Published:Updated:

சென்னையை மிரட்டும் போ(லி)லீஸ் டி-ஷர்ட்!

சென்னையை மிரட்டும் போ(லி)லீஸ் டி-ஷர்ட்!

சென்னையை மிரட்டும் போ(லி)லீஸ் டி-ஷர்ட்!

சம்பவம்-1  

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சென்னையை மிரட்டும் போ(லி)லீஸ் டி-ஷர்ட்!

ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மாலை நேரத்தில் வரும் காதல் ஜோடிகளை செல்போனில் படம் பிடித்து மிரட்டிப் பணம் பறிப்பது சமூக விரோதக் கும்பலின் வாடிக்கை. நீலாங்கரை போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது போலீஸ் என்று சொல்லிக்கொண்டே பணம் பறிக்கும் இரண்டு இளைஞர்களைக் கடந்த மார்ச் 16-ம் தேதி கைது செய்தனர்.

சம்பவம்-2

தி.நகர், ரங்கநாதன் தெருவில் பரபரவென வியாபாரம் நடக்கும் சமயம். 'போலீஸ்’ என்று டி-ஷர்ட் அணிந்த இருவர், சாலையோர வியாபாரிகளை மிரட்டிப் பணம் கேட்கிறார்கள். 'கொடுக்கலைன்னா கடையே இருக்காது’ என்று மிரட்டியதும், வளையல் கடைக் காரர் பயந்தபடியே 50 ரூபாயை நீட்டுகிறார். அடுத்து, செருப்புக் கடையிலும் மிரட்டல் தொடர்கிறது. அவர் கொஞ்சம் தைரியமாக, 'யாருங்க நீங்க.. உங்களை நான் இந்த ஏரியாவுல பார்த்ததே இல்லையே?’ என்று கேட் கவும், 'போலீஸ்’ பார்ட்டிகளின் முகம் மாறுகிறது. 'எங்ககிட்டேயே தெனாவட்டாப் பேசுறியா? வந்து கவனிக்கிறேன்!’ என்று உடனே எஸ்கேப் ஆகிறார்கள்.

சம்பவம்-3

நாமக்கல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் எஸ்.ஐ. உடையில் வந்து நாமக்கல்லில் போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணியில் இருந்தார். போலீஸார் சந்தேகம் கொண்டு விசாரித்ததில், அவர் 'போலி’ போலீஸ் என்பது தெரிய வந்தது. உடனே தேவராஜன் கைது செய் யப்பட்டார்.

...போலீஸ் பெயரில் நடக்கும் இது போன்ற கொள்ளை தமிழகம் முழுவதுமே நடப்பதாகச் சொல்கிறார்கள். சங்கிலிப் பறிப்புத் திருடர்களால் தவிக்கும் தமிழக நகரங்களின் புதிய தலைவலியாகி வருகிறது இந்த போலீஸ் திருடர்களின் அராஜகம்.

சென்னையை மிரட்டும் போ(லி)லீஸ் டி-ஷர்ட்!

சமீப காலமாக சென்னையின் பல ரெடிமேட் கடைகளில் 'போலீஸ்’ என்று அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்கள் விற்கப்படு கின்றன. இவற்றை அணிந்தபடி, 'ஒஸ்தி’ போலீஸ் போல சேட்டை செய்கிறார்கள் சில வில்லங்க விடலைகள். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக்கொண்டு காசு கொடுக்காமல் மிரட்டுவது, கல்லூரிப் பெண்களிடம் செல்போன் நம்பர் கேட்டு இம்சிப்பது, மிரட்டுவது, மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களிடம் வம்பு இழுப்பது என்று 'போலி போலீஸார்’ அடாவடிகள் மாநிலம் முழுக்கவே தொடர்கிறது!

சமீபத்தில் இதுகுறித்து தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனைச் சேர்ந்த டேவிட்,  ''கூட்டம் கூட்ட

சென்னையை மிரட்டும் போ(லி)லீஸ் டி-ஷர்ட்!

மாகவும் தனியாகவும் டி-ஷர்ட் போட்டுத் திரிந்த இளைஞர்களைப் பார்த்து பாமர மக்கள் பயந்து நடுங்குகின்றனர். அவர்கள் போலீஸா, இல்லையா என்பது அப்பாவி மக்களுக்குத் தெரிவதில்லை. பனியனில் உள்ள எழுத்தைப் பார்த்தவுடன் போலீஸ் என்று நம்புகிறார்கள். காவல் துறையில் இல்லாத நபர்கள் போலீஸ் என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும்'' என்று எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபுவிடம் பேசினோம். ''இந்த டி-ஷர்ட் கலாசாரம் அமெரிக்காவில் இருந்து இங்கே பரவி இருக்கிறது. 'நியூயார்க் சிட்டி போலீஸ்’ என்ற அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட், வாட்ச், கண்ணாடி ஆகியவற்றை அணிவது அங்கே பிரபலமாகி வருகிறது. அந்த டிரெண்டை இங்கு சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது மிகப் பெரிய குற்றம். போலீஸ் டி-ஷர்ட் தயாரிப்பவர்கள், அணிபவர்கள், தவறு இழைப்போர் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். ஒரு துறையின் பெயரைச் சம்பந்தமில்லாதவர்கள் பயன்படுத்துவது தவறு. செங்கல்பட்டில் ஒருவர் பைக்கில் 'பிரஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டி 25 பேரிடம் செயின்களைப் பறித்துள்ளார். சிலர் தமிழ்நாடு காவல் துறை பயன்படுத்திய பழைய ஜீப், அம்பாசிடர் காரை வாங்கி, எந்த மாற்றமும் செய்யாமல் அரசு சின்னத்துடன் பயன்படுத்தி சாராயம் போன்ற பல பொருட் களைக் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.   பொது மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.  போலீஸ்காரர்கள் டி-ஷர்ட் அணிந்து பணியில் ஈடுபட மாட் டார்கள். காட்டன் பேன்ட், சட்டைதான் அணிவார்கள். போலீஸார் அணியும் தொப்பி, பெல்ட்டில் அசோக சக்கரம் இருக்கும். தோள் பட்டையில் வெள்ளை நிற நட்சத்திரம் இருக்கும். சட்டையில் தமிழ்நாடு காவல் துறை என்பதைச் சுருக்கி 'த.கா.’ என்று தமிழிலும், ஜி.றி. என்று ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் இருக்கும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் போலீஸா, இல்லையா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

போலீஸ் பெயரைத் தவறாகப் பயன்படுத்து பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அது தவறாகப் பயன்படுத்தியவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும். எனவே, இளைஞர்கள் விளையாட்டுக்குக்கூட போலீஸ் டி-ஷர்ட் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அணியும் ஆடைகள் மீது கவனமாக இருக்க வேண்டும்!'' என்றார்.

இந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டு விபரீதம் ஆவதற்குள் அதிரடி நடவடிக்கை தேவை.

- க.நாகப்பன்

படங்கள்: ந.வசந்தகுமார்