Published:Updated:

கேட்பாரற்று நடக்கிறது, 17 ஆண்டு காலப் போராட்டம்!

சோகத்தில் விமான அதிகாரிகள்

##~##
கேட்பாரற்று நடக்கிறது, 17 ஆண்டு காலப் போராட்டம்!

விமான நிலையம் விறுவிறு போராட்டத்தில் இருக்கிறது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் ஆணையக அதிகாரிகள் கடந்த செவ்வாய் முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தில் குதித்து உள்ளனர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம் விமான நிலையங்களிலும் போராட்டம் வெடித் திருக்கிறது.

'1994-ம் ஆண்டுவரை சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய ஐந்து விமான நிலையங்களும் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஐ.ஏ.ஏ.ஐ.) என்ற அமைப்பின்கீழ் இயங்கி வந்தன. மற்ற அனைத்து

கேட்பாரற்று நடக்கிறது, 17 ஆண்டு காலப் போராட்டம்!

விமான நிலையங் களும் நேஷனல் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (என்.ஏ.ஏ.ஐ.) என்ற அமைப்பின்கீழ் இயங்கின.

என்.ஏ.ஏ.ஐ.யில் போதுமான நிதி இல்லாததால், இந்த இரண்டு அமைப்புகளையும் ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான மசோதா 1994-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. இரண்டு அமைப்பிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஒருங்கிணைக்க இரண்டு வருட அவகாசமும் தரப்பட்டது.

அதன்படி, 1995-ம் ஆண்டு ஏர்போர்ட் அத்தா ரிட்டி ஆஃப் இந்தியா (ஏ.ஏ.ஐ.) உருவானது. ஆனால், இரண்டு அமைப்புகளிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணி நடக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர், அவர்களை ஒருங்கிணைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயின் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு இந்தக் கமிட்டி, தன்னுடைய இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன் பின்னரும் ஒருங்கிணைக்கும் பணி தொடங்கப்படவில்லை. பிறகு, கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி, 2005-ல் தன்னுடைய அறிக்கையைத் தாக்கல் செய்தது. அறிக்கைக்கு மேல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதே தவிர பலன் பூஜ்யம்தான். இதனால், இன்றுவரை ஏ.ஏ.ஐ. இரண்டு பிரிவுகளாகத்தான் செயல்பட்டு வருகிறது.  

கேட்பாரற்று நடக்கிறது, 17 ஆண்டு காலப் போராட்டம்!

இதற்கிடையில், ஏ.ஏ.ஐ-யின் உயர் அதிகாரி களாக என்.ஏ.ஏ.ஐ-யில் உள்ளவர்களே தொடர்ந்து நியமிக்கப்பட்டதால், ஐ.ஏ.ஏ.ஐ-யில் பணி புரிந்த வர்களுக்குப் பல்வேறு கொடுமைகள் நடந்தன. பதவி உயர்வு, சம்பள உயர்வு குளறுபடிகள் இருந்தன. இதைவிடக் கொடுமையாக ஐ.ஏ.ஏ.ஐ-யில் 30 வருடங்கள் பணி அனுபவம் உள்ள அதிகாரிகளை, என்.ஏ.ஏ.ஐ-யில் 10 வருடங்கள் அனுபவம் உள்ள அதிகாரிகளுக்குக் கீழே பணியில் அமர்த்தினர். இவற்றை எதிர்த்து ஆரம்பம் முதல் நேர்மையான

கேட்பாரற்று நடக்கிறது, 17 ஆண்டு காலப் போராட்டம்!

வழியில் போராடி வருகிறோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி எங்களின் போராட்டம் தொடங்கியது. முதலில் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தோம். பின்னர், மதிய உணவு இடைவேளைகளில் போராட்டம் நடத்தினோம். வரும் ஏப்ரல் 14-ம் தேதி உள்நாட்டு முனையம் திறக்கப்பட உள்ளதால் வேலை நேரம் முடிந்த பிறகும் இரவு, பகலாக வேலை செய்தோம். அலுவலக விடுமுறை நாட்களிலும் விடுப்பு எடுக்காமல் பணி செய்தோம். ஆனால், எங்களின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் போகவே, வேலை நேரம் தவிர்த்த மற்ற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பணி செய்யாமல் எங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தோம். ஆனால், அப்படியும் நிர்வாகம் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அதன்படி, 12 மணி நேரத்துக்கு ஐந்து பேர் என்ற சுழற்சி முறையில் 24 மணி நேரமும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

பொதுமக்களுக்கோ, பயணி களுக்கோ, விமான நிலையப் பணிகளுக்கோ இதுவரை எங்கள் போராட்டத்தால் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. உண்ணா விரதம் இருக்கும் ஐந்து பேரைத் தவிர மற்றவர்கள் பணிகளுக்குச் சென்றுவிட்டு, இடையிடையே வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். எனவே, நிர்வாகம் எங்களின் கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு செவிசாய்க்க வேண்டும்'' என்றனர் போராட்டக் குழுவினர்.  

அடுத்தகட்டப் போராட்டம் பற்றிப் பேசிய ஐ.ஏ.ஏ.ஐ-யின் சென்னை அதிகாரிகள் சங்கத் தலைவர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, 'இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இது போன்று 1,100 அதிகாரிகளும் சென்னையில் மட்டும் 246 பேரும் பணியாற்றுகிறோம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தும்கூட நிர்வாகம், இதுவரை எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதே நிலை தொடருமானால், வரும் 30-ம் தேதி ஐந்து விமான நிலையங்களிலும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனால், அன்றைய தினம் சென்னை, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையங்களின் போக்குவரத்து பாதிக்கப்படும். எங்களுடைய உரிமைகள் கிடைக்கும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை' என்றார்.

இது குறித்து, சென்னை விமான நிலையத்தின் இயக்குநர் ஹரிந்திரநாதன், 'போராட்டம் குறித்துத் தலைமை அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தி உள்ளோம். அங்கிருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை'' என்றார்.

17 ஆண்டு காலமாக ஒரு சிக்கல் நீடிக்கிறது என்றால், அது எத்தனை அவமானம்?

- சி. காவேரி மாணிக்கம்

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்