Published:Updated:

டெல்டாவுக்கு ஆபத்து!

மீத்தேன் தொழிற்சாலை அபாயம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
டெல்டாவுக்கு ஆபத்து!

நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படும் டெல்டா  விவ சாயிகளைப் பதற வைத்துள்ளது, ஒரு மீத்தேன் தொழிற்சாலை. 'திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி, தங்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் முயற்சி’ என்று போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர் திருவாரூர் மாவட்ட விவசாயிகள். 

''இந்தத் திட்டம் மூலம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு மட்டும்தான் வருமானம் கிடைக்குமே தவிர, அரசுக்கு எவ்விதமான பயனும் வருமானமும் கிடையாது. மத்திய அரசுக்கு ராயல்டியாக சிறு தொகை மட்டுமே கிடைக்கும்.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நீடாமங்கலம், வலங்கை மான், மன்னார்குடி உள்ளடக்கிய தாலுகா பகுதிகளில் சுமார் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மீத்தேன் வாயு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டாவுக்கு ஆபத்து!

முதற்கட்டமாக சித்தாடி, குடவாசல், மேலப்பனையூர், மனுவச்சேரி, ஓகை, கீழபாளையூர், கமுககுடி, பத்தூர், கொரடாச்சேரி, அரப்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், சாரனத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், கீழவடையல், ராஜேந்திரநல்லூர், நாரத்தாங்குடி, கண்டியூர், அனுமந்தபுரம், பூவனூர், கீழவாந்தசேரி, அரிச்சபுரம், கோவில்வெண்ணி, ஆதனூர், அன்னவாசல், காளாச்சேரி,  கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், பருத்திக்கோட்டை, காளாஞ்சிமேடு உள்ளிட்ட 36 கிராமங்களில் ஆழ்துளைக் கிண றுகளும், இரண்டு இடங்களில் சோதனைக் குழாய் கிணறுகளும் தோண்டுவதற்காகத் திட்டம் போடப்பட்டுள்ளது. இந்த

டெல்டாவுக்கு ஆபத்து!

முயற்சியால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிந்து விடும்'' என்று, பதற்றத்துடன் தெரிவித்தனர் விவசாயிகள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம். ''ரியல் எஸ்டேட்காரர்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக் கப்பட்டு வரும் டெல்டா விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது. மீத்தேன் வாயு வணிக ரீதியில் எடுக்கப்படும் போது, பூமியில் இருந்து வெளியேற்றப்படும் மிகப்பெரிய அளவிலான உப்புநீரால்,

டெல்டாவுக்கு ஆபத்து!

இந்தப் பகு தியில் 1.9 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிந்தே போய்விடும். மேலும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆறுகளில் விடுவதால் மண் வளமும் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். வெளியேற்றப்படும் கழிவுநீர் காற்றோடு கலந்தால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு மருந்தில்லா நோய்களுக்கு ஆளாகவேண்டிய நிலையும் ஏற்படும்.

ஏற்கெனவே, இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் படு பாதாளத்துக்குச் சென்று நீரின் தன்மையும் மாறிவிட்டது. இதன் விளைவாகத்தான் திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு 10 ஆண்டுகளாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எங்கள் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி இல்லை. ஏனென்றால், நவீன முறையில் முழுக்க முழுக்க இயந்திரங்களைத்தான் பயன்படுத்தப் போகிறார்கள். இதே பணியை அரசின் பொதுத்துறை நிறுவனமான இயற்கை எரிவாயுத் துறை மூலம் நிறைவேற்றி இருந்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு மதிப்பு கொடுத்து இருப்பார்கள். எங்கள் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசின் முயற்சியைத் தடுக்க நாங்கள் மாநில அரசைத்தான் நம்பியுள்ளோம்' என்று விரக்தியுடன் முடித்தார்.

டெல்டாவுக்கு ஆபத்து!

காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கப் பொதுச்செயலாளர் 'காவிரி’ ரெங்கநாதன், 'திருவாரூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு மீத்தேன் வாயு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. எரிவாயு வெளியேறும் அளவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றால், அதனைக் கொண்டுவர பூமிக்குள் சில ரசாயனப் பொருட்களை குழாய் மூலம் உள்ளே செலுத்தி வெளிக்கொண்டுவர முயற்சி செய்வார்கள். இதனால், பூமியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். பூமியின் மேற்பகுதியில் வெடிப்புகள் ஏற்படுவதோடு வெளிப்படும் தண்ணீர், மண்ணின் தன்மையை அழித்து நீரைச் சேமிக்கும் திறனையும் குறைத்து விடும். இந்தப் பகுதியில் பழுப்பு நிலக்கரி இருப்பது 1940-களிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் விவசாயம் பாதிக்கும் என்பதால் நிறுத்தி வைத்திருந்தார்கள்.

உணவு ஆதாரத்தைவிட மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் மீத்தேன் வாயு முக்கியமா?  விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள சிறு, குறு விவசாயிகளும் கூலித்தொழிலாளர்களும் வாழ் வாதாரத்தை இழப்பார்கள். எனவே, தமிழக முதல்வர் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளையும் மக்களை பாதுகாக்க வேண் டும்'' என்று கேட்டுக் கொண் டார்.

திருவாரூர் மாவட்டக் கலெக்டர் நடராஜனை சந்தித்து விளக்கம் கேட்டோம். ''நான் இப்போதுதான் பதவி ஏற்று இருக்கிறேன். விவசாயிகள் போராட்டம் பற்றி அறிந்தேன். மண்டலப் பொறியாளர்களை அழைத்துப் பேசி விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக் கப்படும்'' என்றார்.

எரிவாயு பிரச்னை தீர்ந்து விவசாயிகள் மனம் குளிரட்டும்!

- க.ராஜீவ் காந்தி

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு