Published:Updated:

உயிர் குடிக்கும் குவாரிகள்!

துவாக்குடி டேஞ்சர்

##~##
உயிர் குடிக்கும் குவாரிகள்!

'திருச்சி மாவட்டம் துவாக் குடியில் இருக்கும் குவாரி களில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்கின்றன. ஆனாலும் தீர்வுக்கான முயற்சி எடுக்கப்படவே இல்லை’ என்று, ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044- 66808002) ஓர் ஆதங்கக் குரல் கேட்டது. நேரில் சென்றோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''துவாக்குடியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் இருக்கும் குவாரி களில் பள்ளங்கள் நிறையவே இருக்கின்றன. 300 அடி ஆழம் வரை உள்ள குவாரிகளில், பாதி அளவு மழை நீர் தேங்கி நிற்கிறது. குவாரிகளை ஏலம் எடுத்து கல் வெட்டி எடுத்த கான்ட்ராக்டர்கள், அந்தப் பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து மூடி இருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு, பள்ளங்களை அப்படியே விட்டுச் செல்கின்றனர். அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் மக்கள் எதிர்பாராத வகையில் அந்தப் பள்ளத்தில் விழுந்து உயிரை இழக்கிறார்கள். அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அய்யனார் கோவிலைச் சேர்ந்த செல்வேந்திரன், காமாட்சி

உயிர் குடிக்கும் குவாரிகள்!

என்ற சகோதரர்கள் கடந்த வாரம், பள்ளத்தில் சறுக்கி விழுந்து இறந்து போனார்கள்'' என்று ஆத்திரத்துடன் சொன்னார்கள் ஏரியாவாசிகள்.

இந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வான தே.மு.தி.க-வைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் பேசினோம். ''குவாரி பிரச்னை பற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, 'விரைவில் வேலி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை. துவாக்குடி நகராட்சி

உயிர் குடிக்கும் குவாரிகள்!

நிர்வாகத்திடம் திட்ட அறிக்கையும், எஸ்டிமேட்டும் தயாரித்துத் தரச்சொல்லிக் கேட்டேன். அவர்களும் தரவில்லை. நான், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்கத் தயாராக இருந்தாலும், திட்டம் தயாரித்துத் தராமல் இழுத்தடிக்கின்றனர். நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால், மக்களிடம் நல்ல பெயர் எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பிரச்னையை இழுத்தடிக்கிறார்கள்'' என்றார் வேதனையுடன்.

துவாக்குடி நகராட்சித் தலைவர் காயாம்புவிடம் (தி.மு.க.) பேசினோம். ''நான் சென்ற முறை நகராட்சி சேர்மனாக இருக்கும்போதே இந்தப் பள்ளங்களுக்குத் தடுப்புச் சுவர் கட்டத் திட்டம் தயாரித்தோம். அந்தத் திட்டம் வேண்டாம் என்ற இப்போதைய அரசு, வேறு திட்டம் தீட்டச் சொல்லிவிட்டது. நகராட்சி ஆணையர் பதவி சில மாதங்களாகவே காலியாக இருக்கிறது. நகராட்சியில் அலுவலர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். அதனால்தான் புதிய திட்டம் தயாரிக்க தாமதமாகிறது'' என்றார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனின் கவனத் துக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றோம். ''அந்தப் பகுதிக்கு வருவாய்த் துறையினரை அனுப்பி ஆய்வு செய்யச் சொல்கிறேன். இனிமேலும் அந்தக் குவாரி பள்ளங்களால் உயிரிழப்பு ஏற்படாதவாறு போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதி அளித்தார்.

சீக்கிரம் மேடம்!

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்