'தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவிக்கும் கோடியக்கரை சரணாலய விலங்குகளைக் காப்பாற்றுங்கள்’ - வேதனைக்குரல் ஒன்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) வந்தது. வேதாரண்யம் விரைந்தோம்.

டெல்டா பகுதியில் வங்கக் கடலோரத்தில் பரந்து விரிந்து அமைந்து இருக்கிறது கோடியக்கரை சரணாலயம். உலர் பசுமைமாறா காடான இந்தச் சரணாலயத்தில் மிகஅரிய வெளிமான்களும் புள்ளிமான்களும் இருக்கின்றன. இவைதவிர, காட்டுக் குதிரைகள், நரிகள், காட்டு மாடு, குரங்குகள், காட்டுப் பன்றிகள், புனுகுப் பூனைகள் போன்ற பல்வேறு உயிரினங் களும் கலந்துகட்டி வசிக்கின்றன. காட்டுக்குள் இருக்கும் நீர்க் குட்டைகள் வறண்டுபோகவே, கடும் சிக்கலில் தவிக் கின்றன வனஉயிரினங்கள்.

வேதாரண்யத்தைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலரான மாணிக்கவாசகம், ''இயற்கையை ஒட்டி அதன்போக்கில் வாழ்ந்து வருபவை இங்குள்ள விலங்குகள். எப்போதும் மழைக்காலங்களில் பெய்யும் மழை, காட்டின் உள்ளே உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளில் நிறைந்து... அடுத்த மழைக்காலம் வரையிலும் தண்ணீர் போதுமானதாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மழை குறைவாகப் பெய்த காரணத்தால், குட்டைகள் மற்றும் குளங்களில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பவில்லை. கோடை மழையும் இல்லாமல்போனதால், தண்ணீர் முற்றிலும் வற்றிப்போய் விட்டது. அதனால் புல், பூண்டுகள் கூட வெப்பம் தாங்காமல் கருகி விட்டன. அதனால், போதுமான உணவும், தாகம் தீர்க்கத் தண்ணீரும் இல்லாமல் அனைத்து மிருகங்களும் தவிக்கின்றன. அந்த வாயில்லா ஜீவன்களுக்கு அரசு உடனடித் தீர்வு ஏற்படுத்தித் தரவேண்டும்'' என்றார்.

சுற்றுலாப் பயணியான சிவகுமார், ''காட்டுக்குதிரைகள் தண்ணீர் இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் அலைகின்றன. நரி தோண்டிய பள்ளத்தில்கூட, தலையை விட்டுத் தண்ணீர் தேடுகின்றன குதிரைகள். வெளிமான்கள் தண்ணீர் தேடி ஏரியாவைத் தாண்டி போய்விட்டால், அப்புறம் அவற்றை உயிரோடு

பார்க்க முடியாது. ஏனென்றால் மான்கறிக்கு அலையும் கூட்டம், எப்போது மான் வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். அதனால், விலங்குகளுக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் போர்க் கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்கிறார்.

இப்போது வனத்துறையினர், தினமும் இரண்டு டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று காட்டில் உள்ள தொட்டிகளில் நிரப்புகின்றனர். ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை என்பதே உண்மை. ''இந்த அளவுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக் காரணம்... காட்டில் உள்ள கருவேல மரங்கள்தான். காடு முழுவதும் அதிக அளவில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்கள், நிலத்தடி நீரை முழுவதுமாகக் உறிஞ்சி விடுகின்றன. காட்டைச் சுற்றி இருக்கும் மக்களும் மேய்ச்சலுக்காக தங்கள் மாடுகளை காட்டுக்குள் விடுகின்றனர். அவைகளும் தண்ணீரை காலி செய்து விடுவதால் வனவிலங்குகளுக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை'' என்று வருத்தப்படுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

''இப்போதும் காட்டுக்குள் நான்கு குட்டைகளில் தண்ணீர் இருக்கிறது. ஆனால், அவை எல்லாமே உப்பு நீர்க் குட்டைகளாக மாறிவிட்டன. அதனால் விலங்குகளால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் உப்பளங்கள்தான். அந்த உப்பளங்கள் காரணமாக, கடல்நீர் நிலத்தடிக்கு வந்து விடுகிறது.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அதாவது முள்ளியாறு, அரிச்சந்திரா ஆறு உளிட்ட ஏழு ஆறுகள் வேதாரண்யம் - கோடியக்கரை பகுதியில்தான் கடலில் கலக்கின்றன. மழைக் காலங்களில் வெள்ளநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அந்த வெள்ள நீரைத் தடுப்பணைகள் மூலம் சேமித்து வைத்தாலே இங்கு நிலத்தடி நீர் உப்பாக மாறுவதைத் தடுக்க முடியும்'' என்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட வனக்காப்பாளர் செந்தூர்பாண்டியனிடம் பேசினோம். ''விலங்குகளுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பது உண்மைதான். விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம். வெளிஆட்களின் மேய்ச்சல் மாடுகளை காட்டைவிட்டு வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடல்நீரை நல்ல நீராக மாற்றி சரணாலயத்துக்குக் கொண்டு வருவதற்காக திட்டம் ஒன்றைத் தீட்டி அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அதற்கு அனுமதி கிடைத்து விட்டால், காட்டுக்குள் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாது. அதுவரை, தேவையான அளவு தண்ணீர் காட்டுக்குள் உள்ள குட்டைகளில் நிரப்பப்பட்டு விலங்குகளின் தாகம் நிச்சயம் தீர்க்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.

தற்காலிகத் தீர்வு அவசரம் என்றாலும் தடுப்பணைகள் கட்டியும் சீமைகருவேல மரங்களை அகற்றியும் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்!

- கரு.முத்து