மறைந்த பத்திரிகை யாளர் சின்னக் குத்தூசியின் 78-வது பிறந்தநாள் விழா, ஏகப்பட்ட திருப் பங்களுடன் நடந்து முடிந்திருக்கிறது.

சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை சார்பாக, கடந்த ஜூன் 15-ம் தேதி மாலை, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலகக் கட்டடத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே விழா நடத்துவதற்கு தமிழக அரசின் நூலகத் துறையிடம், பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அதன்பின் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஓர் எழுத்துப்பூர்வமான அனுமதியை வாங்க வேண்டும். இந்த நடைமுறைகள் எல்லாவற்றையும் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் மிகச் சரியாகவே பின் பற்றி இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி நாளான ஜூன் 15 அன்று காலை 10.30 மணிக்கு திடீரென, 'நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை’ என்று கைவிரித்தது நூலகத்துறை.

அரசியல் தலைவர்களான ஆர்.நல்லகண்ணு, க.திருநாவுக்கரசு, திருச்சி செல்வேந்திரன் போன்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் இப்படி ஓர் முட்டுக்கட்டை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் வேறு வழியின்றி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை. பிரச்னையின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் கருதி, உயர் நீதிமன்றம் உடனடியாக இந்த விஷயத்தைக் கையிலெடுத்தது.

''சின்னக்குத்தூசி ஒரு சிறந்த பத்திரிகையாளர். பத்திரிகைத் துறைக்காகவே தன்னை அர்ப் பணித்துக்கொண்டு, திருமணம்கூட செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அவரது அறை முழுவதும் நூல்களால் நிறைந்திருக்கும். ஒரு என்சைக்ளோபீடியா என்றே அவரைச் சொல்லலாம். 60 ஆண்டு காலமாக அவர் பத்திரிகைத் துறைக்கு ஆற்றிய சேவை மிக முக்கியமானது. நிறையப் பத்திரிகை யாளர்களை அவர் உருவாக்கி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரின் பிறந்த நாளை அவர் மேல் அன்புகொண்டவர்கள் இணைந்து கொண்டாடுகிறார்கள். அரசு இதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, முட்டுக்கட்டை போடக் கூடாது'' என்று வழக்கு விசாரணையின்போது நீதிபதி சந்துரு தெரிவித்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் தேவநேயப் பாவாணர் அரங்கத்தை சின்னக்குத்தூசியார் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக வழங்க வேண்டும் என்று நீதிபதி சந்துரு மாலை 4.30 மணிக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். உடனே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழி கிடைத்த சந்தோஷத்தில் அரங்கத்துக்குச் சென்றார்கள். ஆனால், அங்கே வேறு ஓர் அதிர்ச்சி. ' வேறு ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது’ என்று சுமார் 20 பேர் வரை அரங்கத்துக்குள் உட்கார வைத்து இருந்தனர். சின்னக்குத்தூசி பிறந்தநாள் விழாவுக்கான பேனரையும் அங்கே கட்ட அனுமதிக்கவில்லை நூலகத்துறை அலுவலர்கள். அவர்களிடம் விழா ஏற்பாட்டாளர்கள் உயர் நீதிமன்ற உத்தரவு பற்றி எடுத்துக்கூறியும், 'எங்களுக்கு உத்தரவு வரவில்லை. அதனால், இங்கே அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

இந்த நேரத்தில் விழாவுக்கான பார்வையாளர்கள் வரிசையாக வரத் தொடங்கினார்கள். கூட்டம் கூடுவதைக் கண்டதும், 5.30 மணி அளவில் வேறு நிகழ்ச்சிக் காக என்று சொல்லி அரங்கத்துக்குள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, அவசர அவசரமாக அரங்கத்தைப் பூட்டிவிட்டுச் சென்றனர் நூலகத் துறையினர்.

இந்தக் களேபரம் எதுவும் தெரியாமல் நல்ல கண்ணு முதலான சிறப்பு அழைப்பாளர்கள் சரியான நேரத்தில் அரங்குக்கு வந்து சேர்ந்தார்கள். அனைவரும் கூடிப்பேசினார்கள். அதன்படி, கட்டடத்துக்குப் பின்புறம் உள்ள கார் ஷெட்டில் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர் விழாக் குழுவினர். அங்கே பேனர் கட்டி, மைக் இல்லாமல் கூட்டம் தொடங்கியது. வெளிச்சம் போதா மல் காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

''உட்காருவதற்கு சேர் இல்லாமல், பேசுவதற்கு மைக் இல்லாமல், வெளிச்சம் இல்லாமல் இருட்டில் நடந்தது விழா. சின்னக்குத்தூசி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர் என்றாலும் பல கட்சிகளிலும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அறக்கட்டளையில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், அரசு அவரை ஒரு தி.மு.க-காரராக நினைத்துத்தான் தடை போட முயற்சி செய்தது'' என்றார் அறக்கட்டளையைச் சேர்ந்தவரும் பத்திரிகையாளருமான கோவி.லெனின்.

சின்னக்குத்தூசியைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று அன்றைய தினம் காலையில் தனியார் தொலைக்காட்சியில் காட்டப்பட்டதாகவும் அதில் ஜெயலலிதாவை விமர்சித்து அவர் பேசி உள்ளார் என்றும் அதனால்தான் இந்த குடைச்சலை அரசாங்கம் செய்தது என்றும் சொல்லப்படுகிறது.

சின்னக்குத்தூசி உயிருடன் இருந்தவரை, எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அவரைச் சந்திக்கலாம். அந்த அளவுக்கு எளிமை யானவர். அப்படிப்பட்ட எளிய மனிதருக்கு விழா நடத்துவதைக் கண்டு அரசு அஞ்சுவது ஏனோ?

- கவின் மலர், படங்கள்: ஆ.முத்துக்குமார்