Published:Updated:

'அது' இருந்தாதானே இன்னொருத்தியை நெனைக்கச் சொல்லும்!''

'நறுக்' அமுதவல்லி

##~##
'அது' இருந்தாதானே இன்னொருத்தியை நெனைக்கச் சொல்லும்!''

ள்ளக் காதலனை விஷம் வைத்துக் கொன்ற பெண்கள் உண்டு. அடி த்துக் கொன்றவர்கள் பற்றியும் படித்து இரு க்கிறோம். லேட்டஸ்டாக, கள்ளக் காதலனின் ஆண் உறுப்பையே அறுக்கத் துணிந்திருக்கிறார் ஒரு பெண்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருப்பத்தூர் அருகே கருவேப்பி லாம்பட்டியைச் சேர்ந்தவர் அமுத வல்லி. திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாய். இவ ரது கணவர் சுப்பிரமணியன் வெளி நாட்டில் வேலை பார்த்தபோது அமுதவல்லி கட் டட வேலைக்குச் சென்றார். வேலைக்குப் போன இடத்தில் திருப்புவனத்தைச் சேர்ந்த  மாரி

யுடன் (இவர் திருமணம் ஆகாதவர்!) நெருக்கம் ஏற்பட்டது. இது, மாரியின் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் கண்டித்தும் இவர்கள் திருந்தவில்லை. வெளிநாட்டில்

'அது' இருந்தாதானே இன்னொருத்தியை நெனைக்கச் சொல்லும்!''

இருந்து திரும்பி வந்த அமுதவல்லியின் கணவருக்கு இதுதெரிந்து  மனைவியை விட்டுப் பிரிந்துவிட்டார். இந்த நிலை யில், மாரியின் பெற்றோர் அவருக்கு பெண் பார்க்க ஆரம்பித்ததுதான், 'நறுக்’ வரை போய்விட்டது.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியிடம் பேசினோம். ''எங்க சாதிக்காரப் பொண்ணுங்கிறதால அமுதவல்லிக்கு பணஉதவி செஞ்சேன். அதுவே எங்களுக்குள்ள பழக்கமாயிடுச்சு. அமுதவல்லி ஆடம்பரமா வாழ நெனச்சா. அது எனக்குப் பிடிக்கல. வெளிநாட்டில் இருந்த புருஷன் ஒரு வருஷத்துக்கு முந்தி ஊருக்குத் திரும்பியதுமே, நான் அமுதாகிட்ட இருந்து விலகி ட்டேன். ஆனா, அவ புருஷனோட வாழாம அவ ளோட ஆத்தா வீட்டுக்கு வந்துட்டா.

எனக்குப் பொண்ணு பார்க்கிறதா யாரோ சொல்லிட்டாங்கன்னு போன 19-ம் தேதி ராத்திரி 9 மணிக்கு எங்க வீட்டுக்கு கையில விஷத்தோட வந்து

'அது' இருந்தாதானே இன்னொருத்தியை நெனைக்கச் சொல்லும்!''

நின்னவ, 'உங்க மகனை நான் விரும்புறேன். அவன் என்னை ஏத்துக்காட்டி இப்பவே விஷத்தைக் குடிச்சிடுவேன்’னு எங்க அம்மாவை மிரட்டுனா. ஒரு வழியா எல்லோரும் அவளுக்கு அறிவுரை சொல்லி, சமாதானப்படுத்துனாங்க. அப்புறம், 'உங்க மகன என்னைய ஊருல கொண்டாந்து விடச் சொல்லுங்க’ன்னு கேட்டா. அவளை நம்பிக் கிளம்பினேங்க. ராத்திரி 2 மணிக்கு கருவேப்பி லாம்பட்டிக்குப் போய்ச் சேர்ந்தோம். 'இப்பப் போனா ஆத்தா திட்டும்; கருக்கல்ல போகலாம்’னு சொல்லி ஊருக்கு வெளியே நெல் அடிக்கிற களத்துல என்னைய உக்கார வெச்சா.      

களைப்புல களத்து மேட்டுலயே நான் கண் அசந்துட்டேன். திடீர்னு யாரோ என்னோட உறுப்பை அறுத்துட்டாங்க. ரத்தம் பொலபொலன்னு ஊத்துது. அந்தக் கொடுமையை அமுதவல்லிதான் செஞ்சான்னு எனக்குத் தெரியும். ஆனா, அந்த நேரத்துல அவகிட்ட வம்பு பண்ண வேண்டாம்னு, 'எதுவோ கடிச்சிருச்சு. உடனே என்னைய ஆஸ்பத்திரியில சேர்த்துரு’னு சொன்னேன். அவளும் ஆம்புலன்ஸை வரவெச்சு, மதுரை ஜி.ஹெச்-சுல கொண்டாந்து சேத்துட்டா. ஆரம்பத்துல, 'எனக்கு எதுவும் தெரியாது’ன்னு சொன்னவ, போலீஸ்கிட்ட, 'என்னைய டார்ச்சர் பண்ணுனான்; அதனால அறுத்துட்டேன். இப்ப என்னா அதுக்குன்னு கேட்குறா...'' என்று கதறினார்.

மருத்துவர்களோ, ''இன்னும் அரை மணி நேரம் லேட்டாக வந்து இருந்தா பெரும் சிக்கலாக மாறியிருக்கும். அறுந்து தொங்கியதை சேர்த்து வெச்சு தையல் போட்டுள்ளோம்'' என்றார்கள்.

அமுதவல்லியிடம் பேசினோம். ''ஊரு உலகத்துக்குத் தெரியுறாப்புல நாங்க புருஷன் பொண்டாட்டியாத்தான் வாழ்ந்தோம். அவர் எனக்கு தாலிகூட கட்டி இருக்காரப்பு. 'கடைசி வரைக்கும் நீதான்’னு சொன்னதை நம்பித்தான் புருஷனையே உதறிட்டு வந்தேன்.

இப்படி நடுத்தெருவுல கொண்டாந்து நிறுத்திட்டு இன்னொருத்திக்கு தாலி கட்டப் பாக்குறானேன்னு ஆத்திரத்துல அவங்க வீட்டுக்குப் போய் நியாயம் கேட்டேன். 'எனக்கு ஒரு வழியைச் சொல்லு... இல்லாட்டி, உன் கையாலயே கொன்னு போட்டுட்டுப் போயிரு’ன்னு சொன்னேன். அதுல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்துச்சு. கோபத்துல என்ன செய்யுறதுன்னு தெரியல. கூடை பின்னி விக்கிறதால எப்பவும் என் கையில பிளேடு இருக்கும். அதை எடுத்து நறுக்குன்னு அறுத்து விட்டுட்டேன். அது இருந்தாத்தானே இன்னொரு பொம்பளய நெனைக்கச் சொல்லும்? இனி எனக்கு எவனும் தேவையில்லை. என் புள்ளைங்களுக்காக வாழப் போறேன்'' என்றார் வீராப்புடன்.

போலீஸாரோ, ''விசாரித்ததில், ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்'' என்கிறார்கள் அசால்ட்டாக.

ஆயுதம் தூக்கிட்டாங்க அலர்ட்டா இருங்க!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,

எஸ்.சாய் தர்மராஜ்