Published:Updated:

வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?

ஆத்தூர் அடாவடி

பிரீமியம் ஸ்டோரி
##~##
வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?

'கோடை வெயில் கொளுத்துவதால் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் களைப்பைப் போக்க வேண்டும்’ என்று, முதல்வர் ஜெயலலிதா தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டார். மக்கள் தாகம் தீர்ந்து விடும் என்று பார்த்தால், நிறைய புகார்கள்தான் வந்து சேர்கின்றன. 

''தண்ணீர்ப் பந்தல் அமைத்து என் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார் ஆத்தூர் ஒன்றியச் செயலாளரும் மாவட்டக் கவுன்சிலருமான

ரஞ்சித்குமார். அதைத் தட்டிக் கேட்ட தற்கு அடிச்சிப் போட்டுட்டுப் போயிட் டாங்க'' என்று, கலங்குகிறார் ஆத்தூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுசீலா.

அவரிடம் பேசினோம். ''என்னு டைய சொந்த ஊர் ஆத்தூர் செல் லியம்பாளையம். என் வீட்டுக்காரரோட வாழப்பிடிக்காமல் தாய் வீட்டுக்கே வந்துட்டேன். எனக்கு அமுதான்னு ஒரே பொண்ணு. கூலி வேலைக்குப் போய் ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதித்து இடத்தை வாங்கி வீடு கட்டினேன். ரோட்டை அகலப் படுத்தும்போது என்னுடைய வீட்டுக்கு முன்னால் இருந்த வீடுகளை எல்லாம் இடிச்சுட்டாங்க, அதனால் என் வீடு மெயின் ரோட்டுக்கு வந்திடுச்சு. அதனால் ரஞ்சித்குமார் இந்த இடத்தை எப்படியாவது பிடுங்க நினைக்கிறார். நாலு மாசத்துக்கு முன்னால என் வீட்டுக்கு முன்னாடி அ.தி.மு.க. கொடிக் கம்பத்தை வைச்சார். அப்போ எங்க அம்மாதான் இருந் திருக்கு. வீட்டுக்கு முன்னால இப்படி வைக்கிறீங்களே, நாங்க எப்படி வெளியே போறதுன்னு கேட்ட தற்கு அடிச்சு இடுப்பு எலும்பை உடைச்சுட்டாங்க. இது சம்பந்தமா கோர்ட்ல கேஸ் நடந்துக்கிட்டு இருக்கு.

வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?
வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?

ரஞ்சித், அவங்க அண்ணன் கோபி, அவரோட சித்தப்பா தே.மு.தி.க. ஒன்றியச் செயலாளர் மாணிக்கம், முருகேசன், பச்சமுத்துன்னு 15 பேர் போன வாரம் ஒரு நாள் ராத்திரி 7.30 மணிக்கு வந்தாங்க. நான் மட்டும்தான் வீட்டுல இருந்தேன். என் வீட்டுக்கு முன் னால பந்தலைப் போட்டாங்க. இப்படிப் பந்தலைப் போடறீங்களே.. நாங்க எப்படி ரோட்டுக்குப் போறதுன்னு கேட்டேன். உடனே ரஞ்சித், என் முடிய சுழற்றிப் பிடித்துக் கன்னத்திலேயே ஓங்கி அறைஞ்சார். பிறகு அவருகூட இருந்த எல்லாருமா சேர்ந்து, 'எதிர்த்துப் பேசுனா  உயிரோட கொளுத்திடுவோம். ஒழுங்கா ஊரை விட்டு ஓடிப்போயிடு’ன்னு சொல்லி

வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?

சேலையை உருவி, ஜாக்கெட்டை கிழிச்சாங்க. அதோடு அடிக்கவும் செஞ்சாங்க. வெறியோட எட்டி எட்டி உதைச்சாங்க. அப்போ கரன்ட் இல்லை, அதுதவிர இவங்க மேல இருக்கிற பயத்துல யாரும் உதவிக்கு வரல. மயக்கம் போட்டு விழுந்துட்டேன். செத்துப் போயிட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டாங்க'' என்று கதறி அழுதார்.

அவருடைய மகள் அமுதா, ''நாலு மாசத்துக்கு முன்னால என் பாட்டியை அடிச்சாங்க. இப்ப எங்க அம்மாவை கும்பலா சேர்ந்து அடிச்சிருக்காங்க. எங்க அம்மாவை சுயநினைவு இல்லாமத்தான் ஆத்தூர் ஜி.ஹெச்-க்குக் கொண்டு போனோம். ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தும் இன்னும் ரஞ்சித் மீது எஃப்.ஐ.ஆர். போடல. ஸ்டேஷனில் கேட்டா, எதுவா இருந் தாலும் நீங்க

வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?

எஸ்.பி-கிட்ட பேசுங்கன்னு சொல்றாங்க. எஸ்.பி-கிட்ட கேட்டா, மேல் இடத்தில் இருந்து பிரஷர் வருதுன்னு சொல்றார். இதை நான் முதல்வர் அம்மாவின் கவனத்துக்கு கொண்டு போகப்போறேன், இல்லைன்னா நாங்க யாரும் உசுரோடவே இருக்க முடியாது'' என்றார்.

ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரஞ்சித்குமாரை சந்தித்து குற்றச்சாட்டு குறித்து கேட்டோம். ''அவங்க வீட்டுக்கு முன்னால பஞ்சாயத்து நிலம் இருக்கு.

வீட்டை அபகரிக்க தண்ணீர்ப் பந்தலா?

நாங்க அங்கேகூட பந்தல் போடலை. ஹைவேஸ் இடத்தில்தான் போட்டோம். அதுக்கே அந்த அம்மா வாய்க்கு வந்தபடி பேசியிருக்கு. ஏதோ கத்திட்டுப் போகுதுன்னு நம்ம ஆளுங்க பந்தலை போட்டுட்டு போயி ருக்காங்க. அன்று நான் வீட்டில் இல்லை. நாம இவ் வளவு கத்தியும் கேட்காம பந்தலைப் போட்டுட்டு போயிட்டாங்களேன்னு தி.மு.க-காரங்க பேச்சைக் கேட்டு, ஜாக்கெட்டை கிழிச் சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கலாம். எங்க ஆளுங்க யாரும் அதை அடிக்கல. அந்த இடத்தில் நான் இருந்தேன்னு யாராவது ஒருத்தர் சொன்னாகூட நான் அடிச்சதா ஏத்துக்கிறேன்'' என்றார்.

சேலம் மாவட்ட எஸ்.பி. அஷ்வின் கோட்னீஸ், ''அந்த கேஸுக்கு எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கோம். இந்த கேஸ் சம்பந்தமா விசாரிக்க நானே ஆத்தூர் போகிறேன், முழுமையா விசாரிக்கிறேன்...'' என்றார்.

அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தால், 'கரன்ட் இல்லைங் கிறதால அப்போ என்ன நடந்துச்சுன்னு தெரியலைங்க’ என்கிறார்கள் கோரஸாக.

அடப்பாவமே!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு