Published:Updated:

முன்னாள் அமைச்சருக்கு மனநிலை பாதிப்பு?

அதிரவைக்கும் புழல் டார்ச்சர்

பிரீமியம் ஸ்டோரி
##~##
முன்னாள் அமைச்சருக்கு மனநிலை பாதிப்பு?

சியாவில் உள்ள மிகப்பெரிய சிறைச் சாலைகளுள் ஒன்றான புழல் சிறையில் நடக்கும் சில சம்பவங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கின்றன. 

சம்பவம் 1:

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சைதாப்பேட்டை 18-வது நீதிமன்ற நீதிபதி, முன்பு ஆஜர் செய்யப்பட்டார் குமார் என்ற கைதி. திடீரென தன் உடலை பிளேடால் கீறிக் கொண்டு கோர்ட் அறையையே ரத்தக் களறியாக்கியவர், 'நீதி வேண்டும். இல்லையென்றால், இங்கேயே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன்’ என்று சொல்லி அதிர்ச்சி அடைய வைத்தார்.

சம்பவம் 2:

முன்னாள் அமைச்சருக்கு மனநிலை பாதிப்பு?

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கார் டிரைவர் கொலை வழக்கில், விசா ரணைக் கைதியாக இருக்கும் இளஞ்செழி யன், கடந்த மாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றதாகச் சொல்லப்பட்டது. இப்போது அவர், மன நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் 3:

மோசடி வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் இருக்கிறார்கள், நைஜீரியாவைச் சேர்ந்த டிக்சன், மைக்கேல், சிரேல். மார்ச் 14-ம் தேதி காலை, பைபிள் படித்துக் கொண்டு இருந்த நேரம் சிறை அதிகாரிகள் வந்திருக் கிறார்கள். காரணமே இல்லாமல் மூவரையும் அடித்துத் துவைத்திருக்கிறார்கள். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட, கடைசி நேரத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. டோக்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.

சம்பவம் 4:

கைதிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்யும் 'ஸ்பெஷல் டீம்’ கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்திருக்கிறது. அப்போது, ரியாஸ் என்பவர் பாதுகாப்பாக வைத்திருந்த மத நூலைத் தூக்கி வீசி இருக்கிறார்கள். அதனால் ரியாஸ் டென்ஷனாக, அவரை வெயிலில் மண்டி போட வைத்து, லாடம் கட்டி உள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் கடும் ஆவேசத்தில் இருக்கிறார்கள்.

சம்பவம் 5:

முன்னாள் அமைச்சருக்கு மனநிலை பாதிப்பு?

கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர், கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன், காலையில் எழுந்தவர், பித்துப் பிடித்தவர் போன்று சுற்றித் திரிய ஆரம்பித்து விட்டாராம். என்னென்னமோ உளறிக் கொட்டி இருக்கிறார். உடனே, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, சிகிச்சை கொடுக்கப்பட்ட பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளார். இங்கு நடக்கும் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல், எவரிடமும் சொல்லவும் முடியாமல் வேதனைப்பட்டு மன அழுத்தம் காரணமாகத்தான் இப்படி ஆகிவிட்டார் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

''இதுபோன்ற சம்பவங்கள் நிறையவே நடக்கின் றன, வெளியே தெரிவது மிகவும் குறைவுதான். புழல் சிறை இப்போது மனிதாபிமானமற்ற சித்ரவதைக் கூடமாகத்தான் இயங்கி வருகிறது. சிறைக் கண்காணிப்பாளராக கருப்பண்ணன் பொறுப்புக்கு வந்த பிறகு, டார்ச்சர் மிகவும் அதி கமாகிவிட்டது. அதனால், தற்கொலை முயற்சி கள் அதிகரித்து வருகிறது. ஆனால், சாகவும் முடியவில்லை என்பதுதான் வேதனை'' என்று புலம்புகிறார்கள் சில கைதிகள்.

முன்னாள் அமைச்சருக்கு மனநிலை பாதிப்பு?

சிறைத்துறை வட்டாரத்தில் பேசியபோது, ''செல்போன், நல்ல உணவு, கஞ்சா என எதுவேண்டு மானாலும் சிறையில் கிடைக்கும். அதற்காகத் தரப்பட வேண்டிய விலைதான் அதிகம். சிறை விதிமுறைப்படி வழங்க வேண்டிய சலுகைகளை வழங்கவும், காசு கேட்கிறார்கள். இதை கொடுக்காத கைதிகளை மிரட்டுவதற்காகவே, ஸ்பெஷல் டீம் சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்கிறார்கள்.

நீதிமன்றத்தில் போலீஸ் கஸ்டடி கிடைக்காத கைதி களை, வெளியில் இருந்து வரும் போலீஸார், சிறைக் குள்ளேயே வைத்து அடித்துத் துவைத்து விசாரிக்கின்றனர். இந்தக் கொடுமைக்கும் கருப்பண்ணன் உடந்தையாக இருக்கிறார்.

சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்கும் கான்ட்ராக்ட் ஆட்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வ திலும் ஊழல் செய்யப்படுகிறது.  மருத்துவப் பரிசோதனை, சட்ட உதவி போன்ற வசதிகளை கிடைக்கவே விடுவதில்லை. அதனால் பெரும்பாலான கைதிகள் சித்ர வதைக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலைக்கு முயற்சி செய் கின்றனர்'' என்று சொன்னார்கள்.

இது குறித்து, சிறைக் கைதிகள் பாதுகாப்பு மையத் தலைவர் புகழேந்தி, ''புழல் சிறையில் நடக்கும் உச்சபட்ச கொடுமைகளால்தான் கைதிகள் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். கைதிகளை நிர் வாணப்படுத்தி சித்ரவதை செய்கிறார்கள். மருத்துவப் பரிசோதனையும், சட்ட உதவிகளும் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன. புழல் சிறையில் உள்ள கண் காணிப்பாளர், ஜெயிலர் மற்றும் விசாரணை அதிகாரிகள்தான் இத்தனை சீர்கேடுகளுக்கும் காரணம்'' என்று சொன்னார்.

குற்றம் சாட்டப்படும் கருப்பண்ணனைத் தொடர்பு கொண் டோம்.

''விசாரணைக் கைதிகளைக் கடுமையாக கண்காணித்து, சீர்படுத்துவ தால் என் மீது அபாண்ட மாக புகார்களைச் சொல் கிறார்கள். நான் எஸ்.பி.ரேங்க். கைதிகளிடம் பணம் வாங்குவது உள்ளிட்ட மற்ற முறைகேடுகளில் ஈடுபட முடியாது. செல்போன், கஞ்சா போன்ற பொருட்களை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விடுகின்றனர். ஸ்பெஷல் டீம், அதைக் கண்டுபிடித்துத் தண்டிக்கிறார்கள். இதற்கு என் மீது புகார் சொல்வது அபத்தம். ரேஷன் பொருட்களில் நான் முறைகேடு செய்தால், மற்ற அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா? அந்தக் குற்றச்சாட்டும் பொய்.

கடுமையாகக் கண்காணிக்கப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக, இப்படி சில கைதிகளே என் மீது பழி சுமத்துகின்றனர்'' என்று விளக்கம் சொன் னார்.

குற்றவாளிகளைத் திருத்தும் இடமாகத்தான் சிறைச் சாலை இருக்கவேண்டுமே தவிர, தற்கொலைக்குத் தூண்டும் சித்ரவதைக்கூடமாக அல்ல!

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு