Published:Updated:

வேலூரில் மட்டும் புறக்கணிப்பு ஏன்?

வேதனையில் திருநங்கைகள்!

##~##
வேலூரில் மட்டும் புறக்கணிப்பு ஏன்?

'கடந்த ஆட்சியில் எங்களுக்குக் கிடைத்த சலுகைகள்கூட, இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் நாங்கள் பாலியல் தொழில் செய்வது தவிர வேறு வழி தெரியவில்லை’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புலம்பி இருந்தார் வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையைச் சேர்ந்த திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ஜோதிகா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ''கடந்த ஆட்சியில் எங்களுக்கு அரசு சார்பாகத் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்குவதாக அறிவித்தார்கள். இதனால் மூன்று வருடங்களுக்கு முன்பே வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 34 சுய உதவிக்குழுக்களைத் தொடங்கி வங்கிகளில் கணக்கு ஆரம்பித் தோம். ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 பேர் இருக்கிறோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், வேலூர் மாவட்டத்தில் எங்களுக்கு இப்போது எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவது இல்லை.  கடலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற பகுதிகளில் உள்ள திருநங்கைகளுக்கு சுமார் 1 லட்ச ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கி உள்ளனர். இதனால் டீ கடை, ஓட்டல், தையல்கடை நடத்தி சமூகத்தில் மதிக்கத்தக்க வகையில் திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். பல மாவட்டங்களில் எங்களுக்கு இலவசப் பட்டாவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

வேலூரில் மட்டும் புறக்கணிப்பு ஏன்?

ஆனால், நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? உண்மையைச் சொல்கிறேன். வேலூர்

வேலூரில் மட்டும் புறக்கணிப்பு ஏன்?

மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளில் 95 சதவிகிதத்தினர் பாலியல் தொழில் செய்ய விரும்புவது இல்லை. கிடைக்கும் வேலையைச் செய்து சமூகத்தில் மற்ற வர்களைப் போல நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். அதற்காக இதுவரை 15 முறைக்கு மேல் கலெக்டரிடம் மனு கொடுத்தும், எங்களுக்கு எந்த விடிவும் பிறக் கவே இல்லை.

இப்போது இருக்கும் அமைச்சர் வி.எஸ்.விஜய்யை சந்தித்து மனு கொடுத்தோம். அவரும் 'உங்களுக்குக் கூடிய விரைவில் பட்டாவும், சொந்தத் தொழில் தொடங்க கடன் வசதியும் செய்து தருகிறேன்’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ காரணம் சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அமைச்சரைப் பார்க்க முடியாததால் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியைப் பார்க்கப் போனோம். அவரையும் பார்க்கவிட மறுக்கிறார்கள். மேயர் அலுவலகத்தில் ஒருவர், 'நான்தான் மேயரோட பி.ஏ. என்கிட்ட மனு வைக் கொடுங்க. நான் உங்க பிரச்னையைத் தீர்க்கிறேன்’ என்று, எங்கள் மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டார். எல்லோரும் எங்களை அருவருப்பாகவே பார்க்கிறார்கள். யாருமே எங்கள் பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்கவோ, சந்தித்துப் பேச நேரம் தருவதோ இல்லை.

அரசு அதிகாரிகள் எங்களைப் பார்த்தாலே எரிச்சலாகி, 'சீக்கிரம் கிளம்புங்க. எங்களுக்கு வேலை இருக்கு’ என்று விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். நல்ல வாழ்க்கை வாழ்ந்து இந்த சமூ

வேலூரில் மட்டும் புறக்கணிப்பு ஏன்?

கத்தில் மரியாதையுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இனியும் எங்களைப் புறக்கணித்தால் நாங்கள் உயிர் பிழைத்து வாழ வேறு வழியே இல்லாமல் பாலியல் தொழில்தான் செய்யவேண்டும்'' என்று கண் கலங்கினார்.

பி.காம். பட்டதாரியான திருநங்கை சினேகா, ''திருநங்கைகளுக்கான, 'கிருபை பூக்கள்’ என்று அமைப்பின் கீழ்வேலூர் நகரில் மட்டும் 1,500 பேருக்கு மேல் உறுப்பினராக உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் முன்பு இருந்த மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜா திருவேங்கடம் எங்களின் தேவை களைப் புரிந்துகொண்டு நல்ல முறையில் உதவி செய்வார். அவர் என்னை சி.ஏ. படிக்க வைப்பதாகக் கூறினார். எனக்கும் ஆசைதான். அவர் மாற்றலான பிறகு அடுத்துவந்த மாவட்ட சமூக நல அலுவலர், எங்களை மனிதப் பிறவியாகக்கூட மதிக்கவில்லை. கடன் சம்பந்தமாக அவரைச் சந்திக்கச் சென்றாலே, திட்டி வெளியே விரட்டுகிறார். இனியும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால், வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பாக முதல்வர் அம்மாவை சந்தித்து மனு கொடுத்து எங்கள் நிலைமையைச் சொல்ல இருக்கிறோம்'' என்றார் பரிதாபமாக.

திருநங்கைகளை சந்திக்க மறுத்தது பற்றி மேயர் கார்த்தியாயினியிடம் கேட்டோம். ''குறை சொல்ல வருபவர்கள் யாரையும் நான் சந்திக்க மறுப்பது இல்லை. மீட்டிங் அல்லது வேறு அலுவலில் இருந்தபோது வந்திருக்கலாம்'' என்றார்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அஜய் யாதவிடம் திருநங்கைகள் குறித்துப் பேசினோம். ''சம்பந்தப்பட்ட திருநங்கைகள் பிரச்னை பற்றிய விரிவான தகவல்கள் எனக்கு வந்து சேரவில்லை. முறையாக விசாரித்து, கூடிய விரைவில் அவர்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை நிச்சயம் செய்து தருகிறேன். அவர்கள் பயப்படத் தேவை இல்லை!'' என்று நம்பிக்கை வார்த்தை கூறினார்.

திருநங்கைகளை இயற்கை மட்டும் தண்டித்தது போதுமே, அரசு அதிகாரிகளும் வஞ்சிக்க வேண்டுமா?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்