Published:Updated:

சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!

நாமக்கல் கலெக்டர் ஒப்புதல் வாக்குமூலம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!

'நாமக்கல்லில் சகாயம் கலெக்டராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் என்பதாலேயே, பல நல்ல விஷ யங்களை முடக்கி விட்டார்கள். நேரில் வந்தால் நிறைய தகவல்கள் தருகிறேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) அழைப்பு வந்தது. 

நமக்குப் புகார் சொல்லி இருந்த நாமக்கல் நகர அரிமா சங்க உறுப்பினரும், சர்வகட்சி ஒருங் கிணைப்புக் குழுத் தலைவருமான வாசு சீனிவாசனைச் சந்தித்தோம். ''நாமக்கல் மாவட்டத்தில் சகாயம் கலெக்டராக இருந்தபோது, உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் புறம் போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் போட்டி இருந்தார். அதற்கு, அரிமா சங்கத்தின் உதவியைக் கேட்டிருந்தார். கலெக் டரின் ஆர்வத்தைப் பார்த்து நாங் களும் மாவட்ட நிர்வாகத்தோடு

சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!

இணைந்து லத்துவாடி பஞ்சாயத்தில் 400 மரக்கன்றுகளை நட்டோம். தொடர்ந்து அவற்றைப் பராமரித்தும் வந்தோம். நன்கு வளர்ந்து வந்த மரக் கன்றுகளை இப்போது வெட்டி விட்டார்கள். சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து தலைவரின் ஆசியோடுதான் இந்த அநியாயம் நடந்திருக்கிறது.

இப்போது, நாமக்கல் மாவட்டக் கலெக்டராக இருக்கும் குமரகுருபரன்,

சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!

முன்பு இருந்த கலெக்டர் சகாயம் கொண்டு வந்த எந்தத் திட்டத்தையுமே செயல்படுத்துவது இல்லை. 'அவர் கொண்டு வந்ததை நான் எதுக்குச் செய்யணும்’னு ஈகோ பார்க்கிறார். திறமையான மாற்றுத் திறனாளிகளை தத்து எடுத்து அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து பயிற்சி கொடுப்பதற்காக 'ஊன்றுகோல் திட்டம்’ செயல்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் வசதி இல்லாத ஏழை மாணவர்களை உயர்கல்வி வரை படிக்க வைப்பதற்காக, 'உயர்கல்வி பயிற்சி அளிப்புத் திட்டம்’ இருந்தது. பொதுமக்கள் கலெக்டரை நேரில் சந்திக்காமல் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனுக்குடன் இ-மெயில் மூலம் தெரிவிக்கும் வசதி இருந்தது. அது போன்ற பிரச்னைகளுக்கு கலெக்டரும் உடனுக்குடன் பதில் அனுப்புவார். அந்தத் திட்டத்துக்கு 'தொடுவானம்’ என்று பெயர் வைக்கப்பட்டது.

சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!

உழவர் சந்தையில் உழவர்கள் சமைத்த பாரம்பரிய கிராமத்து உணவுகளை விற்பனை செய்வதற்காக, 'உழவர் உணவகம்’ அமைக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இதுபோன்று ஏகப்பட்ட திட்டங்களை, சகாயம் கலெக்டராக நாமக்கல்லுக்கு வந்த பிறகு கொண்டு வந்தார். அவற்றை சிறப்பாக செயல்படுத்தியும் வந்தார். சகாயத்துக்குப் பிறகு வந்த கலெக்டரான மதுமதி, அந்தத் திட்டங்கள் அத்தனையும் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டி, தொடர்ந்து நடத்தி வந்தார். ஆனால், இப்போது வந்திருக்கும் கலெக்டர் குமரகுருபரன், இந்த திட்டங்கள் எல்லாம் சகாயம் கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்துக்காக எல்லா வற்றையும் முடக்கி விட்டார். சகாயம் நட்ட மரங்களை வெட் டியதில் கூட கலெக்டரின் தூண்டுதல் காரணமாக இருக்குமோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. இது மாதிரியான கலெக்டர்கள் இருந்தால் அரிமா சங்கங்களும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் எப்படி அரசாங்கத்தோடு இணைந்து சேவை செய்ய முன்வருவார்கள்? மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் வரை புகார் அனுப்பி இருக்கோம்'' என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!

லத்துவாடி பஞ்சாயத்துத் தலைவரான குமரவேலிடம் மரங்கள் வெட்டப்பட்டது பற்றி கேட்டோம். ''தனிப்பட்ட நபர் ஒருவர்தான் மரத்தை வெட்டி இருக்கிறார். அவருடைய சொந்த இடத்தில் மரங்கள் வைத்து விட்டதாகப் பிரச்னை கிளம்பியது. மத்தபடி எனக்கும் அந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று பட்டும்படாமலும் சொன்னார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் வேண்டி நாமக்கல் கலெக்டர் குமரகுருபரனைச் சந்தித்தோம். ''400 மரங்களை வெட்டிய தகவல் இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. நான் தாசில்தாரை அனுப்பி விசாரிக்கச் சொல் கிறேன். தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கச் சொல்றேன். அவர்கள் சொல்லும், தொடுவானம், உழவர் உணவகம், ஊன்றுகோல் திட்டம் ஆகிய அனைத்துமே சகாயம் என்ற தனிப்பட்ட ஒருவரின் எண்ணத்தில் உருவான திட்டங்கள். அரசின் திட்டங்கள் கிடையாது. அப்படி தனிப்பட்ட ஒருவர் கொண்டு வந்த திட்டங்களை நான் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் கொண்டுவந்த திட்டங்களை நான் செயல்படுத்தத் தவறினால் அதற்கு பொறுப்பு ஏற்கிறேன். மற்றபடி அவரு கொண்டு வந்தாரு.. இவரு கொண்டு வந்தாருன்னு சொல்லும் திட்டங்களை எல்லாம் செயல்படுத்த முடியாது'' என்றார்.

யார் கொண்டு வந்ததாக இருந்தால் என்ன... நல்ல திட்டங்களை எல்லோரும் செயல் படுத்தலாமே கலெக்டர் சார்?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு