Published:Updated:

சாமிக்கண்ணு, இன்னாசி, அல்போன்ஸ், பாண்டியன்...

தொடரும் கொலை பட்டியல்

##~##
சாமிக்கண்ணு, இன்னாசி, அல்போன்ஸ், பாண்டியன்...

டந்த 10 வருடங்களுக்கும் மேலாக போலீஸுக்கு  டிமிக்கி கொடுத்து வருபவர், திருச்செல்வம். முன்பு, தமிழர் விடுதலைப் படையில் இருந்தவர். லேட்டஸ்டாக, காரைக்குடி ஏரியாவில் இவர் அரங்கேற்றிய கொடூர கொலையால், அதிர்ந்து கிடக்கிறது காக்கிகள் வட்டாரம்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காரைக்குடி அருகிலுள்ள கூமாச்சிபட்டியைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவரைப் பற்றி போலீஸ் தரப்பில் சொல்லும் தக வல்கள் பதற்றம் அளிப்பதாக உள்ளன. ''இவருக்குச் சிறுவயதிலேயே தமிழர் விடுதலைப் படை ஆட்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1999-ல், இடபிரச்னையில் தனது தந்தை ராமநாதனுடன் வம்பு வளர்த்த மளிகைக் கடை உரிமையாளர் சாமிக்கண்ணுவை பைப் வெடிகுண்டு வீசி கொலை செய்ததுதான்  முதல் கொடூரம். அந்தக் கொலைக்கு திருச்செல்வத்துக்கு உடந்தையாக இருந்தவர் சீலையம்பட்டி ராஜாராம். இருவரும் தப்பி ஓடினர்.

சாமிக்கண்ணு, இன்னாசி, அல்போன்ஸ், பாண்டியன்...

அதன்பிறகு, இவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால், காரைக்குடி அருகிலேயே செங்கல் சூளை ஒன்றில் திருச்செல்வம், ராஜாராம் உள்ளிட்ட தமிழர் விடுதலைப் படையினர், கூலிஆட்கள் போல மாதக் கணக்கில் பதுங்கி இருந்தார்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் திவ்யநாதனுக்கும் இன்னாசி என்பவருக்கும் நிலப்பிரச்னை ஏற்படவே, நாகவயல் அருகே இன்னாசியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்கள். அப்போது, திவ்யநாதன் மட்டுமே போலீஸில் சிக்கினார். இதே திவ்யநாதனுக்காக, அல்போன்ஸ் என்பவ​ரையும் அடுத்து திருச்செல்வம் கோஷ்டி தீர்த்துக்கட்டியது. துப்பாக்கியுடன் போலீஸ் திருச்செல்​வத்தைத் தேடிக்​கொண்டு இருக்க,  மீண்டும் ஒருகொலை​யை கொடூர​மாகச் செய்திருக்​கிறார்'' என்று இவரது முன்​கதையைச் சுருக்க​மாகச் சொல்லி விட்டுத் தொடர்ந்தார்கள்....

''சாமிக்கண்ணு நாடாரைக் கொன்று​விட்டு தப்பி ஓடிய திருச்செல்வம் கூட்டத்துக்கு கட லூர் மாவட்டம் ஓரங்கூரைச் சேர்ந்த பாண்டியன், அடைக்கலம் கொடுத்தார். தாழ்த்தப்​பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாண்டியனுக்கும் வன்னியர் சாதியைச் சித்ரா என்ற பெண்ணுக்கும் காதல். எதிர்ப்புகளை மீறி திருச்செல்வம், அவர்களுக்குக் கல்யாணம் முடித்து வைத்தார்.

சாமிக்கண்ணு, இன்னாசி, அல்போன்ஸ், பாண்டியன்...

அதன்பிறகு, தேவகோட்டை ரஸ்தாவில் குடி இருந்த பாண்டியன்,  திருச்செல்வம் கோஷ்டியோடு சேர்ந்து பிழைப்புக்காக பல வேலைகள் செய்துவந்தார். சித்ரா, அருகிலுள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைக்குப் போனார். இதற்கு நடுவில் கல்லல் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற திருமணமான பெண்ணுக்கும் பாண்டியனுக்கும் பழக்கமானது. கணவனைக் கண்டித்தார் சித்ரா. 'அவளை விட முடியாது; அவளையும் நான் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரப் போறேன்’ என்று  பிடிவாதமாகச் சொல்லியிருக்கிறார் பாண்டியன். பஞ்சாயத்து, திருச்செல்வத்திடம் போயிருக்கிறது. அவரும் பாண்டியனை எச்சரித்திருக்கிறார்.  'டார்ச்சர் கொடுத்தீங்கன்னா, உங்களோட கூட்டு சேர்ந்து செஞ்ச காரியங்களையும் நம்மோட நெட்வொர்க் பத்தியும் நானே போலீஸ்ல சொல்லி சரண் அடைஞ்சிருவேன்’ என்று பதிலுக்கு மிரட்டி இருக்கிறார் பாண்டியன். 'இனியும் பாண்டியனை உயிருடன் விடக்கூடாது’ன்னு திருச்செல்வம் முடிவெடுக்க, சித்ராவும் சம்மதித்திருக்கிறார்.

மார்ச் 15-ம் தேதி, திருச்செல்வத்தோட கூட்டாளி ஜான் மார்ட்டின், முந்திரிக் காட்டுக்கு பாண்டியனைக் கூட்டிட்டு வந்திருக்கிறார். அங்கே தன் நண்பர் காளைலிங்கத்துடன் வந்த பாண்டியனிடம்  திருச்செல்வம் பேசிப் பார்த்திருக்கிறார். ஆனால், பாண்டியன் அடங்குவதாகத் தெரியவில்லை. அதனால அந்த இடத்லேயே பாண்டியனைக் கொடூரமாக கொன்று போட்டுருக்கிறார்கள். மொத்தம் 11 இடத்தில் கத்திக்குத்து'' என்று பதைபதைப்புடன் சொன்னார்கள்.

''பாண்டியன் வைத்திருந்த கள்ளத் தொடர்பு காரணமா இந்தக் கொலை நடக்கலை. சித்ராவுக்கும் திருச்செல்வம் தரப்புக்கும் கசமுசா ஆகியிருக்கு. டென்ஷனான பாண்டியன், இரண்டு பேரையும் கண்டிச்சிருக்கார். அந்த ஆத்திரத்தில்தான் பாண் டியனைக் காலி பண்ணிட்டாங்க'' என்றும் சிலர் சொல்கிறார்கள். இந்தக் கொலை விவகாரத்தில் சித்ரா, திருச்செல்வம், காளைலிங்கம், ஜான் மார்ட்டின் ஆகியோர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.  திருச்செல்வம் வழக்கம் போல் எஸ்கேப் ஆகிவிட்டதால், மற்றவர்களை மட்டும் 26-ம் தேதி இரவு ரிமாண்டுக்கு அனுப்பியுள்ளது.

காரைக்குடி டி.எஸ்.பி-யான மங்களேஸ் வரனிடம் பேசினோம். ''மறுநாளே பாண்டி யனின் சடலத்தைக் கண்டுபிடிச்சுட் டாலும் அதை உறுதிப்படுத்துறது பெரிய சவாலாப் போச்சு. பேப்பர்ல வந்த போட்டோவைப் பாத்துட்டு, டெய்லர் ஒருத்தர்தான், 'சார் இவரை காளைலிங்கம் கோஷ்டியோட நான் பாத் திருக்கேன்’னு துப்புக் கொடுத்தார். அடுத்து காளை லிங்கத்தைப் பிடிச்சதுமே ரூட் க்ளியர் ஆகிருச்சு. காளைலிங்கம், ஜான் மார்டின், சித்ரா இவங்களோட செல்போன் டீட் டெய்ல்ஸை எடுத்தப்ப, எல்லாம் மேட்ச் ஆயிடுச்சு. கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமான்னும் சந்தேகம் இருக்கு. மேல் விசாரணையில்தான் முழுத் தகவலும் தெரியவரும். விரைவில் திருச்செல்வத்தைப் பிடித்து விடுவோம்'' என்றார்.

வேகமாப் பிடிங்க சார்...

  - குள.சண்முகசுந்தரம்

படம்: எஸ்.சாய் தர்மராஜ்