Published:Updated:

தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் 'தெய்வக்' குழந்தைகள்!

கூடலூர் ரசாயன அதிர்ச்சி

##~##
தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் 'தெய்வக்' குழந்தைகள்!

பூச்சிக் கொல்லி மருந்துகள் கேரளாவில் ஏற்படுத்திய பயங்கரத்தின் அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில், தமிழகத்திலும் அதன் கோரம் வெளிப்படத் தொடங்கி உள்ளது. கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கொத்துக்கொத்தாக நோயுற்ற குழந்தைகள் பிறந்திருப்பதால், சோகத்தில் துடிக்கிறார்கள் மக்கள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீலகிரி மாவட்டத்தில் தோட்டத் தொழில்தான் பிரதானம். தேயிலை, காஃபி உள்ளிட்ட தோட்டத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். கடந்த 25-ம் தேதி அன்று கூடலூரில் நீலகிரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சி.ஐ.டி.யு.) சார்பில், 'நஞ்சு ரசாயனங்களால் பாதிக்கப்பட்டோரின் கவன ஈர்ப்புக் கருத்தரங்கம்’ நடத்தினார்கள். மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி பெறாத குழந்தைகளைத் தோளில் தூக்கிக் கொண்டும், கைத்தாங்கலாக

தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் 'தெய்வக்' குழந்தைகள்!

அழைத்துக் கொண்டும் பெற்றோர்கள் அங்கு வந் தது, பார்த்த அத்தனை பேரையும் அதிர வைத்தது.

கருத்தரங்கை ஏற்பாடு செய்த தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில அமைப்பாளர் சுரேஷிடம் பேசினோம். ''கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டப் பயிர்களில் பூச்சிகளைக் கொல்லவும், களைச் செடிகளை அழிக்கவும் சில நிறுவனங்களின் ரசாயன மருந்துக்களைத் தெளிக்கிறார்கள். இந்த ரசாயனங்கள் அதனுடைய வேலையை முடித்ததும், அப்படியே மக்கிப்போவது இல்லை. அது, பயிரைக் கெடுத்தது போதாது என்று மண்ணையும் சீர் அழிக்கிறது. மழை பெய்யும் நேரத்தில் இந்தத்

தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் 'தெய்வக்' குழந்தைகள்!

தோட்டங்களில் வழியாகப் பாயும் நீரும் மாசுபடுகிறது. அதனால் இந்த நீரைக் குடிப்பவர்களின் உடல் நலன் கெட்டுப் போகிறது. பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள், மூளை வளர்ச்சி இல்லாததாகவும், விகாரமான தோற்றத் துடனும், வயசுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லாமலேயும், இறுகப் பிடித்தாலே உடையும் அளவுக்குப் பலவீனமான எலும்புகளோடும் பிறக்கிறார்கள்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதிகளில், முந்திரித் தோட்டங்களில் எண்டோசல்ஃபான் ரசாயனம் ஏற்படுத்திய பயங்கரம் பற்றிய செய்திகள், நாடெங்கும் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பிறகே, இங்கேயும் பாதிப்புகள் பற்றி தகவல் சேகரிக்கத் தொடங்கினோம். தன்னுடைய குழந்தை விகாரமாக பிறந்திருக்கும் நிலையில், அதனை வெளிப்படையாகப் பேச பெற்றோர்கள் விரும்புவது இல்லை. போட்டோ எடுப்பதையும் விரும்புவது இல்லை. 'தோட்டத்தில் கூலி வேலை செய்து நாங்க பண்ற சம்பாத்தியத்தில் நிம்மதியா சாப்பிடுறதே கஷ்டம். இதுல குழந்தைக்கு ட்ரீட்மென்ட்டுக்கும் செலவழிக்க வேண்டியிருக்கு. இந்தக் கேவலத்தை வெளியே சொல்லி இன்னும் நாங்க அசிங்கப்படணுமா?’ என்றுதான் பலரும் கேட்கிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் 'தெய்வக்' குழந்தைகள்!

நிலாகோட்டை பகுதியில் மட்டும் 24 குழந்தைகள் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறந்து இருக்கிறது. கூடலூர் நகரை ஒட்டிய பகுதியில் 180 குழந்தைகளுக்குப் பாதிப்பு இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆறு வயசான குழந்தைக்கு, ரெண்டு வயசுக்கு உரிய வளர்ச்சிகூட இல்லை. தேவர்சோலை, சேரங்கோடு போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தை களையும் கணக்குப் பார்த்தா, எண்ணிக்கை ஏராளமாக இருக்கும்'' என்று அதிர்ச்சியுடன் சொன்னார்.

இந்த விவகாரம் குறித்து கள ஆய்வில் இருக்கும் நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பத்ரி, ''நாங்க பார்த்த வகையில 25 வருஷங்களுக்கு முன்னாடி இருந்தே பாதிப்புகள் இருக்கிறதா தெரியுது. இந்தப் பிரச்னைகளை வெளிப்படையாப் பேசினா எஸ்டேட் நிர்வாகத்தின் பகையை சம்பாதிக்க வேண்டி இருக்குமோன்னு மக்கள் பயப்படுறாங்க. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் சிலரை மருத்துவர்களிடம் காண்பிச்சோம். அவங்களும் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகளின் கைங்கர்யம்தான்னு உறுதியாச் சொல்றாங்க.

தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் 'தெய்வக்' குழந்தைகள்!

ரசாயனம் கலந்திருக்கும் நீரைத் தொடர்ந்து குடிப்பதால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுது. இப்படி பாதிப்புக்கு உள்ளான தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியோ, உடல் அங்கங்கள் பாதிக்கப்பட்டோ பிறக்க வாய்ப்பு இருக்கு. அதே நேரம், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடிப்பவர்களுக்கும் இது போன்ற குழந்தைகள் பிறக்கலாம். இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்த பெற்றோர்களைப் பற்றி ஆய்வு செஞ்சப்போ, 10 சதவிகிதத்தினர்கூட, நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடிச்சவங்க இல்லை. ஆக, காசர்கோடு மாதிரியே இங்கேயும் ரசாயனங்கள் தான் எமனாக நிற்கிறது. இந்தச் சிக்கல் இன்னும் அரசாங்கத்தோட கண்களுக்குப் போகலைங்கிறதுதான் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாவும் இருக்குது.  தோட்டங்களில் ரசாயன மருந்துகளின் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துற, கட்டுப்படுத்துற பொறுப்பைக் கையில் வைத்திருக்கும் மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத் துறையின் அலட்சியம்தான் இத்தனைக்கும் அடிப்படைக் காரணம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

இந்தப் பிரச்னை குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கிடம் பேசினோம். ''என்னுடைய கவனத்துக்கும் இந்த விவகாரம் வந்தது. ஊனமுற்ற குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முகாம்கள் நடத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால், புதிதாக இதுபோன்ற குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதாக எங்களுக்குத் தகவல் வரவில்லை. இருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று சொன்னார்.

இதுபோன்ற ரசாயனங்களுக்கு அரசு எப்போதுதான் ஒட்டுமொத்தமாக தடை விதிக்குமோ?

- எஸ்.ஷக்தி, படம்: வி.ராஜேஷ்