Published:Updated:

தில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்?

தேவநாத சுவாமி திருக்கோயில் மல்லுக்கட்டு!

பிரீமியம் ஸ்டோரி
##~##
தில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்?

டலூர் திருவந்திபுரம் என்னும் திருவகீந்திர புரத்துக்குப் புராண வரலாறு உண்டு. அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும்போது ஒருபகுதி மலை சரிந்து விழுந்ததாம், அதுதான் இப்போது இருக்கும் ஒளஷத மலை என்கிறார்கள். இந்த மலையில் ஹயக்கிரீவரும் கீழே செங்கமலத் தாயார் சமேத தேவநாத சுவாமியும் அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு, வரும் 25-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருக்கும் சூழலில்தான், பல்வேறு பிரச்னைகளும் எட்டிப் பார்க்கின்றன. 

இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர் பொறுப்பில் இருக்கும் நீலமேக பட்டாச்சாரியார் குடும்பத்துக்கு எதிராக வேத பாராயணக்காரர்களும், ஸ்ரீபாதம் தாங்கிகளும் பொங்கித் தீர்க்கிறார்கள்.

காலையில், நடை திறந் ததும் முதலில் ஹரிஓம் சொல்லி வேதம் பாடுவது வேதபாராயணக்காரர் களின் வேலை. ஆனால், 'அதைப் பாடக்கூடாது; உங்களுக்கு அந்த உரிமை இல்லை’ என்று பட்டாச்சாரியார் குடும்பம் தடுத்து விட்டதாம்.

தில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்?

''இந்தக் கோயிலுக்குச் சேவை செய்ய 60 அந்தணர் குடும்பங்களும் 100-க்கும் மேற்பட்ட மற்ற குடும்பங்களும் இருக்கின்றன. ஏதாவது ஒரு விசேஷம் என்றால் ஒரு குடும்பத்துக்கு இரண்டு பேர்

தில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்?

வீதம் கிட்டத்தட்ட 120 பேர் வரை கோயிலில் திரள்வோம். ஆனால், இப்போது 10 பேர்கூட கோயிலுக்குப் போவதில்லை. காரணம்... நரசிம்ம பட்டாச்சாரியார் குடும்பம்தான். நாங்கள் வந்தால் அவரது வருமானத்துக்குப் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில், எங்களை அவ மானப்படுத்தி விரட்டுகிறார். நாங்கள் வேதம் பாடக்கூடாது என்றும் தடுக்கிறார்'' என்கிறார்கள் வேதபாராயணக்காரர்கள்.

சுவாமி புறப்பாட்டின்போது பெருமாளைத் தூக்கிச் செல்வோர் ஸ்ரீபாதம் தாங்கிகள். அவர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டதாம் பட்டாசாரியார் குடும்பம். ஸ்ரீபாதங்களுள் ஒருவரான ஸ்ரீதரன், ''கோயில் சாவி பட்டாச்சாரியாரிடம் இருப்பதால் அவர் நினைத்தால்தான் கோயில் திறக்கப்படும். யாராவது அவரைத் தட்டிக் கேட்டால், உடனே கோயிலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். அதனால் நிர்வாகம்கூட, அவருக்குக்

தில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்?

கட்டுப்பட்டே நடக்கிறது. எந்த உற்சவத்துக்கு எந்த அலங்காரம் செய்வது என்று ஒரு விதிமுறை இருக்கிறது. அதைக்கூட அவர்கள் கடைப்பிடிப்பதே இல்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் அலங்காரம். அதுபோல நாம் எடுத்துச் செல்லும் எதையும் அவ்வளவு சுலபத்தில் சுவாமிக்குச் சாத்தி விட மாட்டார்கள். அதற்கும் அவர்கள் மனசு வைக்க வேண்டும்'' என்று கொதித்தார்.  

15 வருடங்கள் கோயிலில் வேலை பார்த்து, இப்போது வெளியேற்றப்பட்டு இருக்கும் அய்யனார், ''பட்டாச்சாரியார் குடும்பத்தார்களை யாருமே தட்டிக் கேட்க முடியாது. கேட்டால் எதையாவது சொல்லி, போலீஸில் சிக்கவைத்து கோயிலில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். வருமானத்தில் குறியாக இருப்பார்களே தவிர, முறையாக எதையும் செய்வதில்லை. தாயார் சன்னதியில் சடாரி வைப்பதில்லை, மஞ்சள் கொடுப்பதில்லை, தீர்த்தம் தருவதில்லை. இவர்கள் குடும்பத்தில் ஆள் இல்லை என்பதால் நரசிம்மர், சக்கரத்தாழ்வார், தேசிகர், ராஜகோபாலசாமி, ராமர், ரங்கநாதர், சன்னதிகளுக்குத் தனியே அர்ச்சகர் கிடையாது. அதற்கெல்லாம் ஊரில் இருக்கும் மற்ற குடும்பத்து அந்தணர்களை அர்ச்சகர்களாகப் நியமிக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நெடுநாள் கோரிக்கை. அதைச்செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். இப்படி கோயிலை ஒரு குடும்பத்துச் சொத்தாக மாற்றி விட்டார்கள். இப்போது கும்பாபிஷேக பணிகளில் புகுந்து விளையாடுகிறார்கள். தாயாருக்குத் தங்கத்தேர் செய்வதாக பல கோடி ரூபாய் வசூல் செய்கிறார்கள். தாயாருக்குச் சாத்தப்படும் பட்டு, வெள்ளி, தங்கம் ஆகியவை கோயில் கணக்குக்கு வருவதே இல்லை'' என்று புகார் பட்டியல் வாசித்தார்.

இதற்கான முறையான பதிலைப் பெற நீலமேக பட்டாச்சாரியாரைச் சந்திக்கச் சென்றோம். அவரும், அவரது மகன் நரசிம்ம பட்டாச்சாரியாரும் நம்மிடம், ''நாங்கள் செய்கிற எல்லாப் பணிகளையும் கோயிலில் முறையான அனுமதி பெற்றே செய்கிறோம். வரும் 25-ம் தேதி இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான், இப்படி அவதூறு கிளப்புகிறார்கள். நன் கொடைக்கும், தங்கத்தேர், அம்பாளுக்கு சாத்தப்படும் தாலி, வெள்ளி, வஸ்திரம் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது. எந்த விதமான ஆடிட்டிங் அல்லது விசாரணை வந் தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

வேதபாராயணம் செய் கிறவர்கள், அவர்கள் வேலை களை மட்டும் செய்தால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அவர்கள் எங்கள் வேலைகளில் குறுக்கிடுவதைத்தான் எதிர்க்கிறோம். அதே போல், ஸ்ரீபாதம் தாங்கிகளாக இருப் பவர்களுக்குள்தான்  பிரச்னை. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. பெருமாளுக்குச் சேவை செய்வதை நாங்கள் கடமையாகச் செய்கிறோம். எங்கள்மீது குற்றம் சொல்வதையே அவர்கள் தொழிலாகச் செய்கிறார்கள்'' என்று சொன்னார்கள்.

கோயில் நிர்வாகத் தரப்பில் கேட்டால், ''எல்லா பிரச்னைகளும் நீதிமன்றத்தில் வழக்குகளாக இருப்பதால், அதுபற்றிக் கருத்து கூற முடியாது. கும்பாபிஷேகம் நடக்க அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்'' என் கிறார்கள்.

இனி, கடவுள்தான் வழி காட்டவேண்டும்!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு