Published:Updated:

கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?

விருதுநகர் வில்லங்கம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?

ள்ளக் காதலியின் கணவரைக் கொலை செய்த விவகாரத்தில், தனது அரசியல் செல்வாக்கால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தப்பிவந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது விருதுநகர் போலீஸ். இந்த விவகாரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திர னும் விரைவில் சிக்குவார் என்று சொல்லப் படுவதால், மாவட்ட தி.மு.க. அதிர்ச்சியில் இருக்கிறது. 

கடந்த 30.9.2007 இரவு ஒரு மணி. இருக்கன்குடி - அருப்புக் கோட்டை சாலையில் ஒருவரின் உடலை சாலையில் கிடத்தி, ஒரு டாடா சுமோ வாகனத்தை அந்த உடல் மீது ஏற்றி நசுக்கிக்கொண்டு இருந்ததாகவும்,  அப்போது அந்த வழியாகச் சென்ற பஸ் டிரைவர் இளங்கோ, பஸ்ஸை நிறுத்தி சத்தம் போட்டதாகவும் காரைக் கிளப்பிக்கொண்டு அந்த

கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?

ஆட்கள் தப்பித்து ஓடி விட்டதாகவும் அப்போது தகவல் பரவியது.  டிரைவர் இளங்கோ, சம்பந்தப்பட்ட  கார் எண்ணைக் குறித்து, பந்தல்குடி போலீஸாருக்கு  தகவலைச் சொல்லி இருக்கிறார்.

அப்போதுதான் தெரிந்தது அது, லட்சுமணன் என்ப வரின் உடல் என்று . ''போஸ்ட் மாஸ்டராக இருந்த லட்சு மணனின் மனைவி மாரியம்மாளுக்கும், அருப்புக்கோட்டை. ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் ஹமீது என்பவருக்கும் நட்பு  இருப்பதாக ஊருக்குள் செய்தி பரவி இருந்த நேரத்தில்தான், இந்த சம்பவம் நடந்தது'' என்றும் தகவல் சொல்லப்பட்டது.

அதனால், மறுநாளே போலீஸார் சாகுல்ஹமீதை நெருங் கினார்கள். ஆனால் அவர், தி.மு.க. முக்கியப் பிரமுகர்  ஒருவரிடம் சரண்டர் ஆகவே, இந்த வழக்கை 'சந்தேக மரணம்’ என்று முடித்து விட்டார்கள். இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கு உள்ளாகவே,

கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?

சாகுல் ஹமீதின் மனைவி மும்தாஜும் மர்மமான முறையில் இறந்து போனார்.

இந்தச் சம்பவங்கள் நடந்து, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலை யில் விருதுநகரில் கூடுதல் பொறுப்பை ஏற்றார் மதுரை எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க். உடனே, இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் மாரியம்மாள் ஆகியோரைக் கைது செய்துள்ளது போலீஸ்.

இதுகுறித்து, விருதுநகர் கூடுதல் எஸ்.பி. சாமிநாதனிடம் பேசி னோம். ''சாகுல் ஹமீதுவின் தங்கை நாகூரம்மாளும் மாரியம்மாளும் பள்ளித் தோழிகள். நாகூரம்மாள் வீட்டுக்கு மாரியம்மாள் அடிக்கடி போய் வந்தபோது சாகுல் ஹமீதுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. லட்சுமணன் அதைக் கண்டித்ததால், அவரைக் கொலை செய்ய இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள்.

கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?

கடந்த 30.9.2007 அன்று, சமாதானம் செய்து வைக்கிறேன் என்று, கணவன், மனைவி இருவரையும் அருப்புக்கோட்டைக்கு வரவழைத்து இருக்கிறார் சாகுல் ஹமீது. பிறகு, இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு லட்சுமியாபுரம் அருகே சென்று, பெரிய டார்ச் லைட்டால் லட்சுமணனின்

கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?

பின்தலையில் தாக்கி, அவரது உடல் மீது காரை ஏற்றி நசுக்கி இருக்கிறார்கள். திடீரென்று, எதிரே டவுன் பஸ் வரவும், பதட்டம் அடைந்து காரில் தப்பி விட்டார்கள். சாகுல் ஹமீதும் மாரியம்மாளும் தாசில்தார் முன்னிலையில், ''நாங்கள்தான் கொலை செய்தோம்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றனர். சாகுல் ஹமீதுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றி விசாரித்து வருகிறோம்...'' என்றார்.

போஸ்ட் மாஸ்டர் லட்சுமணன் கொலை வழக்கில் கைதான அருப்புக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல்ஹமீது போலீஸில் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், 'கொலை நடந்ததும் அப்போது அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் தகவல் சொன்னேன். 'நீ போ... நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார். அதனால்,  போலீஸில் இருந்து எந்தப் பிரச்னையும் வரவில்லை’ என்று கூறி இருக்கிறாராம்.

இந்தத் தகவலை அறிந்துகொண்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., இந்தக் கொலை வழக்கில் போலீஸ் தன்னைக் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கருதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 4-ம் தேதி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது, விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். அவர் சார்பில் பேசிய வழக்கறிஞர் மாரியப்பன், ''இது அரசியல் ரீதியான நடவடிக்கை. எந்த வகையிலும் இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குத் தொடர்பு கிடை யாது. இதனை சட்டப்படி சந்திப்போம்'' என்று சொன்னார்.

பார்க்கலாம்!

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு