Published:Updated:

''அப்பாவிகளைக் கடத்தியதா காவல் துறை?''

காஞ்சிபுரம் நள்ளிரவு கொடூரம்

##~##
''அப்பாவிகளைக் கடத்தியதா காவல் துறை?''

ள் கடத்தல் விவகாரம் என்றால் உடனே போலீஸ் உதவியைத் தேடிப்போவார் கள். ஆனால், அந்த போலீஸே ஆள் கடத்தலில் ஈடுபட்டால்...? 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது கீழ்கல்வாய் கிராமம். இங்கு, குறவர் இனத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர், கூடை முடையும் தொழில் செய்கிறார்கள். இவர்களில் வெங்கடேசன் என்பவர் சில வாரங்களுக்கு முன், விபத்தில் சிக்கி இறந்தார். அவரது 16-ம் நாள் துக்க காரியத்துக்காக குறவர் சமூகத்தினர் ஒன்று கூடினர். திடீரென, துக்க வீட்டுக்கு வந்தவர்களில் 15 பேரை, மர்மக் கும்பல் ஒன்று நள்ளிரவில் வீடு புகுந்து கடத்திச் செல்ல... ஏரியாவில் ஏக பரபரப்பு!

சம்பவம் நடந்த மறுநாள், கீழ்கல்வாய் கிரா மத்துக்குச் சென்றோம். அன்பழகி என்பவர், ''எங்க சமூகத்துல யாராவது இறந்துட்டா 16-ம் நாள் துக்கத்தை 'கசப்புத்தலை’னு சொல்லி, ரொம்ப விசேஷமா கொண்டாடுவோம். உறவுக்காரங்க ஒண்ணுகூடி காசு வசூலிச்சு, துக்கம் நடந்த குடும்பத்துக்கு மூணு நாளைக்கு தடபுடலா விருந்து செஞ்சு போடுவோம். இப்படி செஞ்சா, செத்தவங்க ஆத்மா சாந்தி அடையும்ங்கறது எங்க நம்பிக்கை. அந்த விசேஷத்துக்காகத்தான் உறவுக்காரங்க 50 பேருக்கு மேல அன்னிக்கு கூடி இருந்தோம். மறுநாள் விசேஷத்துக்கு வேண்டிய வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு களைச்சுப்போய் தூங்கிட்டோம். நைட்டு 1 மணி இருக்கும். திடீர்னு, 'ஐயோ...’, 'அப்பா..’, 'ஏய் விடு’ன்னு வாசல்ல சத்தம். ஓடி வந்து பார்த்தா... நெடுநெடுன்னு உசரமான ஏழெட்டு ஆம்பளைங்க, வெளியில படுத்துக் கிட்டு இருந்த எங்க உறவுக்காரங்க வாயில துணி அடைச்சு வண்டியில ஏத்திக்கிட்டு இருந்தாங்க. வண்டியைத் தடுத்து நிறுத்த முயற்சி பண்ணினோம். எங்களை இடிச்சுத் தள்ளிட்டு வண்டியைக் கிளப் பிட்டாங்க'' என்று கண்ணீருடன் தகவல் சொன்னார். கடத்தப்பட்டவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் வெளியூர்க்காரர்கள்.

''அப்பாவிகளைக் கடத்தியதா காவல் துறை?''
''அப்பாவிகளைக் கடத்தியதா காவல் துறை?''

கடத்தல் குறித்து, அருகில் இருக்கும் திருப் போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நீதி கிடைக்காததால் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு போட்டனர். அதற்குப் பின்னரே, வேலூர் மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸார் பிக் பாக்கெட் வழக்கில் கைது செய்ததாகச் சொல்லி, 15 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.  

ஆற்காடு டவுன் எஸ்.ஐ. கிருஷ்ணனிடம் பேசி னோம். எடுத்த எடுப்பில் கடத்தல் குற்றச்சாட்டை மறுத்தவர், ''அத்தனை பேரும் 20-ல் இருந்து 25 வய துக்கு உட்பட்டவர்கள். வெறும் 10 போலீஸார் ஒரு குக்கிராமத்துக்குள் சென்று அவர்களை கடத்திக் கொண்டு வருவது சாத்தியப்படுமா? இவர்களின் தொழிலே நகைக்கடைகளில் கொள்ளை அடிப்பது, வீடு புகுந்து திருடுவது, பிக் பாக்கெட் அடிப்பதுதான். 20-ம் தேதி உறவினரின் காரியத்துக்குப் போற சாக் கில்

''அப்பாவிகளைக் கடத்தியதா காவல் துறை?''

வழக்கம்போல இரண்டு குழுவா பிரிந்து ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் பிக்பாக்கெட் அடித்தபோது ஆன் தி ஸ்பாட்டில் பிடிச்சோம். திருடுவதும்... மாட்டினால் உடனே வக்கீல்களை வைத்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடுவதும், கடத்திப் போய்விட்டதாக நாடகம் ஆடுவதும் இவர்களின் வழக்கம்'' என்றார் தடா லடியாக.

சம்பவம் நடந்த வீட்டருகே வசிக்கும் கமலக் கண்ணன், ''அன்னைக்கு ராத்திரி ஒரு மணி இருக்கும். 'அவசரத்துக்காக’ தோட்டத்துக்கு வந்தப்ப ஏதோ சலசலன்னு சத்தம். ரெண்டு பசங்களை வண்டிக்குள்ள வலுக்கட்டாயமா தள்ளிக்கிட்டு இருந்ததைப் பார்த்தேன். சத்தம் போடறதுக்குள்ள வண்டி விர்ருன்னு கிளம்பிடுச்சு. கடத்தப்பட்ட மத்தவங்களைப் பத்தி தெரியாது. ஆனா, எங்க ஊரைச் சேர்ந்த மோகன்,  பிரபு ரெண்டு பேரும் தங்கமானவங்க. எந்த வம்புதும்புக்கும் போகாத வங்க'' என்றார்.

சமூக அமைப்புகள் பலவும் காவல் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ள தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சண்முகம், ''பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை குறவர் இனத்தவரை குற்றவாளிகளாகவே பார்க்கிறது காவல்துறை. ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதைக் குறவர் சமூகத்தினர் மீது சுமத்தி, வழக்கை முடித்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள் ளனர். ஒருவரைக் கைது செய்வதற்கு முன் காவல் துறை என்னவிதமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என உச்ச நீதி மன்றம் தெளிவாக வரை யறுத்து உள்ளது. இந்த விஷயத்தில் அந்த விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மீது மட்டும் வழக்கு உள்ளது. அதையும் அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரை வைத்து நடத்தி வருகிறார். மற்றவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள். விஷயம் அறிந்து நாங்கள் உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்ட பின்னரே, அவர் கள் மீது பிக்பாக்கெட் வழ க்குப் போட்டு உள்ளே தள்ளி உள்ளனர். இந்த செயலுக்குக் காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை நாங்கள் ஓயப் போவது இல்லை'' என்றார் உறுதியாக.

மாமல்லபுரம் டி.எஸ்.பி. கணேசனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டோம். ''போலீஸ்காரர்கள்,  யாரையும் கடத்தவில்லை. விசாரணைக்காக அழை த்துப் போயிருக்கிறார்கள். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

யார் சொல்வது உண்மை என்பதை நீதிமன்றம் சொல்லட்டும்!

- எஸ்.கிருபாகரன்

படங்கள்: வீ.ஆனந்தஜோதி