Published:Updated:

மாறுமா அரசின் கொள்கை முடிவு?

மின்சார சிக்கலில் விவசாயிகள்

##~##
மாறுமா அரசின் கொள்கை முடிவு?

மிழகம் முழுவதும், மின்வெட்டால் ஏற்படும் அவப்பெயரை எப்படி நீக்குவது என்று அரசு கையைப் பிசையும் நேரத்தில், '30 ஆண் டுகளுக்கு முன் அரசு கொண்டுவந்த கிராமப்புற மின்வழங்கல் கட்டுப்பாட்டுக் கொள்கையை நீக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துஉள்ளது ஈரோட்டைச் சேர்ந்த தற்சார்பு விவசாயிகள் சங்கம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் பொன்னையனிடம் என்ன விவகாரம் என்று விசாரித்தோம். ''1980-களில் சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களை, 'நகர்ப்புற மின் னோட்டிகள்- கிராமப்புற மின்னோட்டிகள்’ என்று இரண்டு வகையாகப் பிரித்தது தமிழக அரசு. அதாவது, ஒரு கிராமத்தில் ஒரு தொழிற்சாலை வருமானால், அந்தத் தொழிற்சாலையை ஒட்டி வரும் பகுதியில் இருப்பவர்கள் நகர்ப்புற மின்னோட்டிகளாகக் கரு தப்படுவார்கள். அவர்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்கும். ஆனால்,

மாறுமா அரசின் கொள்கை முடிவு?

அதேகிராமத்தில் மற்றொரு பகுதியில் உள்ள விவ சாயிகள் கிராமப்புற மின்னோட்டிகள் என்ற வரம்புக்குள் இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு பகலில் ஆறு மணி நேரம், இரவில் மூன்று மணி நேரம் மும்முனை மின்சாரமும், மீதம் உள்ள 15 மணி நேரமும் இருமுனை மின்சாரமும் கிடைக்கும்.

30 வருடங்களுக்கு முன், விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் கிணற்றில் இருந்தோ, ஆற்றில் இருந்தோ கிடைத்தது. அதனால் அப்போது இந்தக் கொள்கையால் பெரியபாதிப்பு இல்லை. ஆனால், இப்போது விவசாயிகள் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளை நம்பி விவசாயம் செய்கிறார்கள். பழைய திட்டப்படி மின்சாரம் கொடுப்பதால், எங்களது பாசனத்தேவையை பூர்த்தி செய்யவே முடியவில்லை. இப்போது மின்சாரத் தட்டுப்பாடு வந்ததில் இருந்து, எங்களின் பிரச்னை இன்னும் அதிகமாகி விட்டது. எங்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம்தான் முழுமையான மின் சாரம் கிடைக்கிறது. அதனால், எங்களுக்கு மட்டும் 88 சதவிகிதம் மின்வெட்டு அமலில் இருக்கிறது. இப்படி ஒரு பிரச்னை இருப்பதே பல விவசாயிகளுக்குத் தெரியாது என்பதுதான் கொடு மையிலும் கொடுமை.

மாறுமா அரசின் கொள்கை முடிவு?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நாங்கள் தகவல் கேட்டுப் பெற்ற பிறகுதான் இந்த விவரங்களைத் தெரிந்துகொண்டோம். தமிழகம் முழுக்க உள்ள 19 லட்சத்து 22 ஆயிரம் மின்இணைப்புகளில் 30 சதவிகிதம் இணைப்புகள் கட்டுப்பாடற்ற மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் அத்தியாவசியச் சட் டத்தின் கீழ் வருகிறது. ஆனால், எங்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடு வைத்துள்ளார்கள். இந்தக் கொள் கையால் அந்தக் கிராமப் பகுதியில் உள்ள ஊராட் சிகளில் குடிநீர்த் தொட்டிகளில்கூட, தண்ணீர் ஏற்ற முடியாது. அதனால், அவர்களுக்கு வரும் இருமுனை மின்சாரத்தை, மும்முனையாக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், மின்வாரியத்துக்குத்தான் இழப்பு. மேலும், அடிக்கடி மின்பழுது ஏற்படுகிறது.

இதுகுறித்து, முதல்வர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சருக்குப் பல முறை மனுக்கள் அனுப்பியும் எந்த விதப் பயனும் இல்லை. எங்கள் நிலைமையை நன்கு உணர்ந்த அரசு அதிகாரிகள், எங்களுக்காகப்

மாறுமா அரசின் கொள்கை முடிவு?

போராடிப் பார்த்தும், தமிழக அரசு அதை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கவே இல்லை. அதனால், வேற வழியே  இல்லாமல், இப்போது நீதிமன்றத்துக்குப் போய் இருக்கிறோம். தற்போது, மின்உற்பத்தி குறைவாக உள்ளதால் விவசாயிகளின் பாடு திண் டாட்டமாகத்தான் இருக்கிறது. எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்த நீதிமன்றம் எங்கள் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு மின்சார வாரியம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நிச்சயம், எங்களுக்கு நியாயம் கிடைக்கும்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கேட்டோம். ''சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டு இருப்பதால், அரசின் எந்த கொள்கை முடிவும், நிலைப்பாட்டையும் சட்ட மன்றத்தில் மட்டும்தான் தெரிவிக்க முடியும். நீங்கள் சொல்லும் வழக்கு பற்றி இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. நிச்சயமாக என்னவென்று விசாரித்து, தேவையான முடிவு எடுக்கப்படும். மின்சார வாரியத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, முதலமைச்சர் அம்மாவின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு செல்கிறேன். அதே சமயத்தில், இருமுனை மின்சாரத்தை மும்முனை மின்சாரமாக மாற்றிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம், அப்படி செய்யக் கூடாது'' என்று சொன்னார்.

விவசாயிகளின் சோகத்தை நீதிமன்றமாவது தீர்க்கட்டும்!

- ம.சபரி

படங்கள்: க.ரமேஷ்,

ம.கா.தமிழ்ப்பிரபாகரன்