Published:Updated:

''அரிய வகைப் பறவைகளுக்கு ஆபத்து!''

அலறும் வட்டமலை விவசாயிகள்

##~##
''அரிய வகைப் பறவைகளுக்கு ஆபத்து!''

'திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள வட்டமலை ஓடக்கரை அணையில் எம்.ஜி.ஆர். காலத்தில் உருவாக்கிய காடுகளைப் பொதுப்​பணித் துறை அதிகாரிகள் அழித்துக்கொண்டு வருகிறார்கள். அதனால் அழியும் அரிய வகை பறவை இனங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று நமது ஜூ.வி. ஆக்ஷன் (044-66808002) செல்லுக்குப் புகார் வந்தது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆதங்கத்துடன் புகார் கூறிய வட்டமலை ஓடக்கரை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமியை சந்தித்தோம். ''இது எம்.ஜி.ஆர். காலத்தில் 1978-ம் ஆண்டு ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி தண்​ணீரைத் தேக்கி வைப்பதற்காகத் திறக்கப்பட்ட அணை. இதை நம்பி 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. 80-ம் ஆண்டில் ஒரு முறை மட்டும்தான் இந்த அணை நிரம்பியது. அதனால் ஏரியாவின் வறட்சி​யைத் தவிர்க்க 86-ம் ஆண்டு 'சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம்’ என்ற பெயரில் 10 ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டு, மரங்கள் நடப்பட்டன. புளி, தேக்கு, மூங்கில், சவுக்கு, வேம்பு, வெள்வேல் என்று மண்ணுக்கு

''அரிய வகைப் பறவைகளுக்கு ஆபத்து!''

ஈரத் தன்மையைக் கொடுக்கும் மரங்கள் வளர்க்கப்பட்டன. 800 ஏக்கரில் வளர்ந்த மரங்களில் அரிய வகைப் பறவைகள் தங்கிச் செல்கின்றன. மேலும் மான், முள்ளம்பன்றி போன்ற உயிரினங்களும் உள்ளன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு அமைச்சர் ஒருவர் வந்தபோது, அணையைக் காண்பித்து தண்ணீர் வர ஏற்பாடு செய்யச் சொன்னோம். அதுதான் வினையாகிப் போனது. அடுத்த சில நாட்களில் இங்குள்ள மரங்களை வெட்டிச் சீர் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் இங்கு உள்ள மற்ற மரங்களை எல்லாம் மறைத்து, சீமைக் கருவேல மரங்கள் மட்டும்தான் உள்ளது என்று கோப்பு தயாரித்து 800 ஏக்கரில் உள்ள மரங்களை வெட்ட ஒப்புதல் கொடுத்து விட்டனர்.

''அரிய வகைப் பறவைகளுக்கு ஆபத்து!''
''அரிய வகைப் பறவைகளுக்கு ஆபத்து!''

பிறகு நாங்கள் ஆட்சியரைச் சந்தித்​துச் சொன்ன பிறகு, மற்ற மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மரத்தை வெட்டும் ஆட்கள் இரவு நேரத்தில் மரங்களுக்கு தீ வைப்​பதால், பல உயிரினங்கள் செத்துப் போகின்றன. பறவைகள் வரத்து குறைகிறது. இனி நிலத்தின் ஈரப்பதமும் நிலத்தடி நீரும் குறைந்தால் விவசாயம் பாதிக்கப்படும். அதனால் உடனே மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தி, எம்.ஜி.ஆர். பெயரிலே ஒரு சரணாலயம் உருவாக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

இது குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கத்திடம் கேட்டோம். ''அங்கு முள் மரங்களை வெட்டத்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சீமைக் கரு​வேல மரங்களில் பறவைகள் அமராது. இந்த மரங்​களால் தண்ணீரின் தன்மை பாதிக்கப்​படுகிறது என்பதாலே வெட்டப்​படுகிறது.  மரங்​களை வெட்டித் தூர்வாரிய பிறகு உலக வங்கி உதவியுடன் இங்கு வாய்க்​கால்கள் மூலமாகத் தண்ணீர் கொண்டு வர நடவடிக்​கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

நல்லதே நடக்கட்டும்.

- ம.சபரி, படங்கள்: க.ரமேஷ்