Published:Updated:

எங்க ஏரியா உள்ளே வராதே..!

மிரட்டல் தி.மு.க... பதுங்கல் அ.தி.மு.க.

##~##
எங்க ஏரியா உள்ளே வராதே..!

'இது எங்க ஏரியா, உள்ளே வராதே...’ என்று தி.மு.க-வினர் வரிந்து கட்டி நிற்க... மிரண்டு ஒதுங்கி இருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சேலத்துக்கு பயணிகள் ரயில் இயக்கும் நிகழ்ச்சிக்கு மார்ச் 18 -ம் தேதி நாள் குறிக்கப்பட்டு இருந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி தலைமையில் விழா நடக்கும் என்று அறிவித்து இருந்தார்கள். காட்பாடித் தொகுதி எம்.எல்.ஏ-வான முன்னாள் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளர்கள் சும்மாவா இருப்பார்கள்? கொதித்து எழுந்து போர்க்கொடியை உயர்த்தி, நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்து விட்டார்கள். அதன்பிறகு நிகழ்ச்சியை

21 -ம் தேதிக்கு மாற்றி, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், துரைமுருகன் தலைமையில் சேலத்துக்கு ரயிலை ஓட விட்டிருக்கிறார்கள்.

எங்க ஏரியா உள்ளே வராதே..!

காட்பாடியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான வன்னியராஜா நம்மிடம் பேசினார். ''ரொம்பவும் சந்தோஷமா இருக்குதுங்க. அ.தி.மு.க-காரங்க தமிழ் நாட்டை ஆளலாம். ஆனா காட்பாடிக்கு எங்க அண்ணன் துரைமுருகன்தான் காட் ஃபாதர். சேலத்துக்கு ரயில் விடச்சொல்லி கோரிக்கை வைச்சதே எங்க அண்ணன்தான். யாரோ சுட்டு வச்ச இட்லியை, யாரோ சாப்பிடுற மாதிரி, நாங்க முயற்சி பண்ணிக் கொண்டுவந்த திட்டத்தை அவங்க எப்படித் தொடங்கி வைக்கலாம்? அதுவும் இல்லாம ஏதோ ஜெயலலிதா முயற்சி செஞ்சிதான் சேலத்துக்கு ரயில் விட்ட மாதிரி பெருமையா பேசிக்கிறாங்க. அதைத்தான் எங்களால் தாங்கிக்க முடியல.

துரைமுருகனைத் தாண்டி காட்பாடியில யாரும் எதுவும் செய்ய  முடியாது. போன வாரம் ரயில் துவக்க விழா அழைப்பிதழைப் பார்த்ததுமே எங்க எல்லோருக்கும் ஷாக். அதில் முதல் பெயரா அ.தி.மு.க. அமைச்சர் வி.எஸ்.விஜய், மேயர் கார்த்தியாயினி பெயரைப் போட்டு இருந்தாங்க. எங்க அண்ணன்

எங்க ஏரியா உள்ளே வராதே..!

துரைமுருகன் பெயரை கடைசி இடத்தில, போனாப் போகுதுன்னு போட்டு இருந்தாங்க. எங்க மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பெயரைப் போடவே இல்ல. இத்தனைக்கும் அவர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர். காட்பாடி பகுதி அரக்கோணம் நாடாளுமன்ற பகுதி யிலதான் வருகிறது. எதிர்கட்சியாக இருந்

எங்க ஏரியா உள்ளே வராதே..!

தால்கூட மரியாதை நிமித்தமாகக் கூப்பிடு வது எங்களது மரபு. ஆனா எங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேரைக்கூட அழைப்பிதழில் போடாம விட்டா, நாங்க சும்மா விட்டுருவோமா? ரயில்வே துறையில் பேசி, நிகழ்ச்சியை நிறுத்த வச்சிட்டோம். அப்புறமா எங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து புது அழைப்பிதழ் அடிச்சாங்க. அதுக்குப் பிறகுதான் நிகழ்ச்சியை நடத்த அனுமதிச்சோம். கடந்த 21-ம் தேதி எங்கள் மண்ணின் மைந்தன் அண்ணன் துரைமுருகன் தலைமையில் ஜெகத்ரட்சகன் கொடி அசைத்து சேலம் ரயிலைத் தொடங்கி வச்சிட்டார். ஆனா, அ.தி.மு.க-காரங்க யாருமே விழாவுக்கு வரல. அதுசரி, எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு வருவாங்க?'' என்றார்.

அமைச்சர் வி.எஸ்.விஜய், நலத்திட்டம் வழங்கும் விழாவில் பிஸியாக இருப்பதாகச் சொன்ன அவரது ஆதரவாளர்கள், ''அமைச்சருக்கு ஆயிரத்தெட்டு வேலை இருந்துக்கிட்டே இருக்குதுங்க. அந்த விழா நடந்த அன்று அவருக்கு சென்னையில் ஒரு முக்கிய மீட்டிங். அதனாலதான் விழாவுக்கு வரலை. மத்தபடி எந்தக் காரணமும் இல்லை. அழைப்பிதழ் அச்சடிக்கும் விஷயத்தில் எப்பவும் அமைச்சர் தலையிட மாட்டார். அது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விழா என்பதால், நீங்க அவங்ககிட்டத்தான் கேட்கணும்'' என்று சொன்னார்கள்.

தென்னக ரயில்வேயின், சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அலு வலர் பூபதியிடம் பேசினோம். ''நிர்வாகக் காரணங்களுக்காகத்தான் முதலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, தேதியை மாற்றி வைத்தோம். சில குழப்பங்களால் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் விடுபட்டு விட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமோ, அரசியல் தலையீடோ கிடையாது'' என்று சொன்னார்.

அ.தி.மு.க-வினரை அடக்கிவிட்டோம் என்று உடன்பிறப்புகள் துள்ளிக் கொண்டு இருக்க, ரத்தத்தின் ரத்தங்கள் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அதனால் அடுத்த ஆட்டம் விரைவிலே ஆரம்பமாகும் என்று எதிர்பார்க் கலாம்.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்