'எங்கள் பகுதிக்குப் பாலம் வேண்டும் என்று நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் போராடிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் விடிவுதான் இல்லை!’ - இப்படி ஒரு வேதனைக் குரல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதிவாகி இருக் கவே... குரல் வந்த திசை நோக்கிப் புறப்பட்டோம்.

கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஊர்கள், சீதப்பட்டி மற்றும் அய்யம்பாளையம். இந்த ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதி மிகவும் தாழ்வாக இருக்கிறது. எனவே மழைக் காலங்களில் நீர் தேங்கி, ஆறுபோல் காட்சி அளிக்கும். மக்கள் டவுனுக்கு வரவேண்டும் என்றால் தண்ணீரில் மிதந்து தான் வரவேண்டும்.

சீதப்பட்டி முன்னாள் கவுன்சிலர் மணவாளன் நம்மிடம், ''கரூருக்கு கூலி வேலைக்குப் போறவங்க தொடங்கி பக்கத்து ஊர் ஸ்கூலுக்குப் போற குழந்தைகள் வரைக்கும் சீதப்பட்டி டு அய்யம்பாளையம் பாதையைத்தான் பயன்படுத்துறோம். மழைக் காலத்துல ரொம்பவும் சிரமமா இருக்குதுங்க. அதனாலதான் இந்த வழித்தடத்துல பள்ளமான பகுதியைக் கடந்துபோற வகையில், ஒரு பாலம் கேட்கிறோம். சுதந்திரம் வாங்கின சமயத்தில் இருந்தே எங்க ஊர்த் தலைவர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வெச்சுக்கிட்டே இருக்கோம். ஆனாலும் யாரும் கண்டுக்கவே இல்லை.

ஒவ்வொரு முறையும், ஓட்டு கேட்க வர்ற வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதியில், இந்தப் பாலம் கண்டிப்பா இருக்கும். ஆனா, ஜெயிச்ச பிறகு யாரும் இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட் டாங்க.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கேட்டா, 'இது பஞ்சாயத் துக்குச் சொந்தமான பாதை’னு சொல்றாங்க. பஞ்சாயத்து அதிகாரிகளோ, 'இது பஞ்சாயத்துக்குள்ள வரலை. அதனால நபார்டுல நிதி உதவி கேட்க முடியாது’னு சொல்றாங்க. எதுலேயும் சேராதுன்னா எங்க ஊர் என்ன இலங்கையிலேயா இருக்குது?

இந்த ரோட்டுக்காக கரூர், கலெக்டர் அலுவலகத்தில் 30 தடவைக்கும் மேல மனு கொடுத்திருக்கிறோம். நிறைய தடவை சாலை மறியல், கடை அடைப்புன்னு எல்லாப் போராட்டங்களையும் நடத்திப் பார்த் துட்டோம். நாடாளுமன்றத் தேர்தலை இரண்டு முறையும், சட்டமன்றத் தேர்தலை மூன்று முறையும் புறக்கணிச்சு இருக்கோம். ஒரு முறை அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு போட்டு, எங்க கோரிக்கையை நிறைவேத்துறதா உறுதிமொழி கொடுத்தாங்க. இடத்தை அளந்து 50 லட்ச ரூபாய்க்கு மேல செலவாகும்னு திட்ட மதிப்பீடும் போட்டாங்க. அதுக்கு அப்புறம் அதுபத்தி பேச்சையும் காணோம், மூச்சையும் காணோம்.

அரசு அதிகாரிகள்கிட்ட கேட்டா 'உங்களுக் கெல்லாம் பாலம் ஒரு கேடா?’னு கேவலமாத் திட்டி அனுப்புறாங்க. கலெக்டரும் கண்டுக்க மாட்டேங் குறார். எம்.எல்.ஏ. காமராஜ் ஓட்டு கேட்டு வரும்போது, 'நான் ஜெயிச்சு ஆறு மாசத்துல உங்க ஊருக்கு வரும்போது என் கார் பாலத்துலதான் வரும்’னு டயலாக் விட்டார். ஆனா, எந்த ரெஸ்பான்ஸும் இல்லே.

மழைக் காலங்கள்ல ஆறுபோல தேங்கி இருக்குற தண்ணியை ராத்திரி கடக்கும்போது, உயிரைக் கையில பிடிச்சுட்டுத்தான் வரணும். பாம்பு கடி, தேள்கடி எல்லாம் சர்வ சாதாரணம். இனிமே மழை வரப்போகுது. இப்பகூட எங்க ஊருக்கு பாலம் வரலைன்னா, எப்போதான் வருமோ?'' என்றார் வேதனையுடன்.

இந்தத் தொகுதியில் இருக்கும் வெள்ளியணை கிராம மக்களும் பாலம் வேண்டி 10 வருடங்களாகப் போராடி வருகிறார்கள். அந்த ஊர்த் தலைவர் முத்துச்சாமி நம்மிடம், ''எங்க ஊர் பழைய பாலம் இடிஞ்சு, 10 வருடங்களுக்கு மேல ஆகிப்போச்சு. புதுப் பாலம் கட்டித்தரச் சொல்லி இத்தனை வருஷமாப் போராடியும் பலன் இல்லை. திண்டுக்கல், மணப்பாறை போறதுக்கு இந்த இடம்தான் குறுக்கு வழி. ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானவங்க பயன்படுத்துற வழி. ஆனா, பாலம் இல்லாததால 10 கிலோ மீட்டர் சுத்திப்போக வேண்டி இருக்கு. இதுக்காக கடைகளை அடைச்சுட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். அதிகாரிங்க வந்து சமாதானம் செஞ்சதோட சரி... அப்புறம் இந்தப் பக்கமே யாரும் வரலே. இப்படி நாங்க போராடிக்கிட்டே இருந்தா, பொழப்பை யாருங்க பாக்குறது'' என்று ஆதங்கப்பட்டார்.

எம்.எல்.ஏ. காமராஜிடம் பேசினோம். ''என் எம்.எல்.ஏ. நிதியில் என் தொகுதிக்கு ஏராளமான பணிகள் செஞ்சு இருக்கேன். இந்தப் பாலங்கள் கோரிக்கைகளையும் முதல்வர் அம்மா கவனத்துக்குக் கொண்டுபோய், கூடிய விரைவில் இரண்டு பாலங் களையும் கட்டி முடிப்பேன்'' என்றார்.

கலெக்டர் ஷோபனா விடுமுறையில் இருந்ததால், டி.ஆர்.ஓ. கிறிஸ்துராஜிடம் பேசினோம். ''வெள்ளியணை பாலத்துக்கு எல்லா நடைமுறைகளும் முடிஞ்சு, ஃபைல் மேலே போயிடுச்சு. 97 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீடு வந்திருக்கு. பணம் சாங்ஷன் ஆகும் நிலையிலதான் இருக்கு. கூடிய விரைவில் வேலையை ஆரம்பிச்சிடுவோம். சீதப்பட்டி டு அய்யம்பாளையம் பாலமும் விரைவில் கட்டப்படும்'' என்றார்.

அதுதான் எப்போ..?

- ஞா.அண்ணாமலை ராஜா