Published:Updated:

மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?

காட்பாடி சோகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?

'வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட காந்திநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவர்களையே கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அந்தப் பள்ளியே இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுகிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வந்தது. 

காந்தி நகர் சென்றோம். குமார் என்பவர், ''இது ரொம் பவும் பழமையான பள்ளிங்க. என்னோட ரெண்டு பசங்களும் இங்கேதான் படிக்கிறாங்க. மொத்தம் 85 மாணவர்களும் அஞ்சு ஆசிரியர்களும் இருக்காங்க. பள்ளி யில் கழிப்பிட வசதி வேண்டும் என்று போராடி, கடந்த ஆண்டுதான் கட்டப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஒரு கழி வறையும், மாணவர்களுக்கு என்று ஒரு கழிவறையும் இருக்கிறது. கழிவறை கட்டிய பிறகும் பள்ளிக்குத் துப் புரவுப் பணியாளர்ன்னு யாரையும் நியமிக்கவில்லை.

'மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதைத் தடுப்போம்’னு மத்திய அரசும் மாநில அரசும் சொல்லிட்டு இருக்காங்க. ஆனால், இங்கே சின்னப் பசங்களைத்தான் டாய்லெட்டுகளை சுத்தம் செய்யச் சொல்றாங்க. டாய்லெட் மட்டுமில்ல, இந்தப் பள்ளிக்கூடத்தை கூட்டி, சுத்தமா வச்சிக்கிறதும் பசங்கதான்.  

மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?

தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவுக்கு எங்களிடம் வசதி கிடையாது. அதனால்தான் எங்களைப் போன்ற ஏழைகள், அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறோம். ஆனா, எங்க பிள்ளைங்க பள்ளிக் கூடத்துக்குப் போய் டாய்லெட் சுத்தப்படுத்துறதையும், குப்பைகளைக் கூட்டி அள்ளுறதையும் பார்க்க வேதனையா இருக்குங்க. மாண வர்கள் சுகாதாரத்துக்காக, ஒரே ஒரு ஆளைக்கூட வேலைக்கு வைக்காம, இந்த சின்னஞ் சிறுசுகளை வேலை வாங்குறது பெரிய கொடுமை இல்லையா? பள்ளியோட தலைமை ஆசிரியரும் பல முறை கலெக்டர் ஆபிஸ்ல சொல்லிப் பார்த்துட்டாராம். ஆனா, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. பெற்றோர்கள் சார்பிலும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பிலும் நாங்களும் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியதுதான் மிச்சம்... எதுவுமே நடக்கலை'' என்று உணர்ச்சி வசப்பட்டார்.

மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?

காந்திநகர் வார்டு கவுன்சிலரான தி.மு.க-வை சேர்ந்த விஜயலட்சுமி, ''மாநகராட்சி கூட்டத்தில் நானே

மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?

இதுபற்றி பலமுறை பேசிட்டேன். ஆனா, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டேங் கிறாங்க. குழந்தைகள் நிலைமையை நினைச்சுப் பார்க்க வேண்டாமா? ஒரு பணியாளரை நியமிக்க ஆறு மாசமாவா இழுத்தடிப்பாங்க? இப்படி இருந்தா, யாரு வந்து பிள்ளைங்களைச் சேர்ப்பாங்க. நான் கடந்த கூட்டத்தில் இது பற்றி பேசியபோதே மேயர், 'இன்னும் அரை மணி நேரத்தில் தங்களின் பிரச்னை தீர்க்கப்படும்!’ என்று உறுதியாகச் சொன்னார். ஆனா, இத்தனை நாள் ஆகியும் எந்த முயற்சியும் எடுக்கல.  

இதுமட்டுமல்லீங்க. ராத்திரி 9 மணிக்கு மேல ஏராளமான ரவுடிகள் பள்ளிக் கூடத்துக்குள்ள போறாங்க. காம்பவுண்ட் சுவர் சின்னதா இருக்கிறதால, ஈசியா ஏறிக்குதிச்சு உள்ளே போயிடுறாங்க. டாஸ்மாக் பார் போல மொத்தமா உட்கார்ந்து குடிச்சுட்டு, ரகளை செஞ்சு பாட்டில்களை

மாணவர்களா... கழிவறைப் பணியாளர்களா?

உடைச்சுப் போட்டுட்டுப் போறாங்க. போதையில வாந்தி எடுத்து வைக்கிறாங்க. இதை எல்லாமே காலையில பசங்கதான் வந்து சுத்தம் செய்யவேண்டி இருக்கு. பசங்க கால்ல பாட்டில் குத்தி, படாதபாடு படுகிறார்கள். பள்ளிக்குப் பக்கத்தில்தான் விருதம்பட்டு காவல் நிலையம் இருக்கு. ஆனாலும், அவங்க இதைப் பத்தி கண்டுக்கிறதே இல்லை'' என்றார் ஆதங்கத்துடன்.

பள்ளித் தலைமை ஆசிரியை பங்கஜா ஸ்ரீயிடம் நிலவரம் குறித்துப் பேசினோம். ''ரொம்பவும் கஷ்டமாத்தான் இருக்குதுங்க. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எல்லாம் என்னுடைய குழந்தைகள் போல. அவர்களை நாங்கள் வேலை வாங்குவது கிடையாது. அவர் களாகவேதான் இழுத்துப் போட்டுச் செய்கிறார்கள். தண்ணீர் பிரச்னை இருப்பதால் போர்வெல் போட்டுத்தரச் சொன்னோம். பணியாளரை நியமிக்கச் சொன்னோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தைகள் மட்டும் இல்லை; நாங்களும்தான் கழிவறைகளை சுத்தம் செய்கிறோம்'' என்று வருத்தப்பட்டார்.

வேலூர் மேயரான கார்த்தியாயினியைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். ''தொடர்ந்து பல்வேறு அலுவலகப் பணி இருந்தது. அதனால், உடனடியாக அந்தப் பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயல வில்லை. அந்தப் பள்ளியின் அடிப்படைத் தேவைகளை விசாரித்து, உடனே நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கவும் முயற்சி செய்கிறேன். சமூக விரோதிகள் அந்த இடத்தைப் பயன் படுத்தாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

சொல்லாதீங்க மேடம், செய்யுங்க!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு