க போகல. உயிர் உள்ளவரை பா.ம.க-வில்தான்

இருப்போம். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் புகார் கொடுத்து இருக்கிறோம்'' என்றார் ஆவேசமாக!

இதுகுறித்து, தமிழரசுவிடம் கேட்டோம். ''அந்தப் பொம்பளையை நான் பார்த்தே ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும். அவங்க புருஷன் தங்கராஜ் என்கிட்ட உதவியாளராக இருந்தார். அவர் என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சில விஷயங்களைச் செய்தார். அதனால அவரை வேலையை விட்டு அனுப்பிட்டேன். அதுக்கு அப்புறம் அவர் அந்தப் பகுதியில சட்டவிரோதமா கல்குவாரி நடத்துறதா வெங்கடாசலம் என்பவர் கலெக்டரிடம் புகார் கொடுத்து இருக்கார். இதை ஸ்பாட்டுக்கு போய் விசாரிச்சு இருக்கார் ஆர்.டி.ஓ. இதை எல்லாம் மறைக்க என் மேல வீண்பழி போடு றாங்க. என்கிட்ட வேலை பார்த்தவர்கிட்ட நான் பங்கு கேட்பேனா? கணவன், மனைவி ரெண்டு பேரும் மோசடிப் பேர்வழிங்க...'' என்றார் சூடாக!

இனி, போலீஸ்தான் தீர்ப்பு சொல்லவேண்டும்!

       - வீ.கே.ரமேஷ்

  படங்கள்: எம்.விஜயகுமார்