Published:Updated:

3 மாதங்கள்.. 30 குழந்தை திருமணங்கள்!

அதிரும் திருச்சி

##~##
3 மாதங்கள்.. 30 குழந்தை திருமணங்கள்!

டுத்தடுத்து நடக்க இருந்த மூன்று சிறுமிகளின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, சாதனை படைத்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்பவம் 1:

'பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதே ஆன ப்ளஸ் ஒன் மாணவி அனிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  திருப்பூரில் கொத்தனார் வேலை செய்யும் 29 வயதான மணி என்பவ ருக்கு மார்ச் 25-ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்கள்’ என்று மார்ச் 21-ம் தேதி, திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினரான ஜெயந்தி ராணிக்குத் தகவல் கிடைத்து இருக்கிறது. உடனே, மணப்பாறை எஸ்.ஐ-யை அழைத்துக்கொண்டு மணமகளின் இல்லத்துக்குச் சென்றார்.

10-ம் வகுப்பில் 437 மதிப்பெண் எடுத்து நல்லவிதமாக 11-ம் வகுப்பு படித்துக் கொண் டிருந்த அனிதாவுக்கு, இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், பெற்றோரின் வற்புறுத்தலுக்காக

3 மாதங்கள்.. 30 குழந்தை திருமணங்கள்!

அமைதி காத்து இருக்கிறார். திருமணத்தை நிறுத்தி தன்னைக் காப்பாற்ற வந்தவர்களை கடவுளாக நினைத்து கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார். காப்பாற்றப்பட்ட திருப்தியில் புத்தக மூட்டையைச் சுமந்தபடி அவர்களுடன் கிளம்பிச் சென்று, சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி ப்ளஸ் ஒன் தேர்வு எழுதி வருகிறார் அனிதா.

''நாங்க திருப்பூரில் வேலை பாக்குறோம். எங்க பொண்ணு பாட்டி வீட்டுல தங்கி படிச்சுட்டு வர்றா. இங்கே அவளை பாதுகாப்பா கவனிச் சுக்க ஆள் இல்ல. ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றப்ப பசங்க கிண்டல் பண்றாங்க. அவளை ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்துட்டா எங்க கடமை முடிஞ்சுடும் இல்லியா? என்னை 13 வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. நான் சீரழிஞ்சா போயிட்டேன்? அப்ப எங்கே போச்சு இந்தச் சட்டம்?'' என்று ஆற்றாமையுடன் பேசி இருக்கிறார் அனிதாவின் தாய் சின்னப்பொண்ணு.

சம்பவம் 2:

மார்ச் 22-ம் தேதி மாவட்ட சமூகநல அலுவலர் யசோதாவுக்கு ஒரு கடிதம். அதில் 'சிறுகனூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீதேவி மங்கலத்தில் ஏப்ரல் 1-ம் தேதி, 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கப் போகிறது’ என்று தகவலும் ஆதாரமாக திருமண அழைப்பிதழும் இருந்து உள்ளது. உடனே,

3 மாதங்கள்.. 30 குழந்தை திருமணங்கள்!

குழந்தைகள் நலக் குழுவுக்கு யசோதா தகவல் சொல்ல... அன்றைய தினமே நலக்குழு உறுப்பினர்களான ஜெயந்திராணியும், ஆல்பர்ட்டும் மணப்பெண் வீட்டைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.

கருப்பையா - ராணி தம்பதியினரின் மகளான ஜெய சுதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 16. காதலித்த இளைஞரோடு ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பெற்றோர் போலீஸில் புகார் செய்ய... அவளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்தது போலீஸ். இதையடுத்தே, அவளது பெற் றோர் திருமண ஏற்பாடுகளை அவசரமாகச் செய்து

இருக்கிறார்கள். துறையூரைச் சேர்ந்த விவசாயியான 28 வயது சரவணனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

பெண்ணின் அம்மா ராணியிடம் பேசினோம். ''இந்தப் பொண்ணு ஒழுங்கா இருந்தா நாங்க ஏன் அவசரப் பட்டு கல்யாணம் செய்யப்போறோம்? அவளால நாங்க பட்ட அவமானம் கொஞ்ச நஞ்ச மில்லை. வேற வழி தெரி யாமத்தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சோம்'' என் றார் சோகமாக.

சம்பவம் 3:

3 மாதங்கள்.. 30 குழந்தை திருமணங்கள்!

மார்ச் 23-ம் தேதி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினரான ஜெயந்தி ராணிக்கு தொலைபேசி அழைப்பு. 'லால்குடி தாலுகா குமுளூரைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் மாணவி ஹேமலதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்யாணம்’ என்று தகவல். இவர்கள் பெண் வீட்டுக்குச் சென்றபோது மணப்பெண்ணுக்கு நலங்கு சுற்றியபடி..... வீடு ஏக கலகலப்பாக இருக்க, மணப்பெண் மட்டும் சோகமாக இருந் திருக்கிறார். இவர்கள் திருமணத்தை நிறுத்தச் சொல்லவும், ஏக ரகளை நடந்திருக்கிறது. போலீஸ் உதவியுடன் ஹேமலதாவை மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்த குழந்தை நலக் குழு, காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

ஹேமலதாவின் அப்பா பழனிச்சாமி, சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மல்லிகா. சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் உறவுக்கார பையன் இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு ஹேமலதாவை திருமணம் செய்து வைக்க இருந்தபோதுதான் திருமணம் நிறுத்தப்பட் டுள்ளது. பெண்ணின் அம்மா மல்லிகா, ''18 வயதுக்கு அப்புறம்தான் பொண்ணுக்கு கல்யாணம் செய்யணும்னு எங்களுக்குத் தெரியாதுங்க. எல்லா ஏற்பாடும் செஞ்சிட்ட பிறகு கல்யாணத்தை நிறுத்தினது அவமானமா இருக்கு'' என்றார் வருத்தத்துடன்.

3 மாதங்கள்.. 30 குழந்தை திருமணங்கள்!

ஜெயந்திராணியிடம் பேசினோம். ''இந்த மூன்று மாதங்களில் மட்டும் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 30 சிறுவர் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் பால்ய விவாகத்தைத் தடுப்பதற்கான குழுவை உருவாக்கினால், இதை பெருமளவு கட்டுப்படுத்தலாம்'' என்றார்.

திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் பேசினோம். ''அனைத்து ஊராட்சிகளிலும், கிராமசபை கூட்டம் வாயி லாகவும் 'பால்ய விவாகம் செய்வது சட்டப்படிக் குற்றம்’ என்ற தகவலைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும். திருமணத்துக்கு ஏற்பாடு செய்பவர்கள் மட்டுமல்லாமல்... உடந்தையாக இருப்பவர்கள், மணமக்களின் வயதுச் சான்றிதழ் நகலை வாங்கி திருமண வயதை உறுதி செய்யாமல் திருமணத்துக்கு இடமளிக்கும் திருமண அரங்க உரிமையாளர்கள் மீதும் இனி வழக்கு தொடரப்படும்'' என்று உறுதி அளித்தார்.

மக்களாகப் பார்த்து திருந்துவதுதான் நல்லது!

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்