Published:Updated:

திராவிடக் கட்சிகளை நம்பி மோசம் போயிட்டோம்!

வேலூரில் புலம்பிய திருமா

##~##
திராவிடக் கட்சிகளை நம்பி மோசம் போயிட்டோம்!

ராமதாஸ் பாணியில், திருமாவளவனும் திராவிடக் கட்சிகளை திட்டத் தொடங்கி இருப்பதால், அரசியல் களம் கலகலத்துக் கிடக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எல்.ஐ.சி. நிறுவன எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழிலாளர் நலச்சங்கத் தலைவரான சி.பி.தேசியின் பணி நிறைவு விழா கடந்த 25-ம் தேதி வேலூரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசியதுதான், ஏரியா உடன்பிறப்புகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

''தோழர் சி.பி.தேசியின் பணி நிறைவு விழாவில் கலந்து கொள்வது, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்று சம்பிரதாயமாகப் பேச்சைத் தொடங்கிய திருமா, அடுத்து நேரடித் தாக்குதலில் ஈடுபட்டார். ''கட்சியை நான் எத்தனை வருஷமா கட்டிக் காப்பாத்திட்டு வர்றேன்னு உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு தேர்தலுக்கும் திராவிடக் கட்சிகளிடம் ஸீட்டு வாங்க நான் என்ன பாடுபடுறேன்னும் உங்களுக்குத் தெரியும். 2001 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். 15 ஸீட்டுக்கு அதிகமா தருவாங்கனு போய் கடைசியா எட்டு ஸீட்டுல வந்து

திராவிடக் கட்சிகளை நம்பி மோசம் போயிட்டோம்!

நின்னோம். அஞ்சு வருஷம் கழித்து அ.தி.மு.க-காரங்ககிட்ட நாம வாங்கியது ஒன்பது ஸீட்டு. அடுத்த அஞ்சு வருஷம் கழித்து 2011-ல தி.மு.க-காரங்ககிட்ட கூடுதலா இரண்டு வாங்கி 11 இடத்துல நின்னோம். நம்ம தலையெழுத்தைப் பார்த்தீங்களா..? 15 வருஷத்துல நாம எட்டுல இருந்து 11-க்குத்தான் வந்திருக்கோம். ஏன்னா... நம்ம கட்சிக்கு திரைப்பட பலம் இல்லை.

கட்சிக்காக, தமிழ் மக்களுக்காக, மீனவர் பிரச்னைக்காக, இலங்கை சகோதரர்களுக்காக எத்தனை முறை போராடி சிறைக்குச் சென்றோம் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். ஆனால், இந்த விஜயகாந்த் ஒரு போராட்டமாவது செய்து இருப்பாரா? ஆனால் திரைப்படம் மூலம் மக்களைக் கவர்ந்து விடுகிறார். இவர் மட்டுமா... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதியில் ஆரம்பித்து இப்போது விஜயகாந்துடன் நின்று விடாமல் விஜய் வரை வந்து நிற்கிறது. இப்போது ஒரு படம் நன்றாக ஓடி விட்டால் அடுத்த நிமிடமே கதாநாயகனுக்கு முதலமைச்சர் ஆசை வந்து விடுகிறது. விஜயகாந்துக்கும் விஜய்க்கும் முதலமைச்சர் ஆசை வந்து விட்டது.

திராவிடக் கட்சிகளை நம்பி மோசம் போயிட்டோம்!

இந்த திராவிடக் கட்சிகளை நம்பி நாம் மோசம் போனதுதான் மிச்சம். ஒவ்வொரு தேர்தலிலும் திராவிடக் கட்சிகளின் காலில் விழுந்து ஸீட் வாங்குறதுதான் என்னோட வேலையாப் போச்சு. ஆனா போன தேர்தல்ல, சட்டை கசங்காம வந்து 41 இடங்களை விஜயகாந்த் வாங்கிட்டுப் போயிட்டார். நம்மால் என்ன பண்ண முடியும்? வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். நம்ம கட்சியை எப்போது திராவிடக் கட்சிகள் மதிக் கிறதோ... அப்போதுதான் தமிழக மக்களுக்கு நல்ல எதிர்காலம்.

ஏண்டா கட்சி ஆரம்பிச்சோம்னு மன விரக்திக்கு தள்ளப்பட்டு விட்டேன். நேத்துக் கட்சி ஆரம் பிச்சவங்க எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிட்டாங்க. போன முறை டெல்லிக்குப் போயிட்டு சென்னைக்கு விமானத்துல திரும்பிக்கிட்டு இருந்தேன். அப்போ ஒரு எம்.பி. என்கிட்ட பேசினார். 'என்னோட பையன் அரசியலுக்கு வரணும்னு ஆசைப்படுறான். நான் என்ன பண்ணுறது?’னு கேட்டார். ஏற்கெனவே எனக்குத் தலைவலி. 'இப்ப அரசியல் என்பது திரைப்படம் என்று ஆகிவிட்டது. அதனால உங்க பையனை அரசியலுக்கு மட்டும் வர வைக்காதீங்க. சினிமாவுலயும் நடிக்க வைங்க’ன்னு சொன்னேன். சம்பந்தப்பட்ட எம்.பி. என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டார்'' என்றவர், அடுத்து உட்கட்சி அரசியலுக்கு வந்தார்.

''நான் அவங்ககிட்ட கெஞ்சிக் கதறி ஸீட்டு வாங்கிட்டு வந்து கொடுத்தா... கட்சிக்காரங்க நீங்க என்ன பண்ணுறீங்க..? ஒருத்தனுக்கு ஸீட்டு கொடுத்தா மத்தவனுக்குப் பிடிக்க மாட்டேங்குது. உடனே கட்சிப் பணியை செய்யாம வீட்டுல உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறீங்க. முதலில் உங்ககிட்ட ஒற்றுமை இல்லை. அப்புறம் எப்படி மத்தவன் நம்மளை மதிப்பான்? இதனாலதான் ஏன்டா கட்சி ஆரம்பிச்சோம்ன்னு கஷ்டமா இருக்கு. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. அதுக்கு திராவிடக் கட்சிகளைப் போலவே நீங்களும் ஒரு விதத்துல காரணம்.

அடுத்த முறை தேர்தலில் நாம ஜெயிக்கிற மாதிரி வழியைப் பாருங்க. ஏன்னா, ஏற்கெனவே மனம் நொந்து இருக்கேன்'' என்று உணர்ச்சி வசப்பட்டவர் திடீரென, ''நீங்க முதல்ல கூட்டணிக் கட்சிகளை மதிக்கக் கத்துக்கோங்க...'' என்று முடித்தார்.

''தலைவர் என்ன சொல்றார்? கூட்டணியில் இருக்கணும்னு சொல்றாரா... வேண்டாம்னு சொல்றாரே... பாவம் ரொம்பக் குழம்பிப்போய் இருக்கார்....'' என்று வேதனையுடன் கலைந்து சென்றனர் இளம்சிறுத்தைகள்.

- கே.ஏ.சசிகுமார்