Published:Updated:

நண்பர்களுக்கு என்ன ஆச்சு?

குழப்பத்தில் ஐ.ஐ.டி. மரணம்

##~##
நண்பர்களுக்கு என்ன ஆச்சு?

ல்விச் சாதனை என்ற வகையில் சென்னை ஐ.ஐ.டி-யின் பெயர் அவ்வப் போது நாளிதழ்களில் அடிபடும். இப்போது ஒரு மர்ம மரணம் ஐ.ஐ.டி-யை அலற வைத்துள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து, கடந்த 11-ம் தேதி கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல துர்நாற்றம் அதிகரிக்கவே, கால்வாயைச் சோதனை போட்டனர். அப்போதுதான் அதில் அழுகி, சிதைந்த நிலையில் ஒரு பிணம் கிடப்பது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்களின் துணையுடன் பிணத்தை மீட்ட காவல் துறையினருக்குக் கடும் அதிர்ச்சி. எந்த அடையாளமும் தெரியாத வகையில் முகம் கோரமான முறையில் சிதைக்கப்பட்டு இருந்தது. பிணத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையில் இறங்கியது போலீஸ்.

நண்பர்களுக்கு என்ன ஆச்சு?

'ஐ.ஐ.டி-யில் வாட்ச்மேனாக வேலைப் பார்த்த அப்துல் காலிக் என்பவர் ஜூன் 5-ம் தேதியில் இருந்து காணவில்லை’ என்று ஒரு புகார் காவல் நிலையத்தில் ஏற்கெனவே பதிவாகி இருக்கவே, விசாரணையில் அது காணாமல் போன அப்துல் காலிக் என்றே உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அப்துல் காலிக் தங்கி இருந்த அறையில் விசாரிக்கச் சென்ற போலீஸாருக்கு குழப்பத்துக்கு மேல் குழப்பம்.

வழக்கை விசாரிக்கும் கோட்டூர்புரம் போலீஸாரிடம் பேசினோம். ''அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் காலிக் கடந்த ஒரு வருடமாக வேளச்சேரியில் தங்கி வருகிறார். அப்துல் காலிக்குடன், ஐ.ஐ.டி-யில் பணிபுரியும் வேறு சில வட மாநில நபர்களும் தங்கி இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, எந்த உருப்படியான தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவருடன் தங்கி இருந்த தேவன் ரூபிகூல், சைசுதீன் என்ற இருவரையும் காணவில்லை. அவர்களும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் திடீரென காணாமல் போயிருப்பதால், கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடி வருகிறோம். ஆனால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், 'இது தற்கொலை’ என்று சொல்கிறது. அதனால் இந்தக் கொலை எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது'' என்றார்கள்.

காணாமல் போயிருக்கும் தேவன் ரூபிகூல் மற்றும் சைசுதீனுக்கும் ஏதாவது விபரீதம் நேர்ந்திருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்தான், முழு உண்மையும் தெரியவரும்!

- ஜோ.ஸ்டாலின்