Published:Updated:

''இன்று போய் நாளை வா!''

ரத்தக்காட்டேரிக்குப் பெப்பே

##~##
''இன்று போய் நாளை வா!''

'ரத்தக்காட்டேரி பயத்தில் சந்தைகோடியூர் கிராமமே திகிலடித்துக் கிடக்கிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வரவே விரைந்தோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ளது சந்தைகோடியூர். நாம் சென்ற போது ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கதவிலும், வீடுகளின் சுவர்களிலும் சிவப்பு நிறத்தில், 'இன்று போய் நாளை வா’ என்று எழுதப்பட்டு இருந்தது.

ஒரு வீட்டின் கதவைத் தட்டினோம். மிகுந்த தயக்கத்துடன் எட்டிப்பார்த்த பெண்ணை சமாதானப்படுத்தி பேச்சு கொடுத்தோம். ''என் பேரு பார்வதி. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னாதான் உங்களுக்குப் புரியும். எங்க  பக்கத்து ஊருல ஒரு பையனை ரத்தக்காட்டேரி ஒன்று

''இன்று போய் நாளை வா!''

கழுத்தைப் பிடிச்சி கடிச் சிடுச்சி. அவன் ரத்தம் சொட்டச் சொட்ட ஓடி வந்தான். ஆஸ்பத்திரியில சேர்த்த பிறகும் பிரமை புடிச்ச மாதிரியே இருக்கானாம். அதனால அந்த ஊருல எல்லோர் வீட்டு வாசல்லேயும் ராத்திரி நெருப்பைக் கொளுத்தி வைக்கிறாங்க. ஏன்னா ரத்தக்காட்டேரிக்கு நெருப்பைப் பார்த்தா மட்டும்தான் பயமாம்.

அந்த ஊர் முழுவதும் நெருப்பு எரிஞ்சதால, ரத்தக்காட்டேரி எங்க ஊருப் பக்கம் திரும்பிடுச்சி. ஒரு நாள் ராத்திரி நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன். ஏதோ சத்தம் கேட்டதும் முழுச்சிப் பார்த்தேன். 'க்கூ.. க்கூ..’ன்னு ஒரு மாதிரியா சத்தம் கேட்டுச்சி. எழுந்து

''இன்று போய் நாளை வா!''

ஜன்னல் பக்கம் போய்ப் பார்த்தேன். எங்க வீட்டு வாசல்ல கறுப்புக் கலர்ல பயங்கரமா பெரிசா ஏதோ ஒண்ணு நின்னுட்டு இருந்துச்சி. எனக்கு அடி வயிறு எல்லாம் கலங்கிப் போச்சி. வீட்டுல இருந்த சாமி போட்டோவை கட்டிப் புடிச்சிகிட்டேன். அப்புறம்தான் அது ரத்தக்காட்டேரின்னு தெரிஞ்சது. அது பொம்பளைங்களை எதுவும் பண்ணாதாமே! நெசமா?'' என்று நம்மிடமே கேள்வியைக் கேட்டார்.

''எங்க பக்கத்து தெருவுல ஒரு வீட்டுக்கு வெளியில ரத்தக்காட்டேரி நின்னுட்டு இருந்திருக்கு. வீட்டுக் குள்ள இருந்தவுங்க, 'முனீஸ்வரா.. முனீஸ்வரா..’ன்னு சாமி பேரை சொல்லி கத்தினதும் ஓடிப் போயி டுச்சாம். அதனால நாங்க எல்லோரும் சேர்ந்து ரத்தக்காட்டேரியை ஏமாத்த ஒரு திட்டம் போட்டோம்.

எங்க திட்டப்படி ஒவ்வொரு வீட்டு கதவுலயும் விபூதி கலந்து ரத்தக் கலர்ல, 'இன்று போய் நாளை வா..’ன்னு எழுதி வைச்சோம். அப்போ இருந்து ரத்தக்காட்டேரி தினமும் ஊருக்குள் வரும். ஒவ்வொரு வீட்டுக்கா போய் எழுதி இருக்கிறதைப் படிக்கும். நாளைக்கு வரலாம்னு திரும்பிப் போயிடும். அன்னையில  இருந்து எந்தப் பிரச்னையும் இல்ல. அது கோபத்துல கத்துற சத்தம் மட்டும் கேட்கும். ரத்தக்காட்டேரி இப்படி தினமும் ஏமாந்து போறதால, சீக்கிரமா எங்க ஊரை காலி பண்ணிட்டுப் போயிடும்'' என்று அதிநம்பிக்கையுடன் சொல்லி கதவை சாத்திக் கொண்டார் பார்வதி.

''இன்று போய் நாளை வா!''

இன்னொரு வீட்டின் கதவைத் தட்டினோம். அந்த வீட்டில் இருந்தவர், ''எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வெளியில நின்னே கேளுங்க. வீட்டுக்குள்ள வரவேண்டாம்'' என்ற நிபந்தனையுடன் பேசினார். ''ரத்தக்காட்டேரி வந்ததுல இருந்து யாரைக் கண்டாலும் பயமா இருக்குதுங்க.  எந்த உருவத்துல வரும்னு யாருக்குத் தெரியும். பத்திரிகைகாரங்க மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ள வந்து என் கழுத்தைக் கடிச்சி ரத்தம் குடிச்சிட்டா என்ன பண்றது? ராத்திரி வீட்டுக்குள்ள சாம்பிராணி புகை போட்டுத்தான் படுக்குறோம். ஊருக்குள்ள எல்லோரும் நிம்மதியா தூங்கி மாசக் கணக்காகுதுங்க...'' என்று புலம்பினார்.

ரத்தக்காட்டேரியை படம் பிடிக்கலாம் என்று நாமும் அந்தக் கிராமத்தில் இரவு முழுக்க கொட்டக்கொட்ட விழித்துக் காத்திருந்தோம். ஊர் மக்கள் சொல்வது போன்று எந்த சத்தமும் வரவில்லை. எந்த உருவமும் நம் கண்களுக்குத் தென்படவில்லை.

ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசினோம். ''எங்களோட கவனத்துக்குத் தகவல் வந்ததும் நாங்களும் போய் விசாரிச்சிப் பார்த்தோம். மக்கள் பயப்படும்படி அந்தக் கிராமத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. நாங்களும் நைட் ரவுண்ட்ஸ் போயிட்டுத்தான் இருக்கோம். ரத்தக்காட்டேரி வராம இருக்கணும் என்பதற்காக தினமும் வெடி எல்லாம் வெடிக்கிறாங்க. இதுல ஒரே ஆறுதலான விஷயம், ரத்தக்காட்டேரி பயத்துல எங்க லிமிட்ல திருட்டு எதுவும் நடக்கிறது இல்லை. மாவட்ட ஆட்சியருடன் பேசி அந்த கிராமத்து மக்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க இருக்கிறோம்'' என்றார்.

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நம் தமிழனைத் திருத்தவே முடியாது!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்