Published:Updated:

கடத்தல் கும்பலுக்குத் துணை போகிறாரா எம்.பி.?

பெரம்பலூர் பஞ்சாயத்து

##~##
கடத்தல் கும்பலுக்குத் துணை போகிறாரா எம்.பி.?

'அம்மாவின் பொற்கால ஆட்சிக்குப் பங்கம் விளை விக்கும் வண்ணம், அரசு புறம்போக்கு நிலத்தில் கல் திருடி விற்கும் கும்பலுக்குத் துணைபோகும் அ.தி.மு.க-வின்  எம்.பி. இளவரசனை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் தான் பெரம்பலூர் ஹாட். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராஜ்ய சபா அ.தி.மு.க. எம்.பி-யும், ஒருங்கிணைந்த அரியலூர் - பெர ம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளருமான இளவரசனுக்கு எதிராகத்தான் இந்தக் கண்டனப் போஸ்டர்கள்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பாடாலூர் பஞ்சாயத்துத் தலைவர் வேல்முருகன், ''எங்க குடும்பம் அ.தி.மு.க-வுக்கு விசுவாசமான குடும்பம். நான் பஞ்சாயத்துத் தலைவரான பிறகு, அம்மாவின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு போற பணியை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பா செஞ்சுக்கிட்டு இருக்கிறேன். கடந்த 12-ம் தேதி, எங்க ஊர் குடிநீர் கிணத்துக்குப் பக்கத்தில் திருட்டுத்தனமா இயந்திரங்கள் மூலம் கல் உடைச்சிட்டு இருந்ததைப் பார்த்துட்டு. கல் உடைக்கிற இடத்துக்குப் பக்கத்தில் போனேன். ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவராஜ், திருவிளக்குறிச்சியைச் சேர்ந்த ரவி இன்னும் சிலரும் இருந்தாங்க. என்னைப் பார்த்ததும், வண்டியை விட்டுட்டு ஓடிட்டாங்க.

கடத்தல் கும்பலுக்குத் துணை போகிறாரா எம்.பி.?
கடத்தல் கும்பலுக்குத் துணை போகிறாரா எம்.பி.?

நான் வீட்டுக்கு திரும்பிட்டு இருந்தப்போ என் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'டேய்! பஞ்சாயத்து தலைவருன்னா ஊருல தண்ணி வருதா, வீதியில லைட் எரியுதான்னுதான் பாக்கணும். நாங்க கல் உடைக்கிறதை எல்லாம் பிடிக்க நினைக்கக்கூடாது. மீறி பிடிச்சா நீ உயிரோட இருக்க மாட்டே. எனக்கு கொலை எல்லாம் சாதாரணம்டா. இப்பக்கூட கண்டிஷன் பெயில்ல கையெழுத்துப் போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்’னு ஒரு ஆள் மிரட்டினார். அது நிச்சயமா திருவிளக்குறிச்சியைச் சேர்ந்த ரவியோட குரல்தான். அவர்தான் கொலை கேஸ்ல ஜாமீன்ல வந்திருக்கார். உடனே புகார் கொடுக்க ஸ்டேஷனுக்குப் போனேன். அப்ப திரும்பவும் போன் வரவும், போலீஸ்காரங்ககிட்ட

கடத்தல் கும்பலுக்குத் துணை போகிறாரா எம்.பி.?

போனைக் கொடுத்தேன். பேசுறது போலீஸ்னு தெரியாம, 'டேய்! இன்னைக்கு நைட்டுக்குள்ள உன்னை வெட்டாம விடமாட்டேன்’னு மிரட்டினாருங்க. கல் உடைக்கும் கும்பலுடன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான வீரமுத்துவுக்கும்

தொடர்பு இருக்கலாம்னு என்னோட சந் தேகத்தையும் குறிப்பிட்டு போலீஸ்ல புகார் கொடுத்தேன். அதோட எஸ்.பி. மற்றும் கலெக்டரிடமும் மனு கொடு த்தேன்.

கலெக்டரிடம் கொடுத்த மனு மீது, கடந்த 17-ம் தேதி  விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. ரேவதி, அந்த இடத்தில் கல் ஏற்றிக்கொண்டு இருந்த ஏழு டிராக்டர்களையும், கல் உடைக்கும் இயந்திரங்களையும், கல் உடைத்த நான்கு பேரையும் பிடிச்சாங்க.  அப்ப இன்ஸ்பெக்டருக்கு போன் செய்த அரியலூர் எம்.பி. இளவரசன், கைது செஞ்சவங்களை வெளியில் விடச்சொல்லி இருக்கார். இந்தத் தகவல் எனக்குத் தெரிய வரவும், நானே எம்.பி-க்கு போன் பண்ணி, 'அண்ணே! பிரச்னை என்னான்னு தெரிஞ்சிக்காம ஸ்டேஷனுக்குப் போன் செய்து இருக்கீங்களே... இது நியாயமா?’ன்னு கேட்டேன். ஆனா அவரோ, 'உங்க ஊரைச் சுற்றி 40 பேர் கல் உடைக்கிறாங்க பிரதர். நீங்க நாலு பேரை மட்டும் பிடிக்கிறது எந்த விதத்துல நியாயம்?’னு கேட்டார். அதுக்கு, 'அண்ணே! இதனால அரசுக்கு வருசத்துக்கு மூணு கோடி ரூபாய் இழப்பாகுது. வேற யாரு உடைக்கிறாங்கன்னு சொல்லுங்க. எல்லாத்தையும் பிடிப்போம்’னு சொல்லிட்டுப் போனை வச்சிட்டேன். அதுக்குப் பிறகும் அந்த இடத்தில் கல் உடைக்கிறாங்க. போலீஸும் நடவடிக்கை எடுக்கறதாத் தெரியலை. வேற வழி தெரியாமத்தான் எங்க ஊர்க்காரங்க போஸ்டர் ஒட்டிட்டாங்க'' என்றார் கோபத்துடன்.  

கடத்தல் கும்பலுக்குத் துணை போகிறாரா எம்.பி.?

இதுகுறித்து, எம்.பி. இளவரசனிடம் கேட்டோம். ''அந்தப் பகுதியில் 40 கூலித் தொழிலாளிங்க வயித்துப் பிழைப்புக்காக கல் உடைச்சு விக்கிறாங்க. அதில் நாலு பேரை மட்டும் வேல்முருகன் பிடிச்சு பிரச்னை பண்றதா முன்னாள் தலைவர் வீரமுத்து போன் செய்து சொன்னார். அதனால், ஸ்டேஷனுக்குப் போன் செய்து விசாரிச்சிட்டு, அவங்க தப்பு பண்ணி இருந்தா மட்டும் நடவ டிக்கை எடுங்கன்னு சொன்னேன். இதையே வேல்முருகன் போன் செய்த போதும் கேட்டேனே தவிர, வேறு எந்த தனிப்பட்ட ஆதா யத்துக்காகவும்  நான் தலையிடவில்லை. இதில், வேல்முருகன் என்னை ஏன் இழுக்கிறார்ன்னு புரியலை'' என்றார்.

முன்னாள் துணைத் தலைவர் சிவராஜ், திருவிளக்குறிச்சியைச் சேர்ந்த ரவி இருவரும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவர்களின் கருத்தை அறிய முடியவில்லை. வீரமுத்துவிடம் பேசியபோது, ''எனக்கும் கல் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊரில் நிறைய பேர் கல் கடத்தும்போது, எங்கள் கட்சியைச் சேர்ந்தவரை மட்டும் வேல்முருகன் போலீஸில் பிடித்துக் கொடுக்கிறாரே என்ற ஆதங்கத்தில்தான் எம்.பி-யிடம் புகார் சொன்னேன்'' என்றார் பதற்றமாக.

பாடாலூர் இன்ஸ்பெக்டர் சேலைமுத்து, ''வேல்முருகனுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடித்து இருக்கி றோம். அவர் வெளியூரில் இருப்பதால் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். கல் உடைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார் உறுதியாக.

நியாயத்துக்குப் போராடுபவர்களுக்கு எந்தக் காரணம் கொண்டும் அநீதி இழைக்கப்படக்கூடாது.

- சி.ஆனந்தகுமார், படங்கள்: எம்.ராமசாமி