Published:Updated:

ஜெயிக்கப் போவது மேரியா... ராஜரத்தினமா?

சூடு பிடிக்கும் கற்பழிப்பு வழக்கு!

##~##
ஜெயிக்கப் போவது மேரியா... ராஜரத்தினமா?

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன், ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் உள்ளிட்ட பல அறிவியலாளர்களை நாட்டுக்கு வழங்கிய உலகப் புகழ் பெற்ற கல்வி ஆலயம், திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி. இங்கே முதல்வராகப் பணிபுரிந்த பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி ஒருவர் போலீ ஸில் கொடுத்த கற்பழிப்பு புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இப்போது படுவேகம் எடுத்துள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினோம். ''அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஃப்ளாரன்ஸ் மேரி மிருதங்கம் வாசிப்பதில் வல்லவர். திருச்சி கிராப்பட்டியில் உள்ள கிறிஸ்தவப் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மேரியை கடந்த 2006-ம் ஆண்டு யதேச்சையாக சந்தித்தார் ராஜரத்தினம். அப்போது மேரியின் இசைத் திறமையைப் பாராட்டிய அவர், 'உனக்கு என்ன

ஜெயிக்கப் போவது மேரியா... ராஜரத்தினமா?

வேண்டும் என்றாலும் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரும் மிகவும் நெருங்கிவிடவே, மேரி கர்ப்பம் அடைந்திருக்கிறார். திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேரிக்கு கருக்கலைப்பு நடந்தது. ஆனால், இந்த விஷயம் எப்படியோ வெளியே கசிந்து விட்டது. கன்னியாஸ்திரியான மேரி கர்ப்பமான தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்த கிறிஸ்தவ சபை, அவருடைய கன்னியாஸ்திரிப் பட்டத்தைப் பறித்து வெளியேற்றியது. இதனால் அவமானம்

ஜெயிக்கப் போவது மேரியா... ராஜரத்தினமா?

அடைந்த மேரி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பாதிரியார் ராஜரத்தினத்தை தொடர்ந்து வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், ராஜரத்தினம் சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வெறுப் படைந்த மேரி, 'தன்னைக் கற்பழித்து கர்ப்பமாக்கி, பிறகு கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவைத்த பாதிரியார் ராஜ ரத்தினத்தை, சபையில் இருந்து வெளியேற்றி அவரது பதவியைப் பறிக்க வேண்டும். எனக்கு நியாயம் வேண்டும்’ என்று மதுரை மற்றும் திண்டுக்கல் மறை மாவட்டங்களில் உயர் பொறுப்பில் உள்ள பாதிரியார்கள் மூன்று பேரைச் சந்தித்து புகார் செய்தார். அவர்கள் ராஜரத்தினம் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மேரியை மிரட்டி அனுப்பிவிட்டார்கள்.

அதனால் வேறு வழியின்றி மேரி போலீஸில் புகார் செய்தார். மேரிக்கு ஆதரவாக பா.ம.க-வினரும்,  ராஜரத்தினத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மல்லுக்கட்டினர். பெண்கள் அமைப்புகளும் மேரிக்கு ஆதரவாக போராட்டங்களில் குதித்தனர். அதனால் 12.10.2010 அன்று திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு, பெண்கள் மீதான வன்கொடுமை போன்ற குற்றங்களுக்காக

ஜெயிக்கப் போவது மேரியா... ராஜரத்தினமா?

வழக்குப் பதிவு செய்து, கைது செய்தார்கள். அவர் இப்போது ஜாமீனில் வெளிவந்து மதுரையில் இருப்பதாகத் தகவல் சொல்கிறார்கள்.

பாதிரியார்கள் ஜோ சேவியர், சேவியர் வேதம், தேவதாஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல் வழக்குகளும், டாக்டர் சுசித்ரா மீது கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்தது போலீஸ்.

திருச்சி மாநகரில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு இப்போது மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, கடந்த மார்ச் 20-ம் தேதி குற்றச்சாட்டு பதியும் பணி நடந்தது. இந்த நீதிமன்றத்தில் சொற்ப வழக்குகளே உள்ளதால், இந்த வழக்கு ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று தீர்ப்பு வந்துவிடும் என்பதுதான் இப்போதைய நிலை'' என்று சொன்னார்கள்.  

பாதிக்கப்பட்ட மேரி தரப்பிடம் பேசினோம், ''பாதிரியார்கள் இந்தப் பிரச்னையை சாதி சாயம் பூசி திசை திருப்பினார்கள். மேரியை தவறான பெண்ணாக சித்தரித்து பல கட்டுக்கதைகளை கிளப்பி அவளை முடக்கப் பார்த்தனர். ஆனால் மேரி இப்போது போராடும் துணிவில் இருக்கிறார். மேரியைப் போல் பாதிக்கப்பட்ட சில கன்னியாஸ்திரிகளும் இந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, போலி வேட பாதிரியார்களை அடையாளம் காட்டுவார்கள். மேரிக்கு வெற்றி கிடைக்கும்'' என்றனர் ஆவேசமாக.

பாதிரியார் ராஜரத்தினத்தின் வழக்கறிஞர் ராஜேந் திரனை சந்தித்தோம். ''ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு களை வைத்து சமுதாயத்தில் நல்ல மதிப்புள்ள ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ். ஜோசப் கல்லூரியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் முறைகேடு செய்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்தான் கன்னியாஸ்திரி சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண்ணை வைத்து இந்த விவகாரத்தை ஜோடித்து, திரித்து பரபரப்பான வழக்காக மாற்றிவிட்டார். இந்த வழக்கை சட்டப்படி எதிர் கொண்டு என் கட்சிக்காரர் நிரபராதியாக வெளியே வருவார்'' என்றார் நம்பிக்கை யுடன்.

இந்த வழக்கை விசாரித்து வரும் கோட்டை காவல் சரக உதவி ஆணையர் ஸ்டாலினிடம் பேசினோம். ''பரபரப்பான இந்த வழக்கில் 60 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகையை ஏற்கெனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டோம். 28 சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சத் தண்டனை கிடைக்க போலீஸ் தனது கடமையைச் செய்யும்'' என்றார் பொறுப்புடன்.

ஆக, பாதிரியார் ராஜரத்தினம் விவகாரத்தில் ஓரிரு மாதங்களில் முடிவு தெரிந்துவிடும்.

- அ.சாதிக் பாட்ஷா