Published:Updated:

கடத்தப்பட்டார்களா மருகேசன் குடும்பத்தார்?

பொள்ளாச்சி கண்ணாமூச்சு

##~##
கடத்தப்பட்டார்களா மருகேசன் குடும்பத்தார்?

'குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிடப் போறோம்’- என்று கிளம்பிப் போன ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர், ஒரு மாதம் ஆகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. எங்கே போனார்கள்... என்ன ஆனார்கள்... என்று தெரியாமல்  மர்மம் இன்னமும் நீடிக்கிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொள்ளாச்சி அருகே உள்ள தாசநாயக்கன் பாளையம், சுப்பாநாயக்கன் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர்,

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரோடு அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்குப் போனார். அவருடன் மனைவி கௌரி, அம்மா வேலாத்தாள், குழந்தை விக்ரித், இரண்டாவது அக்கா மரகதம், அவரின் இரண்டு மகள்களான அருணாதேவி, திவ்யா மற்றும் மூத்த அக்காவின் மகள் கல்பனா ஆகியோர் உடன் சென் றனர்.  அதன்பிறகு, என்ன நடந்தது என்பதற்குத்தான், இன்று வரை யாரி டமும் விடை இல்லை.

கடத்தப்பட்டார்களா மருகேசன் குடும்பத்தார்?

முருகேசனின் அக்கா கணவர் காளிமுத்துவைச் சந்தித்தோம்.  ''அவர்களைக் காணவில்லை என்றதும், நான் குலதெய்வம் கோயி லுக்குப் போய் விசாரிச்சேன். '28-ம் தேதி காலை 9 மணிக்கு கோயி லுக்கு வந்தவங்க, சாய்ந்தரம் 5 மணி வரைக்கும் அங்கேதான் இரு ந்திருக்காங்க. அதுக்குப்பிறகு, பஸ் ஸ்டாப்புக்கு கிளம்பிப் போனாங்க’ன்னு தகவல் சொன்னாங்க. என் பொண்ணு கல்பனாவுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தோம். அது பிடிக்காமத்தான் முருகேசனுடன் ஓடிப்போயிட்டதா ஊருக்குள் பேசிக்கிட்டு இருக்காங்க. ஆனா, அதுல துளிகூட உண்மை இல்லீங்க. போலீஸுக்கு உடனே போய் தகவல் சொல்லிட்டேன்.

கடத்தப்பட்டார்களா மருகேசன் குடும்பத்தார்?

இப்போ அவங்களை எங்கே போய் தேடுறதுன்னு குழப்பமா இருக்குது. கோயிலுக்குப் போகும் போது 10,000 ரூபாய் மட்டும்தான் கையில எடுத்துட்டுப் போயிருக்காங்க. அந்தப் பணத்தை வச்சி ஒரு மாசம் எப்படி சமாளிச்சிருக்க முடியும் சொல்லுங்க. அவங்க உயிரோட இருப் பாங்களான்னே எனக்குச் சந்தேகமா இருக்குது'' என்று வேதனையில் புழுங்கினார்.

கடத்தப்பட்டார்களா மருகேசன் குடும்பத்தார்?

தாசநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். ''முருகேசன் மட்டும் இல்ல... அந்தக் குடும்பத்துல எல்லோருமே கடுமையான உழைப்பாளிகள். எங்களுக்குத் தெரிஞ்சவரை முருகேசன் குடும்பத்துல எந்தப் பிரச்னையும் இல்ல. பொம்பளைப் புள்ளைங்களையும் கூட்டிட்டுப் போயிருக்கான். யாராவது அவங்களைக் கடத்திட்டுப் போயிருப் பாங்களோன்னு சந்தேகமா இருக்கு. சீக்கிரமா அந்தக் குடும்பத்தை கண்டுபிடிச்சி கொடுக்கணுங்க'' என்று கலங்கினார்.

வழக்கை விசாரிக்கும் நெகமம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜுவை சந்தித்தோம். ''அந்த ஊர்க்காரங்க.. அவங்க சொந்த பந்தம்னு எல் லோரையுமே விசாரிச்சிட்டு இருக்கோம். அதோடு, தனிப்படை அமைச்சு, காணாமல் போனவர்களைத் தீவிரமாக தேடிக்கிட்டு இருக்கோம். இதுவரை எந்தத் தடயமும் எங்களுக்குக் கிடைக்கலை. கூடிய சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கு'' என்று உறுதியாகச் சொன்னார்.

காணாமல் போன முருகேசனின் செல்போன் சில நேரங்களில் ஆன் செய்யப்பட்டும், சில நேரங்களில் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டும் இருக்கிறதாம். முருகேசன் காணாமல் போய் 10 நாட்களுக்குப் பிறகு, பொள்ளாச்சியில் உள்ள அவரது உறவுக்காரப் பெண் ஒருவருக்கு முருகேசன் செல்லில் இருந்து மெசேஜ் ஒன்று போயிருக்கிறது. ஆங்கிலம் படிக்கத் தெரியாத அந்தப் பெண், அந்த மெசேஜை அழித்து விட்டாராம். முருகேசனின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, பொங்கலூர் பகுதியில் அது கடைசியாக ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதனால், பொங்கலூர் ஏரியாவை தனிப்படை போலீஸார் ஜல்லடை போட்டு அலசி வருகிறார்கள்.

முருகேசன் குடும்பத்தார் நலமுடன் சீக்கிரம் ஊர் திரும்பட்டும். அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கட்டும்.!

- பி.பி.சிவசுப்ரமணியன்

படங்கள்: தி.விஜய்

 ஆனைமலையிலும் ஐந்து பேர்?

 கடந்த வாரத்தில் ஆனைமலை அருகே நாயக்கன்பாளையத்திலும் ஐந்து பேர் ஒட்டுமொத்தமாக காணாமல் போயிருக்கிறார்கள். இந்த ஊரைச் சேர்ந்த சிவகுமார், தென்னை நார் தயாரிக்கும் நிறுவனம் நடத்துகிறார். இவரது நிறுவனத்தில் வேலை பார்த்த கீதாவும் அம்சவேணியும் பக்கத்து அருகருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள். கடந்த 23-ம் தேதி, தங்கள் மகன்களுடன் பணிக்குச் சென்றவர்கள், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பொறுத்திருந்து, பல இடங்களில் தேடிப் பார்த்து கிடைக்காமல் போகவே, மூன்று நாட்கள் கழித்து கீதாவின் கணவர் பழனிச்சாமி ஆனைமலை போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸின் ஆரம்பகட்ட விசாரணையில், இவர்கள் காணாமல் போன நாளில் இருந்து கம்பெனி உரிமையாளர் சிவகுமாரும் ஊரில் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறதாம்.

''கீதாவுக்கு ஒரு குழந்தை, அம்சவேணிக்கு இரண்டு குழந்தைகள். தங்கள் குழந்தைகளுடன் காணாமல் போன இந்த ரெண்டு பெண்களுமே 30 வயதைத் தாண்டாவதவர்கள். அதனால், இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். குடும்பப் பிரச்னை காரணமா அல்லது நிறுவன முதலாளி சம்பந்தப்பட்டு இருக்கிறாரா என்ற கோணங்களில்  விசாரணை நடந்து வருகிறது. கூடிய சீக்கிரமே கண்டு பிடித்துவிடுவோம்'' என்று சொல்கிறது போலீஸ்.

- எஸ்.ஷக்தி