Published:Updated:

''தீர்ப்புக்கு 18 ஆண்டுகள்... நிவாரணத்துக்கு எத்தனை ஆண்டுகளோ?

வாச்சாத்தி கொந்தளிப்பு

''தீர்ப்புக்கு 18 ஆண்டுகள்... நிவாரணத்துக்கு எத்தனை ஆண்டுகளோ?
##~##

வாச்சாத்தி மலையடிவாரக் கிராமத்தில் 1992-ம் ஆண்டு வனத் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் அத்து​மீறல்களும், பாலியல் வக்கிரங்களும் அரங்​கேற்றப்​பட்டன. 18 ஆண்டுகளாக பல்வேறு தடைகளில் சிக்கி, மந்தமாக நடந்த வழக்கில் கடந்த 2011 செப்டம்பரில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வந்து ஐந்து மாதங்கள் முடிந்த நிலையிலும், இதுவரை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் வழங்​கப்படவில்லை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வன்கொடுமை மற்றும் பாலியல் அராஜகங்கள் நடந்த அந்தக் கிராமம் மீண்டும் உயிர்பெற 2.5 கோடி ரூபாய் வழங்கும்படி உயர் நீதிமன்றம் ஆரம்பத்திலேயே உத்தரவிட்டது. இதில் பல தவணைகளாக இதுவரை சுமார் 1.25 கோடி ரூபாய் மட்டும் அரசு மூலம் வழங்கப்பட்டிருக்​கிறது. மீதியுள்ள தொகையைத் தராமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

''தீர்ப்புக்கு 18 ஆண்டுகள்... நிவாரணத்துக்கு எத்தனை ஆண்டுகளோ?

நிலுவைத் தொகையைத் தரக்கோரி, தர்மபுரியில் கடந்த 16-ம் தேதி வாச்சாத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான டில்லிபாபு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தினர்.

''வாச்சாத்தி மக்களுக்கு நேர்ந்த அநீதிக்குத் தீர்ப்பு பெறவே 18 ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. இனி நிவாரணத்துக்கும் இதேபோல் ஆண்டுக்கணக்கில் போராட முடியுமா? முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் அந்தப் பெரும்​பாவம் நடந்தது. அதற்குப் பரிகாரம் செய்யும் வகையிலாவது, உடனே நிவாரணத்தைக் கொடுக்க அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.  

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் 18 பேருக்​கும் தலா 25 லட்சம் ரூபாய் தரவேண்டும். பொருள் சேதத்துக்கு ஆளான நிலமற்றவர்களுக்கு தலா ரெண்டு ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். கிராமத்தில் தகுதி கொண்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கவேண்டும். இனியும் அரசு தாமதித்தால், கெஞ்சிக்கொண்டு இருக்க மாட்டோம்'' என்று விளாசினார் சண்முகம்.

எம்.எல்.ஏ-வான டில்லிபாபு, ''வாச்சாத்தி தீர்ப்பில் தண்டனை பெற்ற அரசு பணி​யாளர்களை உடனே பணி நீக்கம் செய்து இருக்க வேண்டும். ஆனால், இப்போதும் அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது தவறான முன்னுதாரணம்'' என்று கொதித்தார்.  

கலெக்டர் லில்லியிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''வாச்சாத்தி மக்களுக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய நிவாரணம் குறித்து அரசின் கவனத்துக்கு தெரியப்படுத்துகிறோம். சத்துணவு ஆயா உள்ளிட்ட பணி இடங்களில் நிச்சயம் வாச்சாத்தி பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்'' என்று கூறினார்.  

தாமதிக்கப்பட்ட நீதி மட்டுமல்ல... தாமதிக்கப்பட்ட நிவாரணமும்கூட அநீதி தான்!

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்