Published:Updated:

மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?

நீதி மன்றத்தில் நில அபகரிப்பு வழக்கு

பிரீமியம் ஸ்டோரி
##~##
மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?

முன்னாள் தொழில்துறை அமைச்சரான கரூர் சின்னசாமி,

மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?

30 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி அபகரித்தாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு நிலமோசடிப் புகார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'இன்னும் இரண்டு வாரத்தில் இந்த நிலமோசடி வழக்கு தொடர்பாக, சின்னசாமி உள்ளிட்ட அனைவரையும் காவல் துறையினர் விசாரித்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிடவே, கரூர் அரசியல் வட்டாரத்தில் ஏக ஹாட்! 

''இரண்டு ஆண்டுகளுக்கு முன், உள்ளூர் அரசியலில் டம்மி ஆக்கப்பட்டதன் காரணமாக அ.தி.மு.க-வில் இருந்து விலகி, தி.மு.க.வுக்குச் சென் றார் கரூர் சின்னசாமி. இதனால், அ.தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்ததும், தி.மு.க-வினர் மீதான நில அபகரிப்பு அசைன்மென்டில் இவரது பெயர்தான் முதலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரொம்பவும் லேட்'' என்கிறார்கள் உடன் பிறப்புகள்.

மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?

வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான பா.ம.க-வின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், ''ராயனூரைச் சேர்ந்த முருகேசனுக்கு பூர்வீக சொத்தான 7.5 ஏக்கரில் இருந்து 2.5 ஏக்கர் அவருடைய பங்காகக் கிடைச்சது. அவர் என்னிடம் நிலத்தை விலை பேசினார். அன்றைய மார்க்கெட் மதிப்பான 21.25 லட்ச ரூபாய்க்கு அதை விலை பேசி முடிச்சோம். 27.12.2007 அன்றைக்கு 50 ஆயிரம் ரூபாயை அவருக்கு முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டோம். அந்த ஒப்பந்தத்தில் முருகேசன், அவருடைய மனைவி சுசிலா, மகன் கார்த்திகேயன், மச்சினன் மாணிக்கம் எல்லோருமே கையெழுத்துப் போட்டாங்க. அந்தச் சொத்து விஷயமா உயர் நீதிமன்றத்துல ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது. அதனால நாங்க உடனே அந்த நிலத்தைக் கிரையம் பண்ணல. அதுதான் பிற்காலத்துல பெரிய தப்பாப் போச்சு. அதுக்குப்பிறகு முருகேசன் தன்னோட தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமா 5 லட்சம் வரை என்கிட்ட வாங்கிட் டார்.

மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?

இந்த நிலையில், அந்த நிலம் உள்ள இடத்துக்கு அருகில் கரூர் - திருச்சி நான்கு வழிச்சாலை வருது

மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?

என்று அரசிடம் இருந்து அறிவிப்பு வந்ததும், அந்த இடத்தின் மதிப்பு 30 கோடியா உயர்ந்தது. இதை அறிந்த சின்னசாமிக்கும், அவரது மகன் முரளிக்கும் அந்த இடத்தின் மீது கண் விழ... புரோக்கர் மூலம் இந்த இடத்தை முரளி பெயருக்கு மாற்றித் தரும்படி முருகேசனிடம் பேசி இருக்கின்றனர். முருகேசனோ, 'ஞானசேகர்கிட்ட கேளுங்க... அவர் கொடுத்தா, இடத்தை வாங்கிக்கோங்க’ என்று சொல்லி இருக்கார்.

திடீர்னு என்னை ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டார் சின்னசாமி. கட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருத்தருடன் அவரோட வீட்டுக்குப் போனேன். 'தம்பிகிட்ட சொல்லி இருக்கேன். அவன் சொல்றபடி நடந்துக்கோங்க’ன்னு சொல்லிட்டு சின்னசாமி கிளம்ப... அங்கு இருந்த அவரது மகன் முரளியும், தி.மு.க-காரர் ஒருத்தரும், நிலத்தை அவங்களுக்கு விட்டுக்கொடுக்கச் சொல்லி எவ்வளவோ நிர்பந்தப்படுத்திப் பார்த்தாங்க. நான் மறுக்கவே, 'சரி... நாங்க பாக்குற விதத்துல பாத்துக்குறோம்’ என்று சவால் விட்டனர்'' என்று, பெருமூச்சு விட்டார்.

அடுத்து, முருகேசனின் மைத்துனரான மாணிக்கம் தொடர்ந்தார். ''சின்னசாமி ஆளுங்க, என் தங்கச்சி வீட்டுக்காரர் முருகேசனை கடத்தி வைச்சு மிரட்டி நிலத்தைக் கேட்டாங்க. அவர் சம்மதிக்கவே இல்லை. அதனால அவரை சித்ரவதைப்படுத்திக் கொன்னுடுவோம்னு மிரட்டவும் பயந்துபோன என்

மோசடி செய்தாரா கரூர் சின்னசாமி?

தங்கச்சியும், தங்கச்சி மகனும் கையெழுத்துப் போட் டுட்டாங்க. மச்சானும் கையெழுத்துப் போட்டுட்டார். அதுக்காக தங்கச்சி கையில ஒரு லட்சமும், மச்சான் கையில 11 லட்சமும் கொடுத்துட்டதா சொன்னாங்க. என்கிட்ட கையெழுத்துக் கேட்டப்ப, முடியாதுன்னு மறுத்துட்டேன். அதுக்குப் பிறகு, திரும்பவும் முரு கேசனைக் காணோம். அவனை திரும்பவும் கடத்தி வச்சு, தண்ணி வாங்கிக் கொடுத்து சித்ரவதை செஞ்சு கொன்னுப்புட்டாங்க. 1.1.2009-ல் அவரை பிணமாத்தான் நாங்க பார்க்க முடிஞ்சது. சொத்தும் போயி, புருசனையும் பறி கொடுத்துட்டுட்டு என் தங்கச்சி நிராதரவா நிக்கிறா. இதுக்கெல்லாம் இந்த சின்னசாமிதாங்க காரணம்'' என்று கொதித்தார்.

மீண்டும் நம்மிடம் பேசிய ஞானசேகரன், ''முருகேசன் மரணத்தைக்கூட, தன் செல் வாக்கைப் பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்ய விடாமல் தடுத்துட்டார் சின்னசாமி. அதுக்குப் பிறகு, முருகேசன் குடும்பத்தினர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாங்க. ஆனா, அதிகாரிகள் யாரும் கண்டுக்கவே இல்லை. வழக்கை விசாரிக்க ஆர்வம் காட்டிய ஒரு சில காவல்துறை அதிகாரிகளை உடனே மாத்திட்டாங்க.

இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்த்தான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தோம். அந்த விசாரணையில்தான் இரண்டு வாரத்துல சின்னசாமி உள்ளிட்டவர்களை விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி உத்தரவு போட்டிருக்காரு'' என்றார் உற்சாகமாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சின்ன சாமியிடம் பேசியபோது, ''எனக்கும் நீங்க சொல்ற விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதையே என்னோட கருத்தா எழுதிக்கோங்க'' என்று மட்டும் சொன்னார்.  

கரூர் எஸ்.பி-யான சந்தோஷ்குமார், ''இதுவரை நீங்க சொல்ற முருகேசன் மரணம்  சம்பந்தமா எந்த ஸ்டேஷன்லயும் கேஸ் இல்ல. கரூர் சின்னசாமி உள்ளிட்டவர்களை விசாரிக்க கோர்ட்டில் இருந்து எங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரலை'' என்று, முடித்துக் கொண்டார்.

- ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு