Published:Updated:

கிளாஸ்மேட் துணையுடன் கொலை, கொள்ளை!

தேவராஜன் க்ரைம் ரிப்போர்ட்

##~##
கிளாஸ்மேட் துணையுடன் கொலை, கொள்ளை!

மூன்று ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பின்புறம், கிழக்கு ராஜவீதி, ஏகாம்பரநாதர் கோயிலின் அருகே உள்ள லாலாத் தோட்டம் ஆகிய இடங்களில் ஐந்து பேரின் உடல்களைக் காவல் துறை மீட்டபோது, அதிர்ந்து நின்றனர் மக்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தக் கொலைகளில் பிரதானக் குற்றவாளியாக தேவ் என்ற தேவராஜனைக் கைது செய்தது காவல் துறை. அடுத்து பெயிலில் வந்தவர் திடீரென 'காணவில்லை’ பட்டியலுக்குப் போய்விட்டார். போலீஸ் தேடு தேடு என்று தேடியும் பலன் பூஜ்யம்தான். இந்த நிலையில் திருவாரூர் மாவட் டத்தில் கடந்த சில மாதங்களாக நகைக் கடைகள் மற்றும் வீடுகளில் தொடர்ந்து நடந்த பல கொள்ளை சம்பவங்களுக்குக் காரணமான ஒரு கும்பலை போலீஸ் கைது செய்தது. அந்தக் கும்பலின் தலைவர் வேறு யாரும் அல்ல, 'காணாமல் போன’ தேவராஜனேதான். அவருடன் கைது செய்யப்பட்ட காதர், மணிகண்டன், தாமோதரன் மூவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட நால்வர் அணி இப்போது திருச்சி மத்தியச் சிறையில்.

கிளாஸ்மேட் துணையுடன் கொலை, கொள்ளை!

தேவராஜ் பிடிபட்ட விதத்தை விவரித்தார் காவல் துறை அதிகாரி ஒருவர். ''தேவராஜன்தான் கேங் லீடர். ஆரம்பத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 10 பேரை வைத்துக்கொண்டு சின்னச்

கிளாஸ்மேட் துணையுடன் கொலை, கொள்ளை!

சின்னத் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தான். ஆள் பலே கில்லாடி. தனக்கென தனி பாணி எதையும் வைத்துக்கொள்ள மாட்டான். ஒரு திருட்டு வழக்குக்காக வேலூர் காவல் துறையினர் தேவராஜனை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான், 'தன்னை பற்றிய ரகசியங்களை போலீஸில் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கூட்டாளிகளான வீரா, அபி, தரணி, மஞ்சுநாதன், குமரன் ஆகியோரைக் கொலை செய்து காஞ்சியின் முக்கியப் பகுதிகளில் புதைத்தேன்’ என்று ஒப்புக்கொண்டான்.

பின்னர், திருவள்ளுரில் பிரபல கோயிலில் சிலையைத் திருடி தப்பிக்கும் போது அவனது டிரைவர் மற்றும் கூட்டாளிகள் தப்பித்துவிட்டனர். அப்போது தேவராஜனும் அவனது கூட்டாளி தாமோதரனும் பொதுமக்களி டம் சிக்கிக்கொண்டனர். வழக்கு பாய்ந்தது. ஜாமீனில் வெளிவந்தவன் விழுப்புரத்துக்கு தன் ஜாகையை மாற்றிக்கொண்டான். அங்கு சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டுவந்தான். எப்போதும் நான்கைந்து பேருடன் காரில் வலம் வரும் தேவராஜன், டிக்கியில் ஆயுதங்களுடன்தான் இருப்பான். அங்கும் தன்னைப் பற்றி போலீஸ் விசாரிப்பதை அறிந்து, விழுப்புரத்தில் இருந்தும் எஸ்கேப் ஆகி திருவாரூரில் கடை விரித்தான். அங்கு நடந்த கொள்ளை காரணமாக சிக்கி இருக்கிறான். அவனுடன் சிக்கிய அனைவருமே இவனோடு 11-வது வரை படித்த கிளாஸ்மேட்கள். இவர்கள் துணையுடன் தான் கொலை, கொள்ளை என்று தூள் கிளப்பி இருக்கிறான்'' என்று சொன்னார்.

''காஞ்சிபுரம் வழக்குகளில் ஆஜராகாததால் நாங்கள் அவனைத் தேடிவந்தோம். இந்த நிலை யில்தான் மூன்று மாதங்கள் முன்னர், அவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டது திருவாரூர் காவல் துறை. அவனுடைய புகைப்படங்களோடு அவனைப் பற்றிய முழு தகவலையும் அனுப்பி வைத்தோம். அவன் இப்போது போலீஸில் சிக்கி இருந்தாலும், அவனது கூட்டாளிகள் பலர் அரசியல்வாதிகளின் ஆதரவோடு இன்னமும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அமைதிக்கும் ஆன்மிகத்துக்கும் பேர் போன காஞ்சி இன்று சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறது'' என்றார் பெயர் சொல்ல விரும்பாத உளவுத் துறை அதிகாரி ஒருவர்.

திருவாரூரில் தேவராஜனைக் கைது செய்த நன்னிலம் டி.எஸ்.பி. ஜெய்சுப்ரமணியன், ''நன்னிலத்தில் தொடர்ந்து அடகுக் கடைகளில் திருட்டு நடந்ததை விசாரணை செய்தபோது, தேவராஜன் பெயர் தெரிய வந்தது. அவன்தான் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் காரியங்களைச் செய்துவருவதை அறிந்தோம். காஞ்சிபுரம் காவல்துறை மூலம் இவனைப் பற்றி தகவல்களைப் பெற்று தீவிரமாகத் தேடிவந்தோம். 17-ம் தேதி குடவாசல் பக்கத்தில் ஓகை என்ற இடத்தில் சிறப்புப்படை போலீஸ், வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சீறிக்கொண்டு வந்த இரண்டு சுமோ வண்டிகளை மறித்து சோதனை நடத்தி, அதில் இருந்தவர்களை காஞ்சிபுரம் காவல் துறை தந்த தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்த பின்புதான் அதில் இருந்தவர்கள் தேவராஜனும் அவனுடைய கோஷ்டியினரும் என்பதை அறிந்தோம்.

பொதுவாக ஒரு குற்றவாளி, ஒரே டைப்பான குற்றத்தைத்தான் திரும்பத் திரும்பச் செய்வான். ஆனால் இவன் ஆல்ரவுண்டர். வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பது, கார்-பைக் திருட்டு, கூலிப்படை என்று சகல கெட்ட விஷயங்களையும் செய்திருக்கிறான். நன்னிலத்தில் மட்டும் இவன் மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்து வழக்கு பதிந்திருக்கிறோம். கூலிப் படையாகவும் இவன் செயல் பட்டதால், மற்ற மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் இவனுக்குத் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம்'' என்றார் மிடுக்காக.

சிறைச்சாலைகள் குற்றவாளி களைத் திருத்தும் இடம் என்பது போய், எல்லா குற்றவாளிகளும் சங்கமிக்கும் பயிற்சிப் பட்டறையாக மாறிவிட்டதுதான் துரதிர்ஷ்டம். இனியாவது தேவராஜன் தப்பிக்காமல் இருக்கட்டும்!

- எஸ்.கிருபாகரன்