Published:Updated:

ஜெயஸ்ரீக்கு டிரான்ஸ்ஃபர்?

கடுகடுக்கும் திருச்சி எம்.எல்.ஏ-க்கள்

##~##
ஜெயஸ்ரீக்கு டிரான்ஸ்ஃபர்?

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள். இதில் முதல்வர் தொகுதியாக ஸ்ரீரங்கமும் அமைச்சர் தொகுதியாக முசிறியும் இருப்பதால், இந்தத் தொகுதிகளில் அரசு செயல்பாடுகள் திருப்தி கரமாக இருக்கின்றன. கவனிக்கப்படாத மற்ற ஏழு தொகுதிகளிலும் இப்போது சட்டமன்ற உறுப்பினர் களைவிட, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் பட்டையைக் கிளப்புகிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனுநீதி முகாம் நாளான ஒவ்வொரு திங்கள் கிழமையும் மேடையில் அதிகாரிகள் புடைசூழ இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர், மக்கள் தெரிவிக்கும் குறைகளை விசாரித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக அழைத்து பெரும்பாலும் அங்கேயே தீர்வுகாண முயற்சி செய்கிறார். அவ்வாறு இயலாதபட்சத்தில், விரைவில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கிறார். ஊனமுற்றவர்களைக் கண்டால் சடாரென இறங்கிவந்து அவர்கள் அருகிலேயே நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொண்டு, அவர்கள் குறைகளைப் பொறுமையாகக் கேட்கிறார்.

ஜெயஸ்ரீக்கு டிரான்ஸ்ஃபர்?

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பெரும்பாலும் ஆட்சியர் அலுவலகத்தில்தான் விவசாயிகள் குறை தீர்க் கூட்டங்களை நடத்துவார்கள். இதிலும் ஜெயஸ்ரீக்கு தனி ஸ்டைல். கடந்த 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தை, திருச்சிக்கு அருகே உள்ள போதாவூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடத்தினார். ஆட்சியர் அலுவலகத்துக்கு இரண்டு அரசுப் பேருந்துகளை வரவழைத்து அதில் விவசாயிகளுடன் சேர்ந்தே பயணம் செய்தார். அந்தப் பயணத்திலேயே விவசாயிகளுடன் கலந் துரையாடல் தொடங்கிவிட்டது. தேசிய வாழை ஆராய்ச்சிப் பண்ணை முழுவதையும் ஒரு ரவுண்ட் அடித்தவர், அன்று நடந்த கூட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் முதல் பரிசு பெற்ற முகமது ஹனீபாவுக்கு பரிசு வழங்கி கௌரவித்து முழு நிகழ்ச்சியையும் நிறைவு செய்துவிட்டே சென்றார்.

வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக எந்த அதிகாரிகளிடம் இவர் கடுமையும் காட்டுவதில்லை, அன்பாகப் பேசியே காரியத்தைச் சாதிக்கிறார். அன்புக்கு அடங்காத அதிகாரிகளிடம், 'நாம் முதல்வர் மாவட்டத்தில் பணி புரிகிறோம் என்பதை நினைவில் வைத்துகொண்டு செயல்படுங்கள்’ என்று கடிந்துகொள்ளவும் தவறு வதில்லை.

சில நாட்களுக்கு முன் அமைச்சரின் தொகுதியான முசிறியில் உள்ள தண்டலைப்புதூர் என்ற கிராமத்தில் சத்துணவுக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் புகுந்து புறப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கண்ட அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ-க்களுக்கும் வெயிலின் கொடுமையை விட மண்டை கிறுகிறுத்துவிட்டது.

தங்கள் தொகுதிக்கு முன் அறிவிப்பு இல்லாமல் வந்துவிட்டுச் செல்வதால், தாங்கள் செயல்படாமல் இருப்பது போல் மேலிடத்துக்குத் தகவல் போகுமே என்று கடுப்பாகிறார்கள். அதனால் எப்படியாவது இவரை மாற்றிவிட வேண்டும் என்று மேலிடத்தில் பிரஷர் கொடுக்கிறார்களாம்.

அவரால் கிடைக்கும் நல்ல பெயரும் எம்.எல்.ஏ.க்களுக்குத்தானே, பிறகு என்ன வருத்தம்?

- 'ப்ரீத்தி’ கார்த்திக்

படம்: என்.ஜி.மணிகண்டன்