Published:Updated:

இரண்டு வருடங்கள் காத்திருந்து... நம்ப வைத்து கழுத்தறுத்து...!

தஞ்சையில் கெளரவக் கொலை!

##~##
இரண்டு வருடங்கள் காத்திருந்து... நம்ப வைத்து கழுத்தறுத்து...!

சாதி மாறி காதல் திருமணம் செய்ததால் நடந்த கௌரவக் கொலையைக் கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள் தஞ்சை வாசிகள்!   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட் டையைச் சேர்ந்த தலித் சமூக இளைஞர் மாரிமுத்துவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அபிராமியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் சென்னைக்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு, சௌந் தர்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. கோபத்தை மறந்து உறவுகள் நெருங்கி வரவே, சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.

சௌந்தர்யாவின் முதல் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட விரும்பினார்கள். அதற்காகப் புது உடைகள் வாங்குவதற்காகத் தஞ்சாவூர் சென்ற மாரிமுத்து திரும்பவே இல்லை. மறுநாள் சூரக்கோட்டை ஆற்றின் கரையோரம் கழுத்து அறுக்கப்பட்டு, இடது கை வெட்டப்பட்ட நிலையில் மிகக்

இரண்டு வருடங்கள் காத்திருந்து... நம்ப வைத்து கழுத்தறுத்து...!

கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக் கொலை தொடர்பாக அபிராமியின் தந்தை பழனிமேகம் மற்றும் அண்ணன் அருண் குமார் ஆகியோர் போலீஸில் சரண் அடையவே, சாதி மோதல் வரும் அளவுக்குப் பதற்றத்தில் இருக்கிறது ஏரியா.

காதல் கணவரைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த அபிராமியை தேற்றிப் பேசினோம். ''நான் ஒரத்தநாடு தனியார் கல்லூரி ஒன்றில் டீச்சர் டிரெய்னிங் படிச்சேன். அவரு (மாரிமுத்து) செல்போன் கம்பெனியில் சேல்ஸ் ரெப்பா வேலை பார்த்தார். தினமும் ஒரே பஸ்ஸில் போயிட்டு வந்தோம்.  அப்போதான் ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சோம். திடீர்னு என் வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு போய், என்னை அடிச்சாங்க. மாரிமுத்து வீட்டுக்குப் போய் மிரட்டினாங்க. அதனால ரெண்டு பேரும் ஓடிப்போய் கும்பகோணத்துல கல்யாணம் செஞ்சுக்கிட்டு, சென்னைக்குப் போயிட்டோம்.

அம்பத்தூர்ல ஒரு கார் கம்பெனி யில் வேலை பார்த்தார். குடும்பம் நல்லபடியாப் போச்சு. திடீர்னு ஒரு நாள் எங்க அண்ணன் அருண்குமார், அவரோட செல்போனுக்குப் பேசினார், 'என் தங்கச்சியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு முறை அவகிட்ட பேசிக்கிறேன்’னு சொல்லி இருக்கார். நானும் பேசினேன். நல்லா அக்கறையாகப் பேசினார். ஆனாலும், நாங்க இருக்கிற இடத்தை மட்டும் சொல்லலை. ஒரு வருஷத்துல சௌந்தர்யா பிறந்தாள். செலவு கட்டுப்படியாகலை. அவரோட வீட்ல கூப்பிட்டாங்க. குழந்தை பிறந்ததால எங்க குடும்பத்துக்கும் கோபம் குறைஞ்சிருக்கும்னு நினைச்சு தஞ்சாவூருக்கு வந்துட்டோம். அவரோட வீட்லதான் இருந்தோம். அவரு தஞ்சாவூர்ல கிடைக்கிற வேலையைப் பார்த்துட்டு நிம்மதியா இருந்தோம். என் அண்ணனும் அடிக்கடி அவருகிட்ட பேசுவார். ரோட்டுல எதிர்பட்டா, அக்கறையா விசாரிப்பார்.  

இரண்டு வருடங்கள் காத்திருந்து... நம்ப வைத்து கழுத்தறுத்து...!

சௌந்தர்யாவுடைய முதல் பிறந்த நாளுக்காக டிரஸ் வாங்க தஞ்சாவூர் போனார். அப்போ என்

இரண்டு வருடங்கள் காத்திருந்து... நம்ப வைத்து கழுத்தறுத்து...!

அண்ணன் அருண்குமார், 'மச்சான்... புள்ளைக்குச் செயின் வாங்கி இருக்கேன். வந்து வாங்கிக்கோங்க’னு கூப்பிட்டு இருக்கார். அங்கே என்ன நடந்துச்சோ. மறுநாள் பொணமாத்தான் பார்த்தேன்'' என்று அழ ஆரம்பித்தார்.

மாரிமுத்துவின் தந்தை பழனிவேல், ''சென்னையிலேயே இருந்திருந்தா என் மகன் உயிரோட இருந்திருப்பான். கோபமெல் லாம் போயிருக்கும்னு நினைச்சுத்தான் ஊருக்கு வரச் சொன்னோம். நம்ப வெச்சு கழுத்தை அறுத்துட்டானுங்களே...'' என்று கதறினார்.

விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், ''மாரிமுத்துவுக்கு டாஸ்மாக்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அருண்குமார் அஞ்சு லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு கூலிக்கு ஆட்கள் பிடித்து, இவர்களும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இப்போது, 'தலித்தின் வாரிசு எங்கள் மகளின் வயிற்றில் பிறந்திருக்க கூடாது’ என்று கூறி மாரிமுத்துவின் குழந்தையையும் கொல்ல முயற்சி செய்கின்றனர்'' என்று தெரிவித்தார்.  

போலீஸிடம் சரண் அடைந்த அருண்குமார் மற்றும் அவரது தந்தை பழனிமேகம் இருவரும், ''எங்க வீட்டுப் பெண்ணை திட்டமிட்டு ஏமாற்றி மாரிமுத்து திருமணம் செய்து கொண்டான். அதனால்தான் நாங்கள் கொலை செய்தோம். அதற்காக நாங்கள் கொஞ்சமும் வருத்தப் படவில்லை'' என்று தெனாவெட்டாகவே சொல்லி இருக்கிறார்களாம்.

இதுவே தமிழகத்தில் நிகழ்ந்த கடைசி கௌரவக் கொலையாக இருக்கட்டும்!

- நமது நிருபர்

படங்கள்: கே.குணசீலன்