Published:Updated:

பள்ளிக் குழந்தைகள் இதயத்தில் 'மர்மர்' சத்தம்!

ஜூ.வி. ஆக்ஷன் ரிப்போர்ட்

##~##
பள்ளிக் குழந்தைகள் இதயத்தில் 'மர்மர்' சத்தம்!

'எங்கள் ஊரில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாக அரசு மருத்துவர்கள் சொல்றாங்க’ - ஜூ.வி ஆக்ஷன் செல்லில் (044-66808002) இப்படி ஒரு தகவலைப் பதிவு செய்திருந்தவர் பெரம்பலூர் மாவட்டம் நக்கச்சேலம் பஞ்சாயத்து துணைத் தலைவரான செல்வராஜ். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெரம்பலூர் - துறையூர் செல்லும் சாலையில் இருக்கும் நக்கச்சேலம் சென்று செல்வராஜை சந்தித்தோம். ''2008-ம் வருஷம் எங்க ஊர் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களை இளஞ்சிறார் இதயப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவர்கள் பரிசோதிச்சாங்க. அப்ப 25 மாணவர்களுக்கு இதயத்தில் 'மர்மர்’ சத்தம் கேட்பதாகவும், அவர்களுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் சொன்னார்கள். அதை ஏனோ, பெற்றவர்களும் ஆசிரியர்களும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தத் தகவல் எனக்குத் தெரியவரவும், பிரச்னை உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த மாணவர்களை சந்திச்சோம். அதில் சிலருக்கு மூச்சு வாங்குவது, மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தன.

பள்ளிக் குழந்தைகள் இதயத்தில் 'மர்மர்' சத்தம்!

அதனால், அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் கடந்த மாதம் பாடாலூரில் நடந்த முதல்வர் காப்பீட்டுத் திட்ட முகாமுக்கு அழைச்சுட்டுப் போனோம். அங்கே வந்திருந்த சென்னை சூர்யா மருத்துவமனை டாக்டர்கள், 'நிறைய மாணவர்களுக்குப் பிரச்னை இருக்கிற மாதிரி தெரியுது. இரண்டு மாணவர்களுக்கு இதயத்தில் ஓட்டையும், ஒரு பொண்ணுக்கு இதய வால்வு கோணலாகவும் இருக்கிறது. அதனால், சென்னைக்கு வாங்க. எக்கோ டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்கணும்’னு சொன்னாங்க.

பள்ளிக் குழந்தைகள் இதயத்தில் 'மர்மர்' சத்தம்!

எங்கள் ஊரில் மட்டும் இவ்வளவு பேருக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதற்கு காரணம் என்ன என்று புரியாமல் விழிக்கிறோம்'' என்றார் ஆதங்கத்துடன். 

மாணவர் பிரகாஷின் தந்தை ராமஜெயம், ''என் பையனுக்கு இதயத்துல பிரச்னைன்னு சொல்றாங்க. அவங்க சொன்னதுல இருந்து குடும்பத்துல யாருமே நிம்மதியா இல்லை. வீடே சோகமா இருக்கு. தனியார் மருத்துவமனையில காட்டலாம்னா, அதுக்கு வசதி இல்லைங்க... லட்சக்கணக்கில் செலவாகுமாம்'' என்றார் கண்ணீருடன்.

பள்ளிக் குழந்தைகள் இதயத்தில் 'மர்மர்' சத்தம்!

பூங்குழலி என்ற மாணவியோ, ''ஸ்கூல்ல பிள்ளைங்ககூட விளையாட ஆசையா இருக்கும். விளையாடப் போனா, கொஞ்ச நேரத்துலயே மூச்சு வாங்கும். தலையைச் சுத்துற மாதிரி இருக்கும். சில சமயம் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாது'' என்கிறார் குழந்தைத்தனம் மாறாமல்.

மாணவர்களின் பிரச்னையை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தாரேஸ் அகமதுவிடம் எடுத்துக் கூறினோம். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தவர், ''மாணவர்களின் உடல்நிலை ரொம்பவும் முக்கியம்.

பள்ளிக் குழந்தைகள் இதயத்தில் 'மர்மர்' சத்தம்!

வர்ற 24-ம் தேதி டி.களத்தூரில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட முகாம் நடத்துவோம். அப்போ சூர்யா மருத்துவமனையில் இருந்து எக்கோ மெஷின் கொண்டுவரச் சொல்லி எல்லா மாணவர்களுக்கும் பரிசோதனை செஞ்சு பார்ப்போம். அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக் குழந்தைகளின் உடல்நிலையையும் டெஸ்ட் செய்து, அவர்களுடைய ஹெல்த்தைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்வோம்'' என்றார் அக்கறையுடன்.

மாவட்ட ஆட்சியர் சொன்னபடி கடந்த 24-ம் தேதி நடந்த முகாமில் அனைத்து மாணவர்களுக்கும் எக்கோ மெஷின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பரி சோதனைக்குப் பிறகு நம்மிடம் பேசிய சூர்யா மருத்துவமனை மருத்துவ அதிகாரி அம்பிகா, ''சினேகா என்ற மாணவிக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறது. அதனால் ஆபரேஷன் செய்தாக வேண்டும். பிரகாஷ், பூங்குழலி இருவருக்கும் இருக்கும் பிரச்னை காலப்போக்கில் சரியாகிவிடும். மருந்து, மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டால் போதும். மற்ற மாணவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பொதுவாக ஸ்டெத் வைத்துப் பார்க்கும்போது, இதயத் துடிப்பான 'லப்டப்’ சத்தத்தின் கூடவே, 'மர்மர்’ சத்தம் கேட்டால் அவங்களுக்கு பிரச்னை இருப்பதாக முடிவு செய்வோம். எக்கோ டெஸ்டிலும் அதுபோல் கேட்டால், அவர்களுக்கு சிகிச்சை அவசியம். இந்த மாணவர்களுக்கு ஸ்டெத் வைத்துப் பார்க்கும்போது 'மர்மர்’ சத்தம் கேட்கிறது. எக்கோ டெஸ்டில் அது இல்லை. வளரும் சில குழந்தைகளுக்கு காலப்போக்கில் இந்தப் பிரச்னை சரியாகவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்னைகள் நெருங்கிய சொந்தத்திலேயே திருமணம் செய்துகொள்வது, உணவில் சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால்தான் ஏற்படுகிறது'' என்றார் விளக்கமாக.

சினேகாவுக்கு ஆபரேஷன் செய்வதற்கான ஏற்பாடுகள் கலெக்டர் தாரேஷ் அகமது மூலம் நடந்து வருகிறது. சினேகாவின் தந்தை செல்வராஜ், ''பொண்ணுக்கு பிரச்னைன்னு சொன்னதுல இருந்து என்ன செய்றதுன்னு தெரியாமத் தவிச்சுட்டு இருந்தோம். இப்போ எம் பொண்ணு நல்லா இருப்பானு தைரியம் வந்திருக்கு'' என்றார் நம்பிக்கையுடன்.

  - சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி